மக்களே உஷார்..! திருமண அழைப்பிதழ் பெயரில் அரங்கேறும் புதிய 'Cyber Trap'..!

Cyber Attack
Cyber Attack
Published on

திருமணம், விழாக்கள் என்றால் நேரில் சென்று அழைப்பதுதான் மதிப்பு என்று இருந்த நிலை மாறி சொந்த பந்தங்கள் வெளியூரில் வசிக்கும் நிலை மற்றும் பெருகிவிட்ட மொபைல் வசதிகளினால் இன்று வாட்ஸ்அப் மூலம் அழைப்பது சாதாரணமாகிவிட்டது. ஆனால், இதையே ஒரு ஆயுதமாக மாற்றி "சைபர் க்ரைம்" மோசடிகள் அரங்கேறி வருவது அதிர்ச்சியளிக்கிறது.

சைபர் க்ரைம் மோசடிகளில் “வாட்ஸ்அப் திருமண அழைப்பிதழ்” பெயரில் நடக்கும் மோசடி இப்போது அதிகமாகப் பரவி வருகிறது.

மோசடி அரங்கேறும் விதம் இதுதான்..

  • அறிமுகமில்லா எண்ணிலிருந்து உங்களுக்கு வாட்ஸ்அப் மெசேஜ்

  • “எங்கள் மகன்/மகளின் திருமண அழைப்பிதழ்”

  • “Please open the invitation”

  • PDF / APK / Link இணைக்கப்பட்டிருக்கும்

  • அந்த லிங்க் அல்லது File-ஐ திறந்தால்

  • உங்கள் மொபைலில் Spyware / Malware இன்ஸ்டால் ஆகும்.

  • வாட்ஸ்அப், SMS, Contact, Gallery, Bank OTP வரை ஹேக்கர்களுக்கு போகும்.

அதன் பின் என்ன நடக்கும் தெரியுமா?

உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படும். உங்கள் வாட்ஸ்அப் மூலம் மற்றவர்களுக்கு மோசடி மெசேஜ் அனுப்பப்படும். UPI / Net banking முழுவதும் ஆபத்தில் சிக்கும்.

அறிமுகமில்லாத நம்பர், “APK file”, “Install to view invitation” , அவசரம் காட்டும் மெசேஜ் திருமண விவரம் தெளிவாக இல்லாமல் generic text போன்ற அறிகுறிகளை வைத்து மோசடியை அடையாளம் காணலாம்.

இதைத் தடுக்கும் பாதுகாப்பு வழிமுறைகளும் உண்டு..

  • அறிமுகமில்லாத நபர் அனுப்பும் Link / File-ஐ ஒருபோதும் திறக்க வேண்டாம்.

  • APK file என்றால் 100% மோசடி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

  • Play Store தவிர வேறு இடத்திலிருந்து App install செய்யாதீர்கள் .

  • வாட்ஸ்அப்பில் 2-Step Verification ON செய்யுங்கள். (Mobile-ல் Antivirus / Play Protect ON)

ஆனால் தெரியாமல் ஏற்கனவே கிளிக் செய்துவிட்டீர்களா?

உடனே செய்யவேண்டியவைகள் Mobile-ஐ Airplane Mode-க்கு மாற்றவும், சந்தேகமான App-ஐ Uninstall செய்து விடுங்கள். உங்கள் Bank, UPI, Email, WhatsApp Password ஆகியவற்றை தாமதிக்காமல் மாற்றவும்

Bank Helpline / Cyber Crime-க்கு புகார் தரவும். இந்திய அரசு தளமான cybercrime.gov.in -லும் புகார் அளிக்கலாம்.

ஒரு பக்கம் கையிலேயே உலகத்தை காணும் விஞ்ஞான முன்னேற்றம் மகிழ்ச்சி தந்தாலும் அவசரம் மற்றும் உணர்வு ரீதியான மோசடியாக மகிழ்ச்சியை தரவேண்டிய திருமண அழைப்பிதழ் இப்போது Cyber Trap ஆகி வருத்தம் தருவது கண்டு எதை தான் நம்புவதோ என்ற அச்சம் வருகிறது.

இதையும் படியுங்கள்:
மைலேஜ் கவலைக்கு குட்பை: வந்தாச்சு டபுள் மைலேஜ் தரும் பெட்ரோல்.!
Cyber Attack

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com