

2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக, முந்தைய அதிமுக-வின் திட்டங்களை ரத்து செய்தது ஏன் என்று தெரியவில்லை. தாலிக்கு தங்கம், இருசக்கர வாகன திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை ரத்து செய்தது திமுக.
ஆனால் நாங்கள் பெயரை மாற்றியதற்கே திமுக விமர்சனங்களை முன்வைத்தது. ஆனால் அவர்களின் 5 ஆண்டு கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் கலாச்சாரம் அதிகரித்தது உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
குறிப்பாக 1960-ல் மது விலக்கு கொண்ட வரப்பட்டது. அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் மதுவைக் கொண்டு வந்து மக்களை சீரழித்தது யாரு.? ஆற்று மணலை சுரண்டி மக்களை சீரழித்தது யாரு.? எல்லா கேள்விக்கும் ஒரே பதில் திமுக.
தமிழ்நாட்டில் போதை கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்ட வர தவெக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. விரைவில் எங்களுடைய இலக்கை அடைவோம் என முதல்வர் விஜய் தெரிவித்தார்.
திமுக செய்த எல்லா தவறையும் தமிழ்நாட்டு மக்கள் மறந்து விட்டதாக திமுக நினைக்கிறது. ஆனால் அதற்கான தண்டனையைத் தான் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் வழங்கியுள்ளனர்.
கடலூர், விருதுநகர், சென்னை விருகம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திமுக நிர்வாகிகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தாமதமான நடவடிக்கையே எடுக்கப்பட்டது. கடந்த திமுக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை.
திமுக ஆட்சியில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் செய்த குற்றங்களுக்கு தாமதமான நடவடிக்கை தான் எடுக்கப்பட்டது. அதுவும் கண்துடைப்பாகவே இருந்தது. ஆனால் தவெக ஆட்சியில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் தவறு செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.