உலகையே மாற்றிய 7 ரகசிய கண்டுபிடிப்புகள்.. இது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

நாம் தினமும் சாதாரணமாக பயன்படுத்தும் பல பொருட்கள் எப்படி தற்செயலான விபத்துகளாலும் தோல்விகளாலும் உலகையே மாற்றும் மாபெரும் கண்டுபிடிப்புகளாக உருமாறின என்பதன் சுவாரஸ்யமான பின்னணி ரகசியங்கள்.
Accidental inventions in history
Accidental inventions in history
Updated on

Accidental inventions in history: நமது அன்றாட வாழ்க்கையில் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் பல பொருட்கள் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பது பற்றி நாம் பெரிதாக சிந்திப்பதே கிடையாது. தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த மின்விளக்கு மற்றும் ரைட் சகோதரர்களின் விமானம் போன்ற பிரம்மாண்டமான கண்டுபிடிப்புகளுக்கு கிடைத்த மாபெரும் பெயரும் புகழும், உலகையே சத்தமில்லாமல் மாற்றிய சில சிறிய அளவிலான கண்டுபிடிப்புகளுக்கு கிடைக்கவே இல்லை. 

இன்னும் சொல்லப்போனால் இன்று நாம் பயன்படுத்தும் பல முக்கிய பொருட்கள் ஏதோ ஒரு எதிர்பாராத விபத்து மூலமாகவோ அல்லது வேறு எதற்கோ செய்த முயற்சியின் தோல்வியால் உருவானது தான். அப்படி உலகையே தலைகீழாக மாற்றிய ஏழு மாபெரும் அமெரிக்க கண்டுபிடிப்புகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இதயத்துடிப்பை சீராக்கும் கருவி!

இதய நோயாளிகளுக்கு கடவுள் கொடுத்த வரமாக இருக்கும் பேஸ்மேக்கர் (Pacemaker) முற்றிலும் தற்செயலாக உருவான ஒரு கருவியாகும். அமெரிக்காவை சேர்ந்த பிரபல இன்ஜினியர் வில்சன் கிரேட்பேட்ச் (Wilson Greatbatch) இதய துடிப்பை பதிவு செய்யும் ஒரு கருவியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியபோது, தவறுதலாக வேறொரு ரெசிஸ்டரை பொருத்திவிட்டார். அந்த ஒரு சிறிய தவறுதான் இன்று கோடிக்கணக்கான மக்களின் இதயத்தை சீராக துடிக்க வைத்து அவர்களின் உயிரை காப்பாற்றி வருகிறது.

நவீன தகவல் தொடர்பு!

இன்று நாம் சாதாரணமாக பயன்படுத்தும் வைஃபை மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் தொழில்நுட்பங்களுக்கு முக்கிய அடித்தளம் அமைத்ததே ஒரு சினிமா நடிகை தான் என்பது ஆச்சரியமான உண்மை. ஹாலிவுட் நடிகை ஹெடி லாமர் (Hedy Lamarr) மற்றும் ஜார்ஜ் அந்தீல் (George Antheil) ஆகியோர் இரண்டாம் உலகப்போரில் ராணுவ ரகசியங்களை பாதுகாப்பதற்காக கண்டுபிடித்த ஃப்ரீக்வென்சி ஹாப்பிங் (Frequency-Hopping) தொழில்நுட்பம் தான் இன்றைய நவீன தகவல் தொடர்பின் முக்கிய உயிர்நாடியாக செயல்படுகிறது.

பபிள் ராப் மற்றும் 

ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்தால் உடையாமல் பத்திரமாக வர உதவும் பபிள் ராப் (Bubble Wrap) ஒரு மாபெரும் தோல்வி அடைந்த ஐடியாவில் இருந்து பிறந்தது தான். ஆல்ஃபிரட் ஃபீல்டிங் (Alfred Fielding) மற்றும் மார்க் சாவன்ஸ் (Marc Chavannes) ஆகியோர் ஒரு வித்தியாசமான பிளாஸ்டிக் வால்பேப்பர் செய்ய நினைத்து அது மாபெரும் தோல்வியில் முடிந்தது. ஆனால் இறுதியில் அதுவே உலகெங்கும் பொருட்களை பாதுகாப்பாக பேக்கிங் செய்யும் சூப்பரான பொருளாக மாறிப்போனது. 

கூல்ட்ரிங்க்ஸ் மூடி!

அதேபோல கூல்ட்ரிங்க்ஸ் கேன்களை எளிதாக திறக்கும் அந்த சிறிய புல் டேப் (Pull-Tab) உருவாக ஒரு சுவாரஸ்யமான பின்னணி கதை உள்ளது. எர்மல் ஃப்ரேஸ் (Ermal Fraze) என்பவர் தனது நண்பர்களுடன் வெளியே சென்றபோது, கூல்ட்ரிங்க்ஸ் திறக்க ஓப்பனரை மறந்துவிட்டார். அந்த கடுப்பில் அவர் யோசித்து கண்டுபிடித்தது தான் நாம் இன்று பயன்படுத்தும் எளிமையான கேன் மூடி.

இதையும் படியுங்கள்:
வீட்டை விட்டு பல்லிகள் மொத்தமாக காணாமல் போனால் நடக்கும் விபரீதம் இதுதான்!
Accidental inventions in history

விவசாயம்!

விவசாயத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய அறுவடை இயந்திரத்தின் கட்டிங் சிஸ்டத்தை ஓபெட் ஹஸ்ஸி (Obed Hussey) என்பவர் உருவாக்கினார். இது அன்றைய காலகட்டத்தில் மனித உழைப்பை குறைத்து விவசாய உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்க மிக முக்கிய காரணமாக அமைந்தது. 

வரலாற்று சிறப்புமிக்க படகு!

இரண்டாம் உலகப்போரில் ராணுவ வீரர்களையும் வாகனங்களையும் மிக எளிதாக கடற்கரையில் இறக்க ஆண்ட்ரூ ஹிக்கின்ஸ் (Andrew Higgins) உருவாக்கிய ஹிக்கின்ஸ் படகு (Higgins Boat) உலக ராணுவ வரலாற்றில் மிக முக்கிய பங்காற்றியது.

இதையும் படியுங்கள்:
டாய்லெட் பேஸை சுத்தம் செய்ய இந்த ஒரு பொருள் போதும்… கிருமிகள் உடனே அழியும்!
Accidental inventions in history

சில நேரங்களில் நாம் சாதாரணமாக செய்யும் சிறு தவறுகள் மற்றும் தோல்விகள் கூட எதிர்காலத்தில் உலகையே மாற்றும் மாபெரும் கண்டுபிடிப்புகளாக எப்படி மாறலாம் என்பதற்கு இவையே மிக சிறந்த உதாரணங்கள். இந்த அருமையான ஐடியாக்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நமது இன்றைய வாழ்க்கை இவ்வளவு நவீனமாகவும் எளிதாகவும் நிச்சயமாக இருந்திருக்காது.

logo
Kalki Online
kalkionline.com