இனி வீட்டிலேயே முழு உடல் பரிசோதனை செய்யலாம்..! அறிமுகமானது 'Withings Body Scan 2'..!

The Withings Body Scan 2 smart scale
The Withings Body Scan 2 smart scalesource:withings
Published on

உடல் நலத்தில் அதிக அக்கறை காட்டுபவர் எனில் இந்தச் செய்தி உங்களுக்கு மகிழ்ச்சி தரும். பிரெஞ்சு (French) ஹெல்த்-டெக் நிறுவனமான Withings, தனது புதிய ஸ்மார்ட் ஸ்கேல் (Smart Scale) சாதனமான 'Body Scan 2'-ஐ CES 2026 தொழில்நுட்பக் கண்காட்சியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள இதன் முதல் பதிப்பு (Body Scan 1) பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அறிமுகமாகியுள்ள 'Body Scan 2' இன்னும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற உடல் ஆரோக்கிய கருவிகள் தயாரிப்பாளரான Withings Body Scan 2-ஐ உருவாக்கியதுடன் அதை விரைவில் விற்பனைக்கு வெளியிடவும் தயாராகி வருவது. உடல் நலம் குறித்து அக்கறையுடன் பரிசோதனைகள் மேற்கொள்வோருக்கு பயனுள்ள தகவலாக வரவேற்கப்படுகிறது.

Body Scan 2 (Withings நிறுவனம் அறிமுகப்படுத்திய ஸ்மார்ட் ஹெல்த் ஸ்கேன் கருவி) வழங்கும் முக்கிய நன்மைகள் நிறையவே உண்டு. குறிப்பாக 60க்கும் மேற்பட்ட உயிரிழப்பு அளவீடுகள் இதன் மூலம் அறியலாம் என்பது இதன் சிறப்பு.

உடல் அமைப்பு (Body Composition), எடை (Weight) ,உடல் கொழுப்பு (Body Fat),தசை அளவு (Muscle Mass),எலும்பு நிறை (Bone Mass) என வெறும் உடலின் எடையுடன் உண்மையான நிலை தெரிய வரும். இதய துடிப்பு சீரானதா, முறைகேடா (AFib போன்ற பிரச்சினைகள்) என்பதை கண்டறிய உதவும்.

இதய ஆரோக்கிய கண்காணிப்பு ECG (Electrocardiogram) வசதி என இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே அறியலாம். Autonomic Nervous System த்தின் நிலையை மதிப்பீடு செய்கிறது.குறிப்பாக நீரிழிவு (Diabetes) நோயாளிகளுக்கு நரம்பு ஆரோக்கியம் குறித்த (Nerve Health) முக்கியமான தகவல் பெறலாம்.இரத்தக் குழாய் ஆரோக்கியம் (Vascular Health) ,Arterial stiffness (ரத்தக் குழாய் கடினம்) அளவீடு அறியலாம்.

ஸ்மார்ட் ஆப் இணைப்பு (Withings Health Mate App) தினசரி, வார, மாத முன்னேற்ற அறிக்கையைடாக்டருடன் பகிர்வதற்கு எளிதானது.

ஏன் இது ஸ்பெஷல்? ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தனித்தனி மருத்துவத் தேவைகள் இருந்தாலும், இந்த ஒரே கருவி அனைவரின் தரவுகளையும் தனித்தனியாகச் சேகரிக்கும் திறன் கொண்டது. சில விநாடிகளில் துல்லியமான முடிவுகளை வழங்குவதால், அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியத்தைக் குறைத்து, நேரத்தையும் செலவையும் சேமிக்கிறது.

குறிப்பாக இதய நோயாளிகள், நீரிழிவு உள்ளவர்கள், உடல் எடை குறைக்க முயல்பவர்கள், ஆரோக்கியத்தை தொடர்ந்து கண்காணிக்க விரும்புபவர்களுக்கு இந்தக் கருவி நிச்சயம் உதவியாக இருக்கும். உபயோகிக்க எளிதான கைப்பிடி மற்றும் வடிவமைப்பில் இருக்கும் இந்தக் கருவி இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வர உள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 50,000 இருக்கும் என்கிறது நிறுவனம்.

இதய செயல்திறன், உயர் ரத்த அழுத்தம், செல்யூலர் & சக்கரை செயல்திறன் முன் எச்சரிக்கை, போன்ற விரிவான மருத்துவ-தொழில்நுட்ப கண்காணிப்புகள் ஒவ்வொரு பயனாளிக்கும் சரியான சுகாதாரம் மற்றும் நீண்ட ஆயுள் “health trend & longevity score” பெற உதவும். இக்கருவி இந்தியாவில் விற்பனைக்கு வந்தால் விற்பனை அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
'ரீஃபைண்ட்' ஆயில்ல சோப்பு இருக்கா? இதைப் பார்த்தா இனிமே கடையில ஆயில் வாங்கவே மாட்டீங்க!
The Withings Body Scan 2 smart scale

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com