நமது ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய் பல நேரங்களில் வயர்களைத் தேடி எடுத்து பிளக்கில் சொருகுவது பெரும் சலிப்பை ஏற்படுத்தும். இதை எளிதாக்கவே சந்தையில் பல புதிய சாதனங்கள் அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில் வெறும் சார்ஜ் செய்வதோடு மட்டுமில்லாமல், பாடல்களை ஒலிக்கச் செய்து, அலாரம் அடித்து உங்களை தினமும் காலையில் எழுப்பிவிடும் ஒரு சூப்பரான கேட்ஜெட் தான் டெம்ப்ட் ப்ரைவி ஃபியூஷன் (Tempt Privee Fusion). பார்ப்பதற்கு அழகிய தோற்றத்துடன் பல வேலைகளைச் செய்யும் இந்த அட்டகாசமான சாதனத்தைப் பற்றி தமிழ் பார்க்கலாம்.
பல திறமைகள் கொண்ட வயர்லெஸ் சார்ஜர்!
இந்த சாதனம் பார்ப்பதற்கு ஒரு சாதாரண ப்ளூடூத் ஸ்பீக்கர் போலத் தெரிந்தாலும், உண்மையில் இது ஒரு 15W திறன் கொண்ட அதிநவீன வயர்லெஸ் சார்ஜர் ஆகும். இதை ஒரு பவர் சோர்ஸில் இணைத்துவிட்டால் போதும், உங்கள் போனை இதன் மீது வைத்ததும் வேகமாக சார்ஜ் ஆகத் தொடங்கிவிடும். ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி AirPods போன்ற சாதனங்களையும் இதில் எளிதாக சார்ஜ் செய்துகொள்ளலாம்.
இது தவிர இதில் LED விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் மனநிலைக்கு ஏற்ப இந்த விளக்குகளின் நிறங்களை மாற்றிக்கொள்ள முடியும். மேலும் இதில் AM/FM ரேடியோ வசதி, கடிகாரம், அலாரம் மற்றும் டைமர் போன்ற பல பயனுள்ள அம்சங்கள் நிறைந்துள்ளன.
இசையை அதிரவிடும் வயர்லெஸ் சார்ஜர்!
இசையை ரசிப்பவர்களுக்கு இந்த சாதனம் மிகச்சிறந்ததாகும். இதில் உள்ள Subwoofers பாடல்களின் இசையை மிகத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக அதிக பேஸ் இல்லாமல் மென்மையான இசையை விரும்பிக் கேட்பவர்களுக்கு இது மிகவும் பிடிக்கும். ப்ளூடூத் மூலம் மட்டுமில்லாமல், USB மற்றும் SD Card மூலமாகவும் இதில் பாடல்களைக் கேட்டு ரசிக்கலாம்.
இரவு நேரத்தில் உறங்குவதற்கு முன்போ அல்லது சமையலறையில் வேலை செய்யும் போதோ பாடல்களைக் கேட்க இது மிகவும் ஏற்ற ஒரு சாதனமாகும். இதன் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் ஆறு மணி நேரம் வரை தடையின்றி இசையை ரசிக்கலாம்.
பட்ஜெட்டிற்கு ஏற்ற வயர்லெஸ் சார்ஜர்!
இந்த வயர்லெஸ் சார்ஜர் சாதனத்தை இயக்குவது சற்று வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இதில் மிகக் குறைவான பட்டன்களே உள்ளதால், ஒரே பட்டனை பல வேலைகளுக்குப் பயன்படுத்த வேண்டி இருக்கும். உதாரணமாக, சத்தத்தை கூட்ட அல்லது குறைக்க ஸ்கிப் பட்டனை நீண்ட நேரம் அழுத்த வேண்டும்.
அதேபோல எல்இடி விளக்குகளை அணைக்க அனைத்து நிறங்களையும் மாற்றி இறுதியாகத் தான் அணைக்க முடியும். ஆரம்பத்தில் இது சற்று குழப்பமாக இருந்தாலும், தொடர்ந்து பயன்படுத்தும்போது மிக எளிதாகப் பழகிவிடும்.
சுமார் 2,699 ரூபாய் விலையில் விற்கப்படும் இந்த சாதனம், கொடுக்கும் காசிற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்க்கிறது. இதை வெறும் ஸ்பீக்கராக மட்டும் பார்க்காமல், பல வேலைகளைச் சுலபமாக்கும் ஒரு ஆல்ரவுண்டர் கேட்ஜெட்டாகப் பார்ப்பதே சரியானது. உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ பிறந்தநாள் பரிசளிக்க நீங்கள் நினைத்தால், இந்த ஸ்மார்ட் சாதனம் ஒரு மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.