விமானப் பயணம் மூலமாக உலகில் எந்த மூலையையும் சில மணி நேரங்களில் சென்றடைய முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், விமானத்தில் பயணிக்கும்போது நாம் பலவிதமான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டி இருக்கும். அவற்றுள் ஒன்றுதான் விமானத்தில் தேங்காய் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பது. இந்தத் தடை ஏன் விதிக்கப்பட்டது? இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணங்கள் என்ன? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம்.
ஏன் தேங்காய்க்கு அனுமதி இல்லை?
தேங்காய் என்பது தென்னிந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருள். இது சமையலில் மட்டுமின்றி பூஜைகள் மற்றும் பிற சடங்குகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், விமான பயணத்தில் தேங்காய்க்கு தடை விதிக்கப்பட்டிருப்பது ஏன்? இதற்கு முக்கிய காரணம் தேங்காயில் அதிக அளவு எண்ணெய் இருப்பதே. இந்த எண்ணை எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது.
விமானம் என்பது ஒரு மூடிய இடம். இங்கு காற்று சுழற்சி குறைவாக இருக்கும். இத்தகைய சூழலில் தேங்காய் உடைந்து அதில் உள்ள எண்ணெய் வெளியேறி ஏதாவது ஒரு தீப்பொறி பட்டால் தீ விபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டால் அது பயன்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இதனால்தான் விமானத்தில் தேங்காய் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி: விமானப் பயணம் என்பது பல நூறு உயிர்களை உள்ளடக்கிய ஒரு பயணம். எனவே, விமானத்தில் பயணிக்கும் போது பாதுகாப்பு என்பது மிக முக்கியமான விஷயம். விமான நிறுவனங்கள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல கடுமையான விதிகளை பின்பற்றுகின்றன. தேங்காய் மீதான தடையும் இதில் ஒன்றுதான். விமானத்தில் எடுத்துச் செல்லக்கூடிய பொருட்களின் பட்டியல் ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும் மாறுபடலாம். எனவே, விமானத்தில் பயணிப்பதற்கு முன் நீங்கள் பயணிக்கும் விமான நிறுவனத்தின் விதிகளை கவனமாக படித்து தெரிந்துகொள்வது அவசியம்.
எனவே, விமானத்தில் தேங்காய் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பது ஒரு முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைதான். இது பயணிகளின் உயிரை பாதுகாக்க உதவும். மேலும், நாம் அனைவரும் விமான பயணத்தின் போது விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யலாம்.