விஜய் தலைக்கு மேல் தொங்கும் கத்தி... இடைத்தேர்தலில் தவெக தோற்றால் என்ன நடக்கும்?

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல், தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
vijay, eps, mk stalin
vijay, eps, mk stalinAI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல், தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை இத்தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியைச் சந்திக்கும் பட்சத்தில் தவெக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி ஆட்சிக்கும், முதலமைச்சர் விஜய்க்கும் என்னென்ன அரசியல் சிக்கல்கள் எழும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க..

அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் சத்தியபாமா (தாராபுரம்) ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் இத்தொகுதிகள் காலியானதைதொடர்ந்து வரும் 6-ம்தேதி இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் ஐ. பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில் கோ. ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதேபோல் தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் எஸ். சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாதக சார்பில் மு. கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் ஆகியோர் களத்திலுள்ளனர்.

இதற்கிடையே தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் அதே வேளையில், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளும் தனித்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தாங்கள் எந்த கூட்டணியிலும் தற்போது இல்லை என்பதால் தனித்துப் போட்டியிடுவதாக இரு கட்சிகளின் தலைவர்களும் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த இரு தொகுதிகளிலும் கடுமையான 5 முனைப் போட்டி உருவாகியுள்ளது.

பொதுவாக இடைத்தேர்தல்கள் (இடைத்தேர்தல் தவெக) ஆளுங்கட்சிக்கே சாதகமாக அமையும் என்பது தேர்தல் அரசியலில் ஒரு பொதுவான உண்மையாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், தற்போதைய ஆளுங்கட்சி மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி இருந்தாலோ அல்லது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டாலோ இந்த வழக்கமான போக்கு தலைகீழாக மாறவும் வாய்ப்பு உண்டு.

இந்த இடைத்தேர்தலில் தவெகவை வீழ்த்தத் தீவிரமாகச் செயல்படும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும், அதிரடி வியூகங்களை அமைத்துக் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளன.

முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு மற்றும் பிம்பத்தை மட்டுமே முதன்மையாக நம்பி தவெக இந்த தேர்தலை சந்திக்கிறது. எனவே, வாக்குகள் எந்தளவுக்குக் கிடைக்கின்றன என்பது அவரது அரசியல் செல்வாக்கிற்கான நேரடி அளவுகோலாக மாறும். பிற கட்சிகளில் இருந்து, குறிப்பாக அதிமுகவில் இருந்து விலகி இணைந்த பழைய முகங்களையே மீண்டும் வேட்பாளர்களாகக் களம் இறக்குவது வாக்காளர்களிடையே எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இடைத்தேர்தல் தவெக
இடைத்தேர்தல் தவெகimage credit-newsclick.in

இது புதிய அரசியல் மாற்றத்தை விரும்புபவர்களிடம் கூடுதல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே இந்த இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலும் முதலமைச்சர் விஜய்க்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதுடன் கூட்டணிக் கட்சிகளின் அழுத்தமும் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஒருவேளை, இடைத்தேர்தலில் தவெக இரு தொகுதிகளிலும் தோல்வியடைந்தால் அது பல்வேறு சிக்கல்களை அரசியல் ரீதியாக சந்திக்க நேரிடும் என்றாலும் ஒட்டுமொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் (MLAs) எண்ணிக்கையில் பெரும்பான்மைக்குத் தேவையான பலம் இருக்கும் வரை ஆட்சிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது.

ஆனால் எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுகவும் ஆளும்கட்சியின் இந்தத் தோல்வியைக் காரணமாக வைத்து, மக்களிடம் ஆட்சிக்கு இருந்த வரவேற்பு குறைந்துவிட்டது என்றும், ஆட்சி மீது மக்களுக்குத் அதிருப்தி நிலவுகிறது என்றும் அரசியல் ரீதியான விமர்சனங்களை முன்வைத்து போராட்டங்களையும், விமர்சனங்களையும் தீவிரப்படுத்தும்.

அதோடு, எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்குத் துரோகம் செய்துவிட்டு எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றார் என்ற காரணத்தைக் கூறித்தான் அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர்.

இதையும் படியுங்கள்:
சூடு பிடிக்கும் இடைத்தேர்தல் : கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை!
vijay, eps, mk stalin

அவர்கள் தோற்கும் பட்சத்தில், ‘அதிமுகவை உடைக்க விஜய் போட்ட திட்டத்தை தொண்டர்களும் பொதுமக்களும் முறியடித்துவிட்டார்கள்’ என்று கூறி, தவெகவின் தோல்வியை தங்கள் கட்சியின் வலிமையாக அவர்கள் சித்தரிப்பார்கள். இது அரசியல் ரீதியாக விஜய்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம்.

மறுபுறம் தவெகவுக்குச் சட்டமன்றத்தில் 107 எம்எல்ஏக்கள் பலம் உள்ள நிலையில், இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெறும்பட்சத்தில், இதன் தனிப்பட்ட பலம் 109 ஆக உயர்வதுடன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி எவ்விதச் சிக்கலுமின்றித் தொடர முடியும். மேலும் பல அதிமுக எம்எல்ஏக்கள் கட்சி தாவி, தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்யக்கூடும்.

இடைத்தேர்தல் முடிவுகள் மக்களின் தற்போதைய மனநிலையைக் காட்டும் எச்சரிக்கை மணி என்பதால், முதலமைச்சர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதிகளையும் மக்கள் நலத்திட்டங்களையும் விரைவுபடுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார். அதேபோல், சட்டமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றும் போது எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைச் சமாளிக்க அரசும், கூட்டணிக் கட்சிகளும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கும்.

இதையும் படியுங்கள்:
தாராபுரம் இடைத்தேர்தல்: அக்டோபர் 2ம் தேதி மு.க. ஸ்டாலின் ரோடு ஷோ...!
vijay, eps, mk stalin

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இது தவெகவிற்கு ஒரு சாதாரணத் தேர்தல் அல்லாமல், தங்களின் அரசியல் அங்கீகாரத்தை நிரூபிக்க வேண்டிய ஒரு கௌரவப் போராட்டமாகவே உருவெடுத்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com