பயணிகள் கவனத்திற்கு..!! இன்று முதல் ஏசி மின்சார ரெயில் சேவையில் மாற்றம்..!

சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி.மின்சார ரெயில் சேவை நேரம் இன்று முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
மின்சார ரயில்
மின்சார ரயில்
Published on

சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் குளிர்சாதன (AC) மின்சார ரெயில்களின் சேவையை மேம்படுத்தும் வகையில், தெற்கு ரெயில்வே நேர மாற்றங்களையும் கூடுதல் நிறுத்தங்களையும் அறிவித்துள்ளது. இது நேர மாற்றம் இன்று (5-ந்தேதி) முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. பயணிகள் இந்த நேர மாற்றத்தை கவனத்தில் கொண்டு உங்களது பயண நேரத்தை அதற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

* சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ஏ.சி.மின்சார ரெயில் இன்று முதல் கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்பட உள்ளது. கடற்கரையில் மாலை 3.47 மணிக்கு புறப்பட்டு மாலை 4.42 மணிக்கு தாம்பரம் சென்றடையும். அதேபோல் தாம்பரம்-கடற்கரை இடையே இயக்கப்படும் ஏ.சி.மின்சார ரெயில் தாம்பரத்தில் இருந்து மதியம் 2.28 மணிக்கு புறப்பட்டு மாலை 3.23 மணிக்கும், மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 5.55 மணிக்கு கடற்கரை வந்தடையும்.

* ஏ.சி.மின்சார ரெயில் சேவைகளுக்கு கூடுதல் நிறுத்தமாக சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் ரெயில்கள் நாளை முதல் ஊரப்பாக்கத்தில் நின்று செல்லும்.

இதையும் படியுங்கள்:
ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை..!!
மின்சார ரயில்

ஏ.சி.மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் 9 மின்சார ரெயில் சேவையின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* திருமால்பூரில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரெயில் தாம்பரத்துக்கு மதியம் 1.15 மணிக்கு பதிலாக 1.10 மணிக்கும், கடற்கரைக்கு மதியம் 2.10 மணிக்கு பதிலாக 2.05 மணிக்கும் சென்றடையும்.

* தாம்பரத்தில் இருந்து மதியம் 1.32 மணிக்கு புறப்படும் ரெயில், மதியம் 1.30 மணிக்கும், கடற்கரைக்கு மதியம் 2.27 மணிக்கு செல்லும் ரெயில் மதியம் 2.25 மணிக்கும் சென்றடையும்.

* கடற்கரையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் ரெயில் மாலை 3.39 மணிக்கும், தாம்பரத்துக்கு மாலை 4.40 மணிக்கு செல்லும் ரெயில், மாலை 4.35 மணிக்கும் சென்றடையும்.

* தாம்பரத்தில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 4.30 மணிக்கும், கடற்கரைக்கு மாலை 5.30 மணிக்கு செல்லும் ரெயில், மாலை 5.25 மணிக்கும் சென்றடையும்.

* தாம்பரத்தில் இருந்து மாலை 4.52 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 4.38 மணிக்கும், கடற்கரைக்கு மாலை 5.47 மணிக்கு செல்லும் ரெயில், மாலை 5.33 மணிக்கும் சென்றடையும்.

* தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 4.53 மணிக்கும், கடற்கரைக்கு மாலை 5.55 மணிக்கு செல்லும் ரெயில், மாலை 5.48 மணிக்கும் சென்றடையும்.

* கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 10.10 மணிக்கும், கடற்கரைக்கு நள்ளிரவு 12.15 மணிக்கு செல்லும் ரெயில், இரவு 11.55 மணிக்கும் சென்றடையும்.

* செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 10.20 மணிக்கும், கடற்கரைக்கு நள்ளிரவு 11.55 மணிக்கு செல்லும் ரெயில், நள்ளிரவு 12.15 மணிக்கும் சென்றடையும்.

இதையும் படியுங்கள்:
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்..! ரெயில் டிக்கெட்டில் 75% வரை தள்ளுபடி பெறலாம்..! எப்படி தெரியுமா..?
மின்சார ரயில்

* கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 10.50 மணிக்கும், தாம்பரத்திற்கு இரவு 10.40 மணிக்கு செல்லும் ரெயில் இரவு 11.15 மணிக்கு சென்றடையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com