
விமானப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அவ்வப்போது புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், துபாய் செல்லும் விமானப் பயணிகளுக்கான சில முக்கிய விதிமுறைகளில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
லக்கேஜ் விதிகளில் மாற்றம்:
விமானப் பயணத்தில் லேகேஜ் விதிகள் மிக முக்கியம். எந்தெந்த பொருட்களை எடுத்துச் செல்லலாம், எவற்றை எடுத்துச் செல்லக் கூடாது என்பதில் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும். துபாய் செல்லும் பயணிகள் இனி அனைத்து வகையான மருந்துகளையும் எடுத்துச் செல்ல முடியாது. சில மருந்துகளை எடுத்துச் செல்வது சட்டப்படி குற்றமாகும். எனவே, பயணத்தைத் திட்டமிடும் முன், புதிய விதிமுறைகளைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது.
விமானத்தில் எடுத்துச் செல்லக்கூடாத பொருட்கள்:
சில பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோகோயின், ஹெராயின், பாப்பி விதைகள், மற்றும் இதர போதை மருந்துகள்.
வெற்றிலை மற்றும் சில மூலிகைகள்.
யானைத் தந்தம், காண்டாமிருகக் கொம்பு போன்றவை.
சூதாட்டக் கருவிகள்.
மூன்று அடுக்கு மீன்பிடி வலைகள்.
அமீரகத்தால் தடை செய்யப்பட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்.
Oil Paintings, சில புகைப்படங்கள், சில புத்தகங்கள் மற்றும் கல் சிலைகள்
போலி நாணயங்கள்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட அசைவ உணவுப் பொருட்கள்.
மேற்கூறிய பொருட்களை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால், பயணிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சில பொருட்களைக் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி எடுத்துச் செல்லலாம். செடிகள் மற்றும் உரங்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், புத்தகங்கள், அழகுசாதனப் பொருட்கள், வயர்லெஸ் சாதனங்கள், மதுபானங்கள், தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள், இ-சிகரெட்டுகள் போன்ற பொருட்களுக்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்துவதன் மூலம், பயணத்தின் போது ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கலாம்.
கட்டாயம் எடுத்துச் செல்லக்கூடாத மருந்துகள்
குறிப்பிட்ட சில மருந்துகளை துபாய் செல்லும் விமானத்தில் எடுத்துச் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவை:
பீட்டாமெத்தோல்
ஆல்பா-மெத்தில்பெனிடைல்
கஞ்சா
கோடாக்சைம்
ஃபெண்டானில்
மெத்தடோன்
அபின்
ஆக்ஸிகோடோன்
டிரிமெபெரிடின்
ஃபெனோபெரிடின்
கேத்தனோன்
கோடீன்
ஆம்பெடமைன்
மேற்கண்ட மருந்துகளை எடுத்துச் செல்வது சட்டப்படி குற்றமாகும். எனவே, பயணிகள் தங்கள் பயணத்திற்கு முன், எந்த மருந்துகளை எடுத்துச் செல்லலாம், எவற்றை எடுத்துச் செல்லக்கூடாது என்பதை உறுதி செய்து கொள்வது மிகவும் முக்கியம். சந்தேகங்கள் இருந்தால், விமான நிறுவனத்தையோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளையோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். பாதுகாப்பான, தொந்தரவு இல்லாத பயணத்திற்கு, இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.