வாரிசு திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? குழப்பத்தில் ரசிகர்கள்!

varisu movie
varisu movie
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

வம்சி பைடிப்பளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே வருடத்திற்கு ஒரு படம் என்கிற ரீதியில் திரையரங்குகளில் இறங்குவதால், அப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருக்கும்.

இந்தியாவில் படத்தின் வெளியீட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் குறித்த தேதியில் வாரிசு திரைப்படம் வெளியாகுமா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. வாரிசு திரைப்படம் முதலில் ஜனவரி 12ம் தேதி தான் வெளியாவதாக இருந்தது. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் 11ம் தேதி சிறப்பு காட்சிகளுக்கான முன்பதிவு செய்யப்பட்டன.

varisu
varisu

அங்குள்ள ரசிகர்களும் அதே தேதிக்கு டிக்கெட் புக் செய்திருந்தனர். ஆனால் திடீரென ரிலீஸ் தேதி 11ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதனால் சிறப்பு காட்சிகளை 10ம் தேதியே போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த நாளுக்கு டிக்கெட் புக் செய்தவர்கள் 10ம் தேதிக்கு மாற்றப்படவேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுமட்டுமின்றி வாரிசு படத்தின் வெளிநாட்டு காப்பிக்கான பணிகளும் இன்னும் முடியவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே வாரிசு திரைப்படம் திட்டமிட்டபடி வெளிநாடுகளில் குறித்த நாளில் வெளியாகுமா இல்லை சில தினங்கள் தள்ளிப்போகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் வாரிசுதெலுங்கு பதிப்பு ரிலீஸ் தேதியும் தள்ளி போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தயாரிப்பாளர் நிறுவனம் சார்ப்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்று தெரிகிறது.

'வாரிசு' திரைப்படம் பொங்கல் அன்று உலகம் முழுவதும் வெளியாகவிருப்பதால், இப்போதே ரசிகர்கள் அதைக் கொண்டாடி வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com