தவெக ஆட்சி கவிழுமா..? ஜோதிடர் ஷெல்வி கணிப்பால் பரபரக்கும் தமிழக அரசியல்!

முதலமைச்சர் விஜய்யின் அரசியல் நகர்வு எப்படி இருக்கும், அடுத்தடுத்து அவர் எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்ன என்பது குறித்தும் ஜோதிடர் ஷெல்வி பரபரப்பான கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
cm vijay Astrologer Shelvi
cm vijay Astrologer Shelvi
Updated on

ஜோசப் விஜய் கட்சி ஆரம்பித்து இரண்டரை வருடங்கள் கூட ஆகவில்லை. இரண்டரை ஆண்டுகாலத்தில் ஒரு கட்சியை ஆரம்பித்து 60 ஆண்டுகால பெரிய கட்சிகளை தோற்கடித்துள்ளார். திராவிட கட்சிகளை மொத்தமாக ஒழித்து விஜய் வெற்றி பெற்றுள்ளது சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்த விஜய் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 234 தொகுதிகளில் போட்டியிட்டு 108 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக அபார வெற்றியைப் பெற்று முதலமைச்சர் ஆனார்.

தேர்தல் நெருங்கியவுடன் பல எதிர்க்கட்சிகள், கருத்துக்கணிப்பு என அனைத்துமே விஜய்க்கு எதிராகவே இருந்தது. ஆனால் அப்போது இருந்தே ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் விஜய் தேர்தலில் ஜெயிப்பார், முதலமைச்சர் ஆவார் என அடித்து சொன்னார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் முன்பே விஜய் தான் ஜெயிப்பார் என்று ஆணித்தரமாக நம்பினார். அதன் படியே தற்போது முதலமைச்சரும் ஆகிவிட்டார்.

அதேபோல் ராமேஸ்வரம் கோவில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டதில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும். அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தது.

இதையும் படியுங்கள்:
தமிழக அரசியலில் ‘கிளைமாக்ஸ்’..!பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் எடுக்கும் அதிரடி வியூகம்..!
cm vijay Astrologer Shelvi

ராமேசுவரம் கோவிலில் வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் கூறியது போலவே தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சியை அமைந்துள்ளது.

விஜய் ஆட்சி அமைப்பற்கு 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் ஆதரவளித்த நிலையில் தவெகவின் பலம் 120 ஆக உயர்ந்தது. அதனை தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 10-ம்தேதி தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

இதற்கிடையே இரு தினங்களுக்கு முன்பு தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட், முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் அளவுக்கு யோகம் இருக்கிறது. விஜய்யின் ஜாதகம் பிரதமர் மோடியின் ஜெராக்ஸ் காப்பி போல இருக்கிறது.. இன்னும் 30 - 40 ஆண்டுகளுக்கு அவர் போட்டியே இல்லாமல் வாழ்வார் என்று கூறினார்.

தமிழக அரசியலில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு விஜய் தலைமையிலான அரசு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பயணம் எப்படி இருக்கும், அடுத்தடுத்து அவர் எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்ன என்பது குறித்தும் ஜோதிடர் ஷெல்வி பரபரப்பான கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் விஜய் மக்களை நேரடியாக சந்திப்பார். மக்களை பார்க்க மிகவும் எளிமையாக வருவார். மக்களிடம் நெருங்கிய தொடர்பில் இருப்பார். law and orderல் பெரிய பெயரை எடுப்பார். அவர் கடக ராசி என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மற்றவர்களை பாதிக்கும் பிரச்சனைகள் எல்லாம் நடக்க விடமாட்டார். பொங்கி எழுந்து விடுவார்.

விஜய் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். தற்போது நடக்கும் குரு புத்தியால் விஜய் உடன் இருப்பவர்கள், கட்சிக்காரர்களின் ஆர்வ கோளாறால் விஜய்க்கு சங்கடங்களையும் கெட்ட பெயரையும் ஏற்படுத்தும். காங்கிரஸ் கட்சியால் விஜய்க்கு பல பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். கட்சியில் எந்த தவறும் நடக்க விடமாட்டார். உடன் இருப்பவர்கள், மந்திரிகள் விஜய்யை ஏமாற்றலாம் என்று நினைத்தாலும் எதுவும் நடக்காது. அனைத்து கண்ரோலையும் விஜய் தன்னிடமே வைத்திருப்பார். கூடிய விரைவில் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்டுக்கு வேறு உயர்ந்த பதவி கொடுப்பார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போல் விஜய் செயல்படுவார். கட்சியில் உள்ளவர்கள், மந்திரிகள் தவெகவினர் ஆட்சியைப் பிடித்துவிட்டோம், இனி நாம் நிரந்தரமாக இருப்போம், நாம் தான் எப்போது மந்திரி என்று இருக்க முடியாது. இன்று இரவு மந்திரியாக இருந்தவர் காலையில் மந்திரியாக இருக்க மாட்டார்.

தவறு நடந்தால் ஒரு நொடியில் விஜய் முடிவெடுப்பார். அது யாராக இருந்தாலும் நிர்வாகத்தில் விஜய் நினைத்தது நடக்கவில்லை எனில் நிறைய மாற்றம் நடக்கும். எந்தப் பிரச்சனை நடந்தாலும் விஜய் அந்த பகுதியின் போலீஸாருக்கு கூட நேரடியாக விஜய் பேசக்கூடிய நிலை எல்லாம் வரும்.

சிவப்பு என்பது ராகு பகவானுக்கு உரியது என்பதால் தான், விஜய் அவரது கையில் சிவப்பு கயிறை கட்டியிருப்பார். சிவப்பு கயிறு என்பது பாதுகாப்பை கொடுக்கும். திருஷ்டியை போக்கும் வகையில், வளர்ச்சி ஏற்படும் வகையில் விஜய் சிவப்பு கயிறை கட்டியிருக்கலாம்.

வரக்கூடிய காலங்களில் விஜய், உதயநிதி, அண்ணாமலை என்கிற 3 முகங்களை வைத்து தான் தமிழக அரசியல் களம் பேசப்படும்.

விஜய், அண்ணாமலை இருவரும் கடக ராசி, உதயநிதி ஸ்டாலின் ரிஷப ராசி. இவர்கள் மூன்று பேரை சுற்றி தான் அரசியல் களம் இருக்கும். நான்கு முனை, ஐந்து முனை போட்டி என எவ்வளவு வந்தாலும் இந்த 3 பேருக்குள் தான் மிகப்பெரிய அரசியல் நகர்வு இருக்கும்.

மக்களிடம் இருந்து கெட்ட பெயர் வருவதற்கு விடமாட்டார். போதை பொருட்கள் நடமாட்டம், ரவுடிசம், கட்ட பஞ்சாயத்து, law and order, பெண்களுக்கு எதிரான செயல்கள் போன்றவை நடக்க விடமாட்டார். விஜய்யுடைய அரசியல் மாறுபட்ட அரசியலாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
தமிழ்நாட்டில் இந்த ஆட்சி தான்..!ராமேஸ்வரம் பஞ்சாங்கம் கணிப்பால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!
cm vijay Astrologer Shelvi

எல்லாவற்றையும் சரியாக நடக்க வேண்டும் என்று நினைப்பார், இல்லையெனில் அரசியல் எனக்கு சரியாக வரவில்லை என்று கூறி அசால்டாக தூக்கிப் போடக்கூடியவர். அந்த அமைப்பு உள்ளது. விஜய்யே எதுவும் வேண்டாம் என்று நினைத்து யார் வேண்டுமானாலும் ஆட்சியை நடத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லும் வரைக்கும் விஜய்யின் ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது. எனக்கு எந்த அரசியல் வேண்டும் என்று விஜய் நினைத்தால் ஒழிய அவரை அரசியலில் இருந்து விலக்க முடியாது.

logo
Kalki Online
kalkionline.com