Whatsapp-க்கு ஆப்பு வைத்த மத்திய அரசு! திடீர் தடையால் அதிர்ச்சி..!

மொபைல் எண் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாதா? அரசின் திடீர் உத்தரவின் பின்னணி என்ன?
வாட்ஸ்அப் யூசர்நேம்
Whatsapp Username
Updated on

உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலியை கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் விதமாக வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகளை கொண்டு வருகிறது. இதில் தற்போது மிகவும் முக்கியமானதொரு அப்டேட் தான் யூசர்நேம் மூலம் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவது.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வாட்ஸ்அப்பில் இனி மொபைல எண்ணை உள்ளிட வேண்டாம்; யூசர்நேம் மட்டுமே போதும் என்ற தகவல் தான் அதிகளவில் பேசுபொருளானது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருப்பது போலவே யூசர்நேம் மூலம் இனி வாட்ஸ்அப்பையும் பயன்படுத்தலாம் என மெட்ட நிறுவனம் அறிவித்தது.

இதன்படி இந்த புதிய வசதி இந்த வாரத்தில் இருந்தே அறிமுகமாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென யூசர்நேம் அடிப்படையில் வாட்ஸ்அப்பை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.

ஜூன் மாதத்திற்குள் வாட்ஸ்அப்பை மொபைல் எண் இல்லாமல் பயன்படுத்த முடியும் என கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை மற்றவர்கள் பார்க்கும் போது, இனி மொபைல் எண் தெரியாது. அதற்குப் பதிலாக பயனர் பெயர் மட்டுமே தெரியும். இதனால் தனியுரிமை பாதுகாப்பு வசதி அதிகப்படுவதால், தேவையற்ற மோசடி குறுஞ்செய்திகளை தவிர்க்க முடியும் என மெட்டா நிறுவனம் தெரிவித்தது.

வாட்ஸ்அப்பில் புதிய நபர் ஒருவருக்கு மெசேஜ் அனுப்ப நினைத்தால், அவருடைய மொபைல் எண்ணைப் பதிவு செய்த பிறகே அனுப்ப முடியும். ஆனால் இந்த புதிய வசதியால் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் டெலிகிராம் போலவே ஒரு தனித்துவமான @username மூலம் ஒருவரைத் தேடிப்பிடித்து மெசேஜ் அனுப்பி விடலாம்.

யூசர்நேம் வசதியின் மூலம் அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்கள் மொபைல் எண்ணை பகிர வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் இந்த வசதி சைபர் குற்றவாளிகளைக் கண்டறிவதில் சிக்கலை ஏற்படுத்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இந்தியாவில் வாட்ஸ்அப் யூசர்நேம் வசதியை அறிமுகப்படுத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த வசதி குறித்த முழுமையான விளக்கத்தை மெட்டா நிறுவனம் 3 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் யூசர்நேம்
WhatsApp
இதையும் படியுங்கள்:
ஆதார் பயனர்களுக்கு குட் நியூஸ்: இனி 6 மாதத்திற்கு கட்டணமே கிடையாது!
வாட்ஸ்அப் யூசர்நேம்

மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப மெட்ட நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. மெட்டா நிறுவனம் அளித்த விளக்கத்தில், “வாட்ஸ்அப்பில் யூசர்நேம் வசதியை வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக பயன்படுத்த பல அடுக்கு பாதுகாப்பை உருவாக்கியுள்ளோம். ஆள் மாறாட்டத்தைத் தடுக்க முக்கிய பிரமுகர்கள், அரசு அமைப்புகள் மற்றும் சரிபார்க்கப்பட்ட மெட்டா கணக்குகளை பாதுகாப்பாக வைத்துள்ளோம்” என விளக்கம் அளித்துள்ளது மெட்டா.

வாட்ஸ்அப்பில் மொபைல் எண் இல்லாத பட்சத்தில், சைபர் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிப்பதில் சைபர் கிரைம் துறைக்கு சிக்கல் ஏற்படும். இதனால் சைபர் குற்றங்களும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. ஆகையால் வாட்ஸ்அப் யூசர்நேம் வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த திடீர் உத்தரவால், வாட்ஸ்அப் யூசர்நேம் வசதி இந்தியாவில் அறிமுகமாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளத

இதையும் படியுங்கள்:
நீங்கள் வாங்கும் மருந்து ஒரிஜினலா? இனி QR கோடை ஸ்கேன் செய்தால் போதும்..!!
வாட்ஸ்அப் யூசர்நேம்
logo
Kalki Online
kalkionline.com