உலகளவில் கோடிக்கணக்கான பயனாளர்களை தன்வசம் வைத்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களும், இந்தியாவில் மட்டும் 50 கோடிக்கும் மேற்பட்டவர்களும் பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப் தனி சாம்ராஜ்ஜியமே நடத்தி வருகிறது என்றே சொல்லலாம்.
வாட்ஸ்அப் சமூக வலைதள செயலி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது. வாட்ஸ் அப்பிற்கு போட்டியாக எத்தனையோ செயலிகள் வந்தாலும் எதுவும் நிலைத்து நிற்காமல் பயனாளர்களை கவர்ந்த செயலியாக இன்றுவரை வாட்ஸ்அப் மட்டும் தனித்து நிற்கிறது.
தற்போதுள்ள காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக உள்ள வாட்ஸ்அப், தொடக்கத்தில் குறுஞ்செய்திகளை அனுப்பும் செயலியாக மட்டுமே அறிமுகமானது. அதன்பிறகு 2014-ம் ஆண்டு வாட்ஸ்அப், மெட்டா நிறுவனத்தின் கைக்கு போன பிறகு அதில் புது புது அப்டேட்கள் வெளியாக தொடங்கியது.
அந்த வகையில் வாட்ஸ்அப்பில் வரும் டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ, வீடியோ காலில் பேசும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பயன்படுத்தி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமீப காலமாக அரட்டை போன்ற புதுப்புது செயலிகள் வந்துள்ள நிலையில், வாட்ஸ்அப் தனது பயனாளர்களை இழக்காமல் இருக்கவும், தனது வாடிக்கையாளர்களுக்கு திருப்தியை வழங்கும் விதமாகவும் அவ்வப்போது புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அடுத்தடுத்து பல புதிய அம்சங்களைக் கொண்டுவரவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப்பில் புதிய அட்டேட்டை கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் வெகு விரைவில் இந்த புதிய அப்டேட் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பயனர்கள், வாட்ஸ்அப்பில் போட்டோக்கள், வீடியோக்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும். வாட்ஸ்அப்பில் நிறைய ஸ்டேட்டஸ் வரும் போது சில சமயம் தனது நண்பர்கள் மற்றும் விரும்பமானவர்கள் வைக்கும் ஸ்டேட்டஸ்களை பார்க்காமல் மறந்து விடுவார்கள். அதிகமாக ஸ்டேட்டஸ் வரும் போது, நாம் யாருடைய ஸ்டேட்டஸையாவது பார்க்க நினைத்தால், அவர்களின் ஸ்டேட்டஸ்களை சில நேரம் இதனால் பார்க்க முடியாமல் போய்விடும். அவர்களின் கவலையை போக்கத்தான் தற்போது புதிய அட்டேட் வரவுள்ளது.
இதன்படி, நமக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஸ்டேட்டஸ் வைத்தால் நோட்டிபிகேஷன் வரும் விதமாக செட்டிங்ஸில் ஆன் செய்து வைத்தால் அவர்கள் ஸ்டேட்டஸ் வைத்தால் உடனே நமக்கு நோட்டிபிகேஷன் வந்துவிடும். இதன் மூலம், அவர்களின் ஸ்டேடஸ்களை மிஸ் செய்யாமல் பார்க்க முடியும்.
வாட்ஸ் அப்பை பொறுத்தவரை அனைத்து ஸ்டேட்டஸ்களையும் பலர் பார்க்க விரும்புவது இல்லை. வேண்டிய நபர்களின் ஸ்டேட்டஸ்களை மட்டுமே பார்க்க நினைக்கும் பயனர்களுக்கும், விரும்பமானவர்களின் ஸ்டேட்டஸை மிஸ் பண்ணக்கூடாது என்று நினைப்பவர்களுக்கும் வாட்ஸ்அப் கொண்டு வரும் இந்த புதிய அப்டேட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.
வாட்ஸ்அப் கொண்டு வரும் இந்த புதிய அப்டேட் நிச்சயமாக அனைவரையும் கவரும் என்றே சொல்லலாம்.