காலையில் எழுந்ததும் நீங்கள் இதைச் செய்கிறீர்களா? - மாரடைப்பு வர இதுவே முக்கியக் காரணம்..!

அதிகாலையில் தூங்கி எழுந்ததும் நாம் செய்யும் குறிப்பிட்ட சில செயல்கள் தான் மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Heart Attack
Heart Attack
Published on

உணவு பழக்கமோ அல்லது மனஅழுத்தமோ மாரடைப்பு வருவதற்கு காரணமில்லை என்றும் அதிகாலையில் தூங்கி எழுந்ததும் நாம் செய்யும் குறிப்பிட்ட சில செயல்கள் தான் மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணம் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரிடமும் இருக்கும் இந்த பொதுவான பழக்கம் இவ்வளவு ஆபத்தை ஏற்படுத்துமா, அப்படி என்ன பழக்கம் மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்பது குறித்து இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம் வாங்க...

சமீபகாலமான இந்தியாவில் இளம் வயதினரிடையே மாரடைப்பு (Heart Attack) மற்றும் திடீர் இதய செயலிழப்பு (Cardiac Arrest) மரணங்கள் அதிகரித்துள்ளன.உடற்பயிற்சி செய்யும் போது உயிரிழப்பது, நடக்கும்போது,உட்கார்ந்திருக்கும் போது, நடனமாடிக்கொண்டிருக்கும்போது என இளம் வயதினர் சில நொடிகளில் அப்படியே கீழே சரிந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்தேறி வருகின்றது.குறிப்பாக எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமல் உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட இளம் வயதில் திடீரென உயிரிழப்பது அனைவரையும் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.

இதற்கு உணவு பழக்கம், முறையற்ற வாழ்க்கை முறை (புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதைப்பொருள்), உடல் பருமன், உடற்பயிற்சி இன்மை போன்றவை மாரடைப்பு வருவதற்கு காரணங்களாக சொல்லப்பட்டாலும், இதையெல்லாம் தாண்டி புதிய காரணம் ஒன்று சமீபத்திய ஆய்வில் கணடுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்..! இனி வெறும் 500 ரூபாயில் மாரடைப்பு வரப்போவதை கண்டுபிடிக்கலாம்..!
Heart Attack

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் இருக்கும் பொது மருந்துவனை மூத்த இதயவியல் மருத்துவர் டாக்டர் ஹெய்கல்(Dr.Heigl) என்பவர் 12,0000க்கு அதிகமான இதய நோயாளிகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்ததில் மாரடைப்பை தூண்டுவதற்காக முக்கிய காரணத்தை கண்டுபிடித்துள்ளார்.

அதாவது ஒருவர் தூங்கி எழுந்ததும் அன்றைய நாளை எப்படி தொடங்குகிறார் என்பதை பொறுத்து மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணத்தை கண்டு பிடித்துள்ளார்.

அவரது கூற்றின்படி, காலை நேரம் மிகவும் ஆபத்தானது என்றும், காலை 6 மணி முதல் 10 மணி வரை தான் அதிகளவு மாரடைப்பு சம்பவங்கள் நடப்பதாகவும், பல்வேறு மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளில் இது தெரியவந்ததாகவும் டாக்டர் ஹெய்கல் கூறுகிறார்.

அதேசமயம் மற்ற ஒரு சில ஆய்வுகள் மற்ற நேரங்களை விட காலை 6 மணி முதல் 10 மணி வரையான நேரத்தில் தான் மாரடைப்பு வருவதற்கு 40 சதவீதம் வரை அதிகளவு ஆபத்து இருப்பதாக கூறியுள்ளன.

காலையில் சாப்பிட்ட உணவே, கால நிலை மாற்றங்களே திடீரென மாரடைப்பு ஏற்படுவதற்கு காரணம் இல்லை என்றும் திடீர் துண்டுதல் என்ற காரணத்தையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அதிகாலையில் தூக்கத்தில் இருந்து கண்விழித்த முதல் 10 நிமிடங்களில் சட்டென எழுந்த மொபைல் போனை பயன்படுத்துவது, எழுத்தவுடன் மன அழுத்தத்திற்கு உள்ளாவது, உடல் திடீரென ஏதாவது காரணத்திற்காக அதிர்ச்சியடைவது அதாவது எதையாவது பார்க்கும் போதோ அல்லது கேட்கும் போதோ என்பது போன்றவை தான் மாரடைப்பை தூண்டுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

மேலுத் இதயத்தில் அதிக அழுத்தம் ஏற்படுவது இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

விழிக்கும்போது கார்டிசோலின் அதிகரிப்பு, பிளேட்லெட்டுகளின் ஒட்டும் தன்மை அதிகரித்தல் மற்றும் ரத்த அழுத்தம் உயருதல் ஆகியவை ஏற்கனவே அதிகமாக இருக்கும் போது இந்த நேரத்தில் இதயத்தின் மீது இன்னும் அதிக அழுத்தத்தை உண்டாகும் செயல்களை செய்யும் போது மாரடைப்பு மற்றும் திடீர் இருதய மரணங்களுக்கான அபாயத்தை அதிகரிக்கச் செய்கின்றன என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அப்படி இதயத்திற்கு இன்னும் அழுத்தம் ஏற்படும் போது அது ரத்த குழாய் அடைப்பு ஏற்படும் அபாயத்தை இன்னும் அதிகரிப்பதாகவும் கூறும் அவர், நாம் தூங்கி எழுந்ததும் நம்முடைய நரம்பு மண்டலம் ஈர்ப்பு விசைக்குள் மீண்டும் நுழைய 5 நிமிடங்கள் தேவைப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அதேநேரம் ஒருவர் இதுபோன்ற ஆபத்து வராமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர் கூறுகிறார். தூங்கி எழுந்தவுடன் உடனடியாக அவசர அவசரமாக வேலைகளில் ஈடுபடுவது தவறு.

இதையும் படியுங்கள்:
மரணத்தின் வாசலில் தள்ளும் மாரடைப்பு! நீங்க தனியா இருக்கும்போது வந்தால்...?
Heart Attack

நீங்கள் தினமும் காலையில் எழுத்தவுடன் அன்றைய நாளை அவசர அவசரமாக தொடங்காமல் கண் விழித்ததும் படுக்கையில் படுத்த நிலையில் 3 முறை மெதுவாக, உங்கள் மூச்சை (ஆழ்ந்த சுவாசம்) நன்றாக ஆழமாக இழுத்து வெளியில் விட வேண்டும்.

தூங்கி எழும் போது அவசர அவசரமாக எழாமல் பொறுமையாக 5 நிமிடங்கள் கழித்து படுக்கையை விட்டு மெல்ல எழுந்து தண்ணீர் குடிக்க வேண்டும். பின்னர் நிதானமாக அமர்ந்து 10 நிமிடங்கள் கழித்தே மொபைல் போனை பார்க்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். எழுத்தவுடன் அவசர அவசரமாக மொபைல் போனை எடுத்து போன் செய்வது, மெசேஜ் பார்ப்பது போன்ற செயல்களை செய்யக்கூடாது என்றும் அவர் கூறுகிறார்.

இப்படி டாக்டர் ஹெய்கல் கூறிய வழிமுறையை 6 வாரங்கள் கடைபிடித்த ஒரு சில நோயாளிகளில் 70 சதவீத பேரிடம் ரத்த அழுத்தம் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

காலையில் அலாரம் அடித்தவுடன் பதற்றத்துடன் எழுந்து வேக வேகமாக செயல்பட்டால் அது உங்களுடைய இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று டாக்டர் ஹெய்கல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இனிமேல் இதுபோன்று உங்களுடைய காலை பொழுதை அமைதியான முறையில் பின்பற்றினால் இந்த மாற்றங்கள் உங்கள் இதயத்தின் மீதான அழுத்தத்தை குறைப்பதுடன், மாரடைப்பு அபாயத்தையும் குறைத்து, குறிப்பாக உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய், ஏற்கனவே இதயநோய் உள்ளவர்கள் இப்படி செய்தால் மாரடைப்பு அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம் என்பதே இந்த ஆய்வின் மூலம் டாக்டர் ஹெய்கல் கூறும் அறிவுரையாகும்.

இதையும் படியுங்கள்:
மாரடைப்பு பயமா? கல்லீரலை புத்துணர்வூட்டும் புது கொழுப்பு மருந்து அறிமுகம்..!!
Heart Attack

அதேசமயம் புகைப்பிடித்தல், உயர் இரத்தம் அழுத்தம் உள்ள நபர்கள், நீரிழிவு நோயாளிகள், கொழுப்பின் தன்மை அதிகமுள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. ஆரோக்கியமான உணவு முறைகள், வாழ்வியலை கடைப்பிடிப்பதன் வாயிலாக மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபாயத்தை குறைக்க இயலும் என்று அவர் கூறுகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com