

தற்போதைய காலக்கட்டத்தில் மக்களின் தேவைகளில் முக்கிய இடம் பிடித்துள்ளன வங்கிகள், தொடர்ச்சியாக மக்களுக்கு பல்வேறு விதமான புதிய வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மக்கள் எளிமையாக பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக வங்கிகளில் கொடுக்கப்படுவது தான் ஏடிஎம் கார்டுகள். அந்த வகையில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரிடமும் ஏடிஎம் கார்டு இருக்கும். ஏடிஎம் கார்டுகளின் பயன்பாடு மக்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது.
அதுமட்டுமல்ல, ஷாப்பிங் செய்யும் போது கையில் பணம் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டெபிட் கார்டுகள் இருந்தாலே போதுமானது. அந்த வகையில் ஏடிஎம்களின் மூலம் 24 மணி நேரமும் பணம் பெற முடியும்.
இந்நிலையில் ஒருவர் ஏடிஎம் கார்டு மூலமாக விரும்பினால் காப்பீடு தொகை( Insurance Cover) பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
டெபிட் கார்டு (Debit Card) வைத்திருப்பவர்களுக்கு, அவரவர் வங்கி கிளையை பொறுத்து காப்பீடு தொகை மாறுபடும். இதற்கு ஒரு வங்கியின் ஏடிஎம் கார்டை குறைந்தபட்சமாக 60 நாட்களுக்கு பயன்படுத்தி இருக்கே வேண்டியது கட்டாயம்.
அந்த வகையில் நாட்டில் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகளும், ஏடிஎம் கார்டு (ATM Card) வைத்திருப்பவர்களுக்கு அவசர சிகிச்சை மற்றும் விபத்து மரணம் கவரேஜ்களை வழங்குகின்றன. இந்த காப்பீட்டுத் தொகையானது வாடிக்கையாளரின் வங்கி பரிவர்த்தனைகளைப் பொறுத்து ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வழங்கப்படும். ஆனால் இந்த தகவலை வங்கிகள் தங்களின் வாடிக்கையாளருக்கு வழங்குவதில்லை.
ஏடிஎம் கார்டு இருந்தும் பல நுகர்வோர் காப்பீட்டுக் கோரிக்கையைச் செய்ய விரும்புவதில்லை. இன்னும் சிலருக்கு இப்படி ஒன்று உள்ளது என்றே தெரிவதில்லை.
அந்த வகையில் வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள கிளாசிக் ஏடிஎம் கார்டில் ரூ 1 லட்சம், பிளாட்டினமில் 2 லட்சம் ரூபாய், சாதாரண மாஸ்டர் கார்டு என்றால் ரூ 50 ஆயிரம் வரை காப்பீட்டுத் தொகையை பெறலாம். பிளாட்டினம் மாஸ்டர் கார்டு வைத்திருப்பவர் என்றால் ரூ.5 லட்சம் மற்றும் விசா கார்டில் ஒன்றரை முதல் 2 லட்சம் ரூபாய் வரையும் காப்பீட்டுத் தொகை பெற முடியும்.
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கி, ரூபே கார்டு பெற்றிருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.1 முதல் 2 லட்சம் வரை காப்பீடு பெறுவார்கள.
ரூ.5 லட்சம் வரை கவரேஜும் பெறலாம். மேலும், விபத்தில் சிக்கியவருக்கு ரூ.50,000 கவரேஜ் கிடைக்கும். விபத்தில் இரண்டு கைகள் அல்லது இரண்டு கால்கள் இழந்தவர் என்றால், ரூ. 1 லட்சம் காப்பீட்டு சலுகையாக கிடைக்கும். மரணம் ஏற்பட்டால் ஏடிஎம் கார்டை பொறுத்து ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கவரேஜ் கிடைக்கும்.
கார்டுதாரரின் நாமினி சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று காப்பீட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். அதாவது, ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர் விபத்தில் சிக்கினால், காப்பீட்டுக் கோரிக்கையை உடனடியாக மேற்கொள்ளும் வகையில், காவல்துறைக்கு முதலில் தகவல் தெரிவிப்பதுடன், விபத்தில் பாதிக்கப்பட்டவர் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சேகரிக்க வேண்டும்.
அதேசமயம், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மருத்துவப் பதிவேடுகள் சேகரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர் இறக்கும்பட்சத்தில், பிரேத பரிசோதனை அறிக்கை, போலீஸ் அறிக்கை, இறப்புச் சான்றிதழ், தற்போதைய ஓட்டுநர் உரிமம் போன்ற உரிய ஆவணங்கள் அனைத்தையும் வங்கியில் சமர்பிக்க வேண்டும். பின்னர், அவை அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, பாதிக்கப்பட்டவரின் கார்டு வகையை பொறுத்து வங்கிகள் பாதிக்கப்பட்டவருக்கான காப்பீட்டுத் தொகையை வழங்கும்.
கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை ஒரு நபர் பயன்படுத்தும் கார்டின் வகையைப் பொறுத்து ரூ.30,000 முதல் ரூ.10 லட்சம் வரையிலான விபத்து மரண காப்பீட்டை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.