ஜீரோ பேலன்ஸ், ஜீரோ டென்ஷன்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் அதிரடி திட்டங்கள்.!

India Post Payments Bank
India Post
Published on

இன்றைய நவீன யுகத்தில் பொதுமக்களின் அனைத்து பணப் பரிமாற்றங்களும் வங்கிகள் வழியாகவே நடக்கின்றன. அனைத்து வங்கிகளும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை நிர்ணயித்து விட்டதால், தற்போது ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கை தொடங்க, அதே அளவு பணத்தை டெபாசிட் செய்ய வேண்டியது அவசியமாகும்.

முன்பெல்லாம் ஒரு வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை என்பது மிகவும் குறைவாகவே இருந்தது. சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என்றால் ரூ.250 முதல் ரூ.500 டெபாசிட் செய்தாலே போதுமானதாக இருந்தது. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இன்றைய பொருளாதார உலகில், வங்கிகளில் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகையும் அதிகரித்து விட்டது.

இந்நிலையில் எவ்வித டெபாசிட் தொகையும் இல்லாமல் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கை தொடங்கி, பொதுமக்களின் சேமிப்பை ஊக்குவிக்கிறது இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB).

இதுமட்டுமின்றி பல்வேறு சிறப்புத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி பொதுமக்களை ஊக்குவித்து வருகிறது. பொதுமக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் விபத்து காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, தற்போது வரை 1.55 லட்சத்திற்கும் மேலான அஞ்சல் அலுவலகங்கள் மூலம் நகர்ப்புறம் மற்றும் கிராமப் பகுதிகளில் டிஜிட்டல் வங்கி சேவையை வழங்குகிறது.

சிறப்பம்சங்கள்:

* IPPB மொபைல் செயலி மூலம் சேமிப்பு கணக்கைத் தொடங்கவும், நிர்வகிக்கவும் முடியும்.

* HDFC வங்கியுடன் இணைந்து கிராமப்புறங்களில் கடன் மற்றும் நிதிச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

* தபால்காரர்கள் மற்றும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் மூலம், ‘உங்கள் வாசலில் வங்கி’ என்ற முழக்கத்துடன் இந்திய அஞ்சல் துறை செயல்பட்டு வருகிறது.

* ஆதார் கார்டு மற்றும் ஒரு புகைப்படம் இருந்தாலே போதும் வெறும் 5 நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில், ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கைத் தொடங்கி விடலாம்.

* வங்கிக் கணக்குகளை GPay மற்றும் Phonepe போன்ற யுபிஐ செயலிகளுடன் இணைப்பது போலவே, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் சேமிப்பு கணக்கையும் யுபிஐ செயலியில் உடனுக்குடன் இணைத்துக் கொள்ளலாம்.

* ரூ.899 ஆண்டு கட்டணத்தில் ரூ.15 லட்சத்திற்கான மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.

* ரூ.799 ஆண்டு கட்டணத்தில் ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடும் வழங்கப்படுகிறது.

* பென்ஷன் முதல் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டங்கள் வரை அனைத்து திட்டங்களிலும் பொதுமக்கள் முதலீடு செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி? முழு வழிகாட்டி இதோ.!
India Post Payments Bank

* இந்திய அஞசல் துறை மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதால், ரிஸ்க் இலலாத பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது.

* ரெக்கரிங் டெபாசிட், டைம் டெபாசிட், செல்வமகள் சேமிப்புத் திட்டம், பொன்மகன் சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருவாய் திட்டம் மற்றும் போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்திய அஞ்சல் துறையில் செயல்பாட்டில் உள்ளன.

* இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் பணம் செலுத்துதல் மற்றும் பணம் பெறும் வசதியும் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவை மையத்தின் 70107 98010 மற்றும் 04324 234803 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
நடுத்தர மக்களுக்கு ஏற்ற அஞ்சல் அலுவலகத்தின் தொடர் வைப்புத் தொகை திட்டம்..!
India Post Payments Bank

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com