இன்றைய உலகில் தொழில்நுட்பத்தின் உதவியோடு அறிவியல் எவ்வளவோ முன்னேறியிருந்தாலும், சில அன்றாட விஷயங்கள் நமக்கு புரியாத புதிராகவே உள்ளன. பிரபஞ்சத்தில் மறைந்துள்ள மர்மங்கள் முதல் எளிய உயிரியல் வினோதங்கள் வரை, அறிவியலால் இன்னும் முழுமையாக விளக்க முடியாத 6 விஷயங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
சோர்வாகவோ அல்லது போராகவோ இருக்கும்போது கொட்டாவி விடுகிறோம் என்பது நமக்குத் தெரிந்ததே. நம் அருகில் இருக்கும் ஒருவர் கொட்டாவி விட்டால் போதும், உடனே நமக்கும் கொட்டாவி வரும். அது ஏன் தெரியுமா? இது நம் மூளையின் இரக்க உணர்வு (empathy) காரணமாக இருக்கலாம்னு சொல்றாங்க. ஆனால் , அதற்குப் பின் உள்ள சரியான காரணம் இன்னும் தெளிவாக விளக்கப்படவில்லை என்பதே உண்மை.
உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, வெறும் சர்க்கரை மாத்திரையை (dummy pill) கொடுத்தால் கூட சிலருக்கு குணமாகும். இதற்குப் பெயர்தான் 'பிளேஸ்போ எபெக்ட்'. ஒருவரின் நம்பிக்கை எப்படி உடல்நிலையில் இவ்வளவு பெரிய மாற்றத்தை உருவாக்கிறது என விஞ்ஞானிகளுக்கு இன்னும் முழுமையாகப் புரிவில்லை. இது மனதுக்கும் உடம்பிற்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது. இதில் மூளையின் பங்கு நம்பமுடியாதது.
ஆப்பிள் மரத்தில் இருந்து கீழே விழுந்ததைப் பார்த்து ஐசக் நியூட்டன் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். அதன்பின்பு, ஐன்ஸ்டீன் அதை இன்னும் விளக்கமாகக் கூறினார். ஆனால், இந்தப் புவி ஈர்ப்பு சக்தி என்பது உண்மையில் என்ன? இது ஒரு துகளா? அல்லது சக்தியா? இது இயற்பியலில் உள்ள மிகப்பெரிய கேள்விகளில் ஒன்றாகும்.
ஒரு தக்காளியில் மனிதனை விட அதிகமான மரபணுக்கள் உள்ளன. மனிதர்களுக்கு சுமார் 20,000 முதல் 25,000 மரபணுக்கள் இருக்கும்போது, ஒரு தக்காளியில் சுமார் 35,000 மரபணுக்கள் உள்ளன.
இது ஒரு உயிரியல் மர்மமாக உள்ளது. ஒரு சாதாரண தக்காளிக்கு மனிதனை விட அதிக ஜீன்கள் இருக்கக் காரணம் என்ன என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
ஒரு பொருளின் வழுக்கும் தன்மை எளிதில் விளக்கக்கூடிய விஷயமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் பனி ஒரு விதிவிலக்கு. ஒருவரின் எடையின் அழுத்தம் பனியில் மெல்லிய, வழுக்கும் நீர் அடுக்கை உருவாக்குவதே ஆதிக்கக் கோட்பாடாக இருந்தது. இது உறைபனிக்குக் குறைவான அதாவது பூஜ்ய டிகிரிக்கு குறைவான வெப்பநிலையிலும் திரவத்தைப் போன்ற ஒரு அடுக்கை உருவாக்குகிறது என்று நவீன கோட்பாடுகள் கூறுகின்றன. ஆனால் ஒரு உறுதியான, உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கம் இன்னும் கிடைக்கவில்லை.
இரவு நேரத்தில் பார்க்கின்ற நட்சத்திரங்கள், கிரகங்கள் எல்லாமே பிரபஞ்சத்த்தின் ஒரு சிறிய பகுதிதான். கண்ணுக்குத் தெரியாத, எந்த ஒளியிலும் உமிழாத ஒரு கருப்புப் பொருள் (Dark Matter) உள்ளது. அதன் ஈர்ப்பு சக்தி (gravitational effect) மற்ற விண்மீன் மண்டலங்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதை வைத்து விஞ்ஞானிகள் அதைக் கண்டுபிடித்தார்கள். இது பிரபஞ்சத்தில் 27% இருக்கிறது எனச் சொல்கிறார்கள். ஆனால் இது எதனால் ஆனது என்று இன்றளவும் மர்மமாவே உள்ளது.
இந்த ஆறு மர்மங்களில், உங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது எது? கமென்ட்ல சொல்லுங்க!