ChatGPT-யில் புதிய புரட்சி! சாதாரண தேடலை விட 'டீப் ரிசர்ச்' ஈஸி! எப்படி?

Chatgpt-Deep Research
Chatgpt-Deep Research
Published on

Chat GPTன் 'ஆழமான ஆராய்ச்சி' என்பது பயனர் குறிப்பிட்ட தலைப்பில் ஆழமான வலை தேடல்களை நடத்தவும், விரிவான அறிக்கைகளை தொகுக்கவும் அனுமதிக்கும் சிறப்பான ஒரு அம்சமாகும். இது வழக்கமான Chat gpt தேடல்களிலிருந்து வேறுபடுகிறது.

ஓபன் ஏ ஐ (Open AI) அனைத்து Chat gpt பயனர்களுக்கும் இலவச டீப் ரிசர்ச் கருவியை வழங்குகிறது. இந்த கருவி இணையத்தில் ஆராய்ச்சி செய்து, தகவல்களை சேகரித்து அறிக்கையை உருவாக்குகிறது. இதன் மூலம் வேகமான ஆராய்ச்சி, துல்லியமான மற்றும் ஆழமான பதில்கள் என அனைத்து பயனர்களுக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் போட்டியை சமாளிப்பதற்காக ஓபன் ஏஐ நிறுவனம் சாட் ஜிபிடி(chat GPT) யில் டீப் ரிசர்ச்(deep research) என்ற ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஆப்ரேட்டரை(Operator) அறிமுகப்படுத்திய வேகத்தில் ஓப்பன் ஏஐ நிறுவனமானது அதன் நெக்ஸ்ட் ஜென் ஏஐ ஏஜென்ட்டானது(Next Gen AI Agent) டீப் ரிசர்ச்சை (Deep Research)அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஏஐ ஏஜென்டானது ஓபன் ஏ ஐ நிறுவனத்தின் ஜாக்பாடான ஜார்ஜ் ஜிபி பயன்படுத்தி விரிவான ஆராய்ச்சிகளை செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம்: காபூலை மூழ்கடிக்கும் பேரழிவு!
Chatgpt-Deep Research

இதை பயன்படுத்துவது ரொம்ப ஈஸியான விஷயமாக உள்ளது. சாட் ஜிபிடி யில் உள்ள மெசேஜ் கம்போசரில் இருந்து டீப் ரிசர்ச் என்பதை கிளிக் செய்து நம் கேள்விகளை பதிவிடவும். நமக்கு எந்த மாதிரியான பகுப்பாய்வு தேவை என்பதை தெளிவாக கேட்க, தெளிவான மற்றும் விரிவான பதில் உடனுக்குடன் கிடைக்கிறது. மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் மலிவான விலை காரணமாக சீன ஏஐ மாடலான டீப்சீக், அதிக கவனத்தை பெற்றுள்ள நிலையில், அதற்கு போட்டியாக அதே போன்ற பெயரின் கீழ் டீப் ரிசர்ச் வந்துள்ளது.

எவ்வாறு செயல்படுகிறது?

Chat gptயில் உள்ள செய்தி தொகுப்பாளரிலிருந்து ஆழமான ஆராய்ச்சி என்பதை தேர்ந்தெடுத்து நம்முடைய கேள்விகளை உள்ளிடலாம். பின்னர் இந்த அம்சம் தன்னியக்கமாக இணையத்தில் தொடர்புடைய தகவல்களைத் தேடுகிறது. பல வலைத்தளங்கள் மற்றும் ஆதாரங்களை பகுப்பாய்வு செய்கிறது. தகவலை பகுப்பாய்வு செய்த பிறகு டீப் ரிசர்ச் மேற்கோள்கள் மற்றும் சாத்தியமான வகையில் உட்பொதிக்கப்பட்ட படங்கள், தரவு காட்சிப்படுத்தல்கள் மற்றும் பிற பகுப்பாய்வு வெளியீடுகளுடன் ஒரு அறிக்கையை தொகுக்கிறது. இந்த செயல்முறை 5 முதல் 30 நிமிடங்கள் வரை ஆகலாம். இது ஒரு நிலையான தேடலை விட முழுமையான விசாரணையை அனுமதிக்கிறது.

இதையும் படியுங்கள்:
பெண்களே! இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்கள்! உங்களுக்கான சிறந்த உணவு முறை இதுதான்!
Chatgpt-Deep Research

வழக்கமான தேடலில் இருந்து வேறுபடுகிறது:

வழக்கமான Chat gpt தேடலால் வழங்கப்படும் விரைவான சுருக்கங்களுடன் ஒப்பிடும் பொழுது ஆழமான ஆராய்ச்சி மிகவும் விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது.

இந்த டீப் ரிசர்ச் முறையானது, மேற்கோள்களுடன் கட்டமைக்கப்பட்ட அறிக்கையை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. அதே சமயம் வழக்கமான தேடல் மூலங்களுக்கான இணைப்புகளுடன் சுருக்கமான பதில்களைத் தருகிறது.

ஆழமான ஆராய்ச்சிக்கு, ஆழமான பகுப்பாய்விற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. ஆனால் வழக்கமான தேடல், எளிமையான கேள்விகளுக்கு உடனடி முடிவுகளை வழங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com