
இன்றைய தொழில்நுட்ப உலகில் சமீபத்திய வரவான ஏஐ தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியை நோக்கி முன்னோக்கி செல்கிறது. அனைத்து துறைகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தால் பல லட்சக்கணக்கான ஊழியர்களின் வேலை பறிபோகும் என பொருளாதார நிபுணர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். அதேசமயம் ஏஐதொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டால், புதிதாக வேலையும் கிடைக்கும் என்பதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஏஐ வரவால் விக்கிபீடியாவின் பயனர்கள் வெகுவாக குறைந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. பொதுவாக பலரும் எதைப் பற்றியாவது தெரிந்து கொள்ள வேண்டுமெனில் முதலில் விக்கிபீடியாவில் தான் தேடுவார்கள். அதற்கேற்ப நாம் எதைப் பற்றி தேடுகிறோமோ அதைப் பற்றிய பல தகவல்களை விக்கிப்பீடியா நமக்கு கொடுக்கும். இந்நிலையில் தற்போது ஏஐ தொழில்நுட்பம் களத்திற்கு வந்துள்ளதால், பொதுமக்கள் உட்பட அனைவரும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
இதனால் விக்கிப்பீடியாவில் தேடிக்கொண்டிருந்த பயணிகள் பலரும், ஏஐ தொழில்நுட்பத்தில் தேடத் தொடங்கி விட்டனர். இதனால் நடப்பாண்டில் மட்டும் 8 சதவீத பயணங்களை இழந்துள்ளது விக்கிபீடியா.
செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ தொழில்நுட்பத்தில் அனைத்து தகவல்களும் கிடைக்கும் என்பதால் அனைவரும் ஆர்வத்துடன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். ஏஐ தொழில்நுட்பத்தால் எங்களது பக்கத்தில் பார்வையிடுவோரின் எண்ணிக்கை நடப்பாண்டில் மட்டும் 8% குறைந்துள்ளதாக விக்கிபீடியா தெரிவித்துள்ளது.
ஏஐ மட்டுமின்றி யூடியூப் மற்றும் ஷேர்சாட் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பயனர்கள் தகவல்களை தேடுவதால், விக்கிபீடியாவின் பயனர்கள் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தகவல்களைத் தரும் தேடு பொருளாக இன்றுவரை விக்கிபீடியா சிறப்புடன் செயலாற்றி வருகிறது.
இருப்பினும் தொழில்நுட்ப வளர்ச்சியால் விக்கிபீடியாவை நாடும் பயனர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் காலங்களிலும் விக்கிப்பீடியாவை நாடும் பயனர்களின் எண்ணிக்கை மேலும் குறையத் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளப் பக்கங்களில் ஷார்ட்ஸ் வீடியோக்களின் வருகைக்குப் பிறகு, இளைய தலைமுறையினர் பெரும்பாலும் அதிலேயே அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். இதனால் எதைப் பற்றிய தகவலைத் தேட வேண்டும் என்றாலும் சமூக வலைதளத்தையே அதிகம் நம்பியுள்ளனர்.
ஏஐ தளங்களில் தகவல் கேட்கும் போது, விக்கிபீடியா ஆதாரங்களையும் சாட்பாட்கள் எடுத்துக்காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விக்கிபீடியாவும் மறைமுகமாக ஏஐ தொழில்நுட்பத்திற்கு உதவி வருகிறது. மேலும் அதிக மொழிகளில் கூடுதல் தகவல்களை தரும் தளமாக விக்கிபீடியா தான் முக்கிய ஆதாரமாக இருக்கிறது.