AI, இப்போதைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பூந்து விளையாட கூடிய வாட்ஸ்அப், பிரௌசர் போன்ற பல பரிமாணங்களில் நம் கைகளுக்குள் வந்துவிட்டது. ஆனால் நம்மிடம் உள்ளது அதன் தொடக்க புள்ளி தான். உலகில் செயலாற்றுவதற்காகவே பயன்படுத்தப்படும் சில சக்தி வாய்ந்த AIகள் உள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவுகளை எங்கு பார்க்கலாம்?
உடல்நலம் (healthcare), நிதி (finance), போக்குவரத்து (transportation), இணையப் பாதுகாப்பு (cybersecurity) மற்றும் உற்பத்தி (manufacturing) போன்ற உலகின் மிகவும் சவாலான துறைகளில் உள்ள பிரச்சனைகள் சிலவற்றை நிவர்த்தி செய்வதில் செயற்கை நுண்ணறிவு (AI) இன்றியமையாததாக உள்ளது.
உடல்நலப் பராமரிப்பில், நோய் கண்டறிதல், அதற்கேற்ற தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைத் திட்டங்கள் (personalized treatment plans) மற்றும் நோயாளியின் தரவுகள் கூடிய மேலாண்மை போன்றவற்றை தரமாக பார்த்துக்கொள்ள AI பெரிதும் உதவுகிறது. இது நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கும் நோயாளியின் தேகத்தை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கிறது.
நிதி துறையில், AI இன்பங்கு மோசடி கண்டறிதல், இடர் மேலாண்மை (risk management) மற்றும் அல்காரிதம் வர்த்தகத்தை (algorithmic trading) மேம்படுத்தல் போன்றவற்றில் உள்ளது. அதற்கேற்ற தேவையான நிகழ்நேர நுண்ணறிவுகளை கொடுத்து, பரிவர்த்தனை பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
போக்குவரத்துத் துறையில் மனிதனின் கட்டளையின் அடிப்படையில், இயங்கும் தன்னியக்க வாகனங்கள் (autonomous vehicles) மற்றும் அதற்கேற்ற உகந்த போக்குவரத்து மேலாண்மை (optimized traffic management), நெரிசலைக் குறைத்தல் மற்றும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவது ஆகியவற்றின் மூலம், AI சில நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது.
AI ஆனது சைபர் செக்யூரிட்டி அமைப்புகளுக்கு பெரிதும் நன்மை அளிக்கிறது, நிகழ்நேரத்தில் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து பல திருட்டு சம்பவங்களை குறைகிறது, இதனால் சைபர் தாக்குதல்களில் இருந்து முக்கியமான தரவுகள் பாதுகாக்கப்படுகின்றன.
உற்பத்தி என்று வந்தால், AI ஆட்டோமேஷன், முன்கணிப்பு பராமரிப்பு (predictive maintenance) மற்றும் தரக் கட்டுப்பாடு ஆகியவற்றை மேம்படுத்துகிறது. அதற்கு தேவையான உற்பத்தி செயல்முறைகளை ஒழுங்குபடுத்தி தேவையற்ற மனித பிழைகளைக் குறைக்கிறது.
இதன் நன்மைகளோ பல விதம்
இப்படி பல்வேறு துறைகளில், AI இன் ஒருங்கிணைப்பு, அதிகரித்த உற்பத்தித்திறன் (increased productivity), செலவுக் குறைப்பு, மேம்படுத்தப்பட்ட முடிவெடுத்தல் மற்றும் மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவம் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. காரணம் AI பெரிய அளவிலான தரவை விரைவாகவும், துல்லியமாகவும் செயலாக்குகிறது. அதற்கேற்ற செயல்பாடுகளையும் மேம்படுத்துகிறது. இதனால் இதன் நன்மைகளை அதை பயன்படுத்துபவர்களுக்கும் மற்றும் அதை பெறுபவர்களுக்கும் அனுபவிக்கிறார்கள்.
இந்த செயற்கை அறிவு நம் கட்டுப்பாட்டில் தான் இருக்குமா?
AI என்பது மனிதர்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்ட கருவியே தவிர, நம்மை ஆட்டிப் படைக்க கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், அதன் தானியங்கி செயல்கள் மற்றும் அதற்கான விதிகள் பற்றிய சந்தேகங்கள் சிலருக்கு மர்மமாகவே இருக்கின்றன. தவறான பயன்பாட்டைத் தடுக்கவும், சிறந்த மனிதக் கட்டுப்பாட்டைப் பராமரிக்கவும், AI அமைப்புகள் வெளிப்படையாக தான் இருக்கின்றன. அதன் நெறிமுறைகள் சார்ந்த ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் என்னென்ன மேற்கொள்ளப்படுகிறது என்பதை அதை உபயோகப்படுத்தவர்களிடம் உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியம்.
ஆக, பல்வேறு சவாலான கட்டங்களில் AI இன் பயன்பாடு குறிப்பிடத்தக்க நன்மைகளை நமக்கு வழங்குகிறது. ஆனால் அதன் பொறுப்பான பயன்பாட்டை உறுதிசெய்ய கடுமையான கட்டுப்பாடு மற்றும் நெறிமுறை தரங்களை பராமரித்து மக்களுக்கு புரியவைப்பதும் அவசியம். அப்போதுதான் AI தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியான முன்னேற்றம், அதன் தொடர்ச்சியான ஒழுங்குமுறை விதிகள், சமூகத்தின் மீதான அதன் தாக்கம் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் அதன் பங்கு போன்றவற்றை அனைவரிடமும் உறுதிப்படுத்த முடியும்.