-மதுவந்தி
உலகத்தில் முதல்முறையாக பன்னிரெண்டு மணிநேரம் பதப்படுத்தப்பட்ட இதயம் ஒருவருக்குப் பொருத்தப் பட்டது. பிரெஞ்சு வெஸ்ட் இண்டீசை சேர்ந்த 48 வயது மூளை பக்கவாதத்தால் இறந்த ஒருவரின் இதயம் பன்னிரெண்டு மணி நேரம் பதப்படுத்தப்பட்டு அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக எடுத்து செல்லப்பட்டு பாரிஸ்சை சேர்ந்த 70 வயது முதியவருக்கு டாக்டர் குய்லூம் லெப்ரெடொன் என்பவரால் பொருத்தப்பட்டது.
இந்த முன்னோடி பரிசோதனையில் இந்த இதயமானது ஒரு குளிரூட்டப்பட்ட பெர்பியூஷன் இயந்திரத்தில் வைத்து எடுத்து செல்லப்பட்டது. இயந்திரத்தின் உள்ளே செயற்கை விசைக்குழாய் வழியாக ஆக்ஸிஜன் மற்றும் ரத்தம் தொடர்ந்து செலுத்தப்பட்டு இதயம் பதப்படுத்தப்பட்டு பாரிஸ் எடுத்துச்செல்லப்பட்டது. இந்த முன்னோடி பரிசோதனையின் மூலம் 12 முதல் 14 மணிநேரம் வரை இதயத்தைப் பதப்படுத்தி வைக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் மருத்துவர்கள். இதை Swedish XVIVO Heart Assist Transport device நடைமுறைபடுத்தி இருக்கிறார்கள். இதைப்போலவே இன்னும் ஒரு ஏழு அல்லது எட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றி பெற்றபிறகு இந்த கருவியின் பயன்பாடு நடைமுறை படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருவியின் பயன்பாடு நேரத்தை மட்டும் அல்ல தூரத்தையும் கடக்கும் என்ன அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தெரிவித்திருக்கிறார். பிரான்சில் மட்டுமே மே இரண்டிற்கு ஒன்று என்ற விகிதாச்சாரத்தில் இதயம் தேவை இருப்பவர் மற்றும் இருதய தானம் செய்பவரும் உள்ளனர் என்றும் அவர் கூறினார். இதேபோல் உலகத்தில் இதயம் மற்றும் பிற உறுப்புகள் தேவைப்படுபவரின் எண்ணிக்கை மிக அதிகம். இந்தக் கருவிக்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் உலகின் எந்த மூலையிலிருந்தும் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் நமக்கு இதய தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை சுலபமாக செய்ய இயலும் என இந்த அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கூறினார்கள்.
ஐரோப்பிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான சங்க முன்னாள் தலைவர் லூசியானோ போட்டேனா, "இந்தக் கருவி இன்னும் புலனாய்வில் இருப்பதால் மருத்துவமனைகளில் நடைமுறைக்கு வரவில்லை. ஆனால், முதற்கட்ட ஆய்வறிக்கை நல்ல முடிவுகளை உறுதியளிக்கிறது" என கூறினார்.
அதேபோல இந்தக் கருவி முழு செயல்பாட்டிற்கு வந்தால் உலகின் எந்த மூலைக்கும் இதயத்தை எடுத்துச் செல்லவும், தேவைப்படும் நபருக்கு தகுந்த நேரத்தில் கொண்டு சேர்க்கவும் உதவும்.
இதற்கு முன்பு நடந்த இதய மாற்று அறுவை சிகிச்சையில் வேறு கருவியின் மூலம் பத்து மணிநேரம் பதப்படுத்தப்பட்ட இதயத்தைப் பொருத்தி இருக்கிறார்கள். ஆனால், மாற்றப்பட்ட இதயம் துடித்து தன் பணியினைத் துவக்க சில மணிநேரம் எடுத்தது என திரு. அல்வாரோ ரோஜாஸ்-பெனா, மிச்சிகன் பல்கலைக்கழக மாற்று அறுவை சிகிச்சை துறை உதவி ஆராய்ச்சியாளர் தெரிவித்தார்.
இந்தக் கருவியின் மூலம் பதப்படுத்தப்பட்ட இதயம் கொண்டு இதய மாற்றம் செய்துகொண்ட நபர் சிகிச்சை செய்த மூன்று மாதங்களுக்குப் பிறகு செய்யப்பட்ட ஆய்வுகளில் நலமுடன் அவரது வீட்டில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.