இந்திய பொருளாதாரத்தில் நல்ல மாற்றம்: ஜூலை மாத மொத்த விலை பணவீக்கம் 9.78 சதவீதமாக சரிவு..!

இந்தியாவின் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் (WPI) கடந்த ஜூலை மாதத்தில் 9.78 சதவீதமாக சற்று குறைந்துள்ளது என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
wholesale inflation
wholesale inflationAI Image
Updated on

எரிபொருள், மின்சாரம் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்ததன் காரணமாக, மொத்த விலைப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 9.87 சதவீதமாக இருந்த நிலையில், ஜூலை மாதத்தில் 9.78 சதவீதமாகச் சிறிதளவு குறைந்துள்ளது.

மேற்கு ஆசியப் போர் மற்றும் அதன் விளைவாக இந்தியாவுக்குப் பெரும்பாலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் விதிக்கப்பட்ட முற்றுகை ஆகியவற்றால், உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் உரங்களின் விலை உயர்ந்து, அது உணவுப் பொருட்களின் விலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியதால், இந்த நிதியாண்டின் தொடக்கத்திலிருந்து மொத்த விலைக் குறியீடு (WPI) ஒரு ஏற்றப் பாதையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் மொத்த விற்பனை விலை குறியீடு (WPI) தொடர்பான தரவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி ஜூலை மாதத்தில் மொத்த விற்பனை விலைவாசி (மொத்த பணவீக்கம் ) உயர்வு விகிதம் குறைந்துள்ளது.

மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த விற்பனை விலைவாசி உயர்வு விகிதம் ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது கடந்த ஜூன் மாதத்தில் 9.87 சதவீதமாக இருந்த மொத்த விற்பனை விலைவாசி உயர்வு விகிதம் ஜூலை மாதத்தில் 9.78 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டை புதிய அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் இப்பட்டியலில் (WPI), ஜூன் மாதப் பணவீக்கமே மிக அதிகபட்ச அளவாகப் பதிவாகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவு :

மொத்த விலை பணவீக்கத்தின் முக்கியமான அங்கமான எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 20.05 சதவீதமாகக் குறைந்துள்ளது.

எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவின் பணவீக்கம் கடந்த ஜூன் மாதத்தில் 27.41 சதவீதமாகவும், மே மாதத்தில் 30.33 சதவீதமாகவும் மிக அதிக அளவில் இருந்தது.

இந்த வரம்பு குறைந்திருப்பது ஒட்டுமொத்த பணவீக்கச் சரிவிற்குப் பெரிதும் உதவியுள்ளது. சமீபத்திய மாதங்களில் மொத்த விற்பனை விலை அழுத்தத்திற்கு இந்தப் பிரிவு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

Falling inflation, rising hope for India's economy boost|மொத்த பணவீக்கம்
Falling inflation|மொத்த பணவீக்கம்

எனினும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்போதைய பதற்றமான சூழலால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், வரும் நாட்களில் தொழில்துறையின் போக்குவரத்து செலவுகளை மீண்டும் உயர்த்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

மொத்த விலை உணவுப் பணவீக்கம் :

கடந்த ஜூன் மாதத்தில் 6.14 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்களின் மொத்த விலை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.65 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உணவுப் பொருட்களின் மொத்த விலை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 6.14 சதவீதமாகவும், மே மாதத்தில் 4.49 சதவீதமாகவும் இருந்த நிலையில் ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
பணவீக்கம் குறைந்து, வளர்ச்சி தொடரும்..... RBI-யின் துணிச்சலான பயணம்..!
wholesale inflation

நாட்டின் பல பகுதிகளில் நிலவிய சீரற்ற மழைப்பொழிவு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் காய்கறிகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு விலையேற்றம் அடைந்தது.

இதன் தாக்கம் சில்லறை வர்த்தகத்திலும் எதிரொலித்து, நுகர்வோர் உணவுப் பணவீக்கம் ஜூலையில் 5.52 சதவீதமாக உயர்ந்ததுடன் சாமானிய மக்களின் அன்றாடக் குடும்ப வரவு செலவில் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

முதன்மைப் பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களின் விலையேற்றம் (Manufactured Products) :

உணவுப் பொருட்கள், தாதுக்கள் மற்றும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட முதன்மைப் பொருட்களின் (Primary Articles) பணவீக்கம் ஜூலையில் 8.52 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஜூன் மாதத்தில் 7.48 சதவீதமாக மட்டுமே இருந்த நிலையில் ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளது.

உணவு மற்றும் பானங்கள், முதன்மைப் பொருட்களின் கீழ் வரும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய WPI உணவு குறியீடானது ஜூன் மாதத்தில் 6.14 சதவீதமாக இருந்த நிலையில் ஜூலை மாதத்தில் 6.65 சதவீதத்தைப் பதிவு செய்தது. மே மாதத்தில் 4.49 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்களுக்கான விலைவாசி உயர்வு விகிதம் ஜூன் மாதத்தில் கணிசமாக அதிகரித்தது.

இதையும் படியுங்கள்:
பணவீக்கம் குறைந்து, வளர்ச்சி தொடரும்..... RBI-யின் துணிச்சலான பயணம்..!
wholesale inflation

அதேபோல, மொத்த விலை பணவீக்கக் குறியீட்டில் 64.23 சதவீதத்திற்கும் அதிகமான எடையைக் கொண்டுள்ள உற்பத்திப் பொருட்களின் பணவீக்கமும் (ஜூன்) 7.48 சதவீதத்தில் இருந்து (ஜூலை)8.29 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு :

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு விலை 26.99 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இது 34.75 சதவீதமாக இருந்த நிலையில் ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் கொள்கை மற்றும் எதிர்கால நிலை :

மொத்த விலை பணவீக்கம் சற்று குறைந்திருந்தாலும், சில்லறை விலை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 4.45 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சில்லறை பணவீக்கத்தை 4 சதவீத அளவில் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டபூர்வ இலக்கை ரிவர்ச் வங்கி கொண்டுள்ளது. ஆனால் இந்த இலக்கை விட பணவீக்கம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக உயர்ந்து காணப்படுகிறது. எனினும் இதில் சூழ்நிலைக்கு ஏற்ப 2 சதவீதம் கூடுதல் அல்லது குறைவாக இருக்க அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
பணவீக்கம் பர்ஸை பதம் பார்க்கப் போகுதா? டாலர் விலை 90 ரூபாயைத் தொட்டதால் நமக்கு என்ன ஆபத்து?
wholesale inflation

சந்தையில் நிலவும் விலை அழுத்தங்களை உற்றுநோக்கி வரும் ரிசர்வ் வங்கி, இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் கூட்டத்தில் எல் நினோ சூழல்களுக்கு மத்தியில் நிலவும் பற்றாக்குறையான மற்றும் சீரற்ற தென்மேற்குப் பருவமழையைக் காரணம் காட்டி, அடிப்படைக் கொள்கை வட்டி விகிதங்களை 5.25% என்ற அளவில் மாற்றமின்றி வைத்திருந்ததுடன், 2027 நிதியாண்டிற்கான சில்லறைப் பணவீக்கத்தை 5% ஆகக் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com