இந்தியாவை விட்டு வெளியேறுகிறார் விராட் கோலி!

Virat kohli And Anushka Sharma
Virat kohli And Anushka Sharma
Published on

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி விரைவில் இந்தியாவை விட்டு வெளியேறி, லண்டனில் குடியேற உள்ளதாகவும், கிரிக்கெட்டினை தவிர்த்து தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட உள்ளதாகவும் அவரது சிறுவயது பயற்சியாளர் ராஜ்குமார் சர்மா கூறியுள்ளது பேசுபொருளாகி உள்ளது. இதன் மூலம் இதுவரை வதந்திகளாக இருந்த அந்த தகவல் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விராட் கோலி லண்டனுக்கு குடியேற போவதாக வந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி இடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி. இந்திய அணிக்கு பல முக்கியமான போட்டிகளில் விராட் கோலி சிறப்பாக விளையாடி வெற்றியை தேடி தந்துள்ளார். இவர் ஐபிஎல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளின் முன்னாள் தலைவருமாவார். மேலும் 50 ஐபிஎல் அரைசதங்கள் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார். உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருடன் விராட் கோலி சர்வேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார்.

தற்போது ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விராட் கோலி விளையாடி வருகிறார். அதனால் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் அவர் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2013 முதல் 2022 வரை மூன்று வடிவங்களில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.

விராட் கோலி இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 9,166 ரன்களும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 13,906 ரன்களும் எடுத்துள்ளார். சச்சின் தொண்டுல்கருக்கு பிறகு அதிகளவில் கொண்டாடப்பட்டவர்களில் விராட் கோலியும் ஒருவராவார். இந்திய அணியில் நட்சத்திர கிரிக்கெட் வீரராக வலம் வருபவர், விராட் கோலி. பல சாதனைகளை படைத்திருக்கும் இவர், தன் உடலை ஃபிட் ஆக வைத்திருக்கும் விளையாட்டு வீரராகவும் இருக்கிறார். விராட் கோலிக்கு வாமிகா என்ற பெண் குழந்தையும், அகாய் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் அவர் ஓய்வுக்கு பின்னர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் லண்டனில் குடியேற திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. சமீப காலகட்டத்தில் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் நிறைய நாட்களை லண்டனில் செலவிடுகின்றனர். மேலும் விராட் மற்றும் அனுஷ்கா லண்டனில் சொத்து வைத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
இந்த மாத்திரையை கவனமாகப் பயன்படுத்துவது அவசியம் - புதிய ஆய்வு எச்சரிக்கை!
Virat kohli And Anushka Sharma

இவர்களின் 2-வது மகன் அகாயின் லண்டனில் பிறந்ததிலிருந்து அங்கு அவர்கள் நிறைய நேரத்தை செலவிடுகிறார்கள். அவர்கள் இருவரும் லண்டனை சுற்றி வரும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டன. இதை வைத்து அவர்கள் இருவரும் லண்டனில் குடியேறுவார்கள் என்றும் சொல்லப்பட்டது. இதுவரை வதந்திகளாக இருந்த அந்த தகவல் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, ''கோலி தனது பெரும்பாலான நேரத்தை கிரிக்கெட்டைத் தவிர்த்து தனது குடும்பத்தினருடன் செலவிடுகிறார்" என்று ஷர்மா டைனிக் ஜாக்ரானிடம் கூறினார்.

இதையும் படியுங்கள்:
பெருமாளுக்கு முஸ்தா சூரணம் நைவேத்தியம் செய்யப்படும் திருத்தலம்!
Virat kohli And Anushka Sharma

இந்த ஆண்டின் தொடக்கத்தில், கோலி ஓய்வு விஷயத்தைப் பற்றிப் பேசினார். "நான் விரைவில் போய்விடுவேன், மக்கள் என்னை சிறிது காலம் பார்க்கப் போவதில்லை," என்று கோலி RCB உடனான அரட்டையில் கூறினார். மேலும், "நான் விளையாடும் வரை என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுக்க விரும்புகிறேன், அவ்வளவுதான்." என்றும் அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com