இரத்தம்: மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள ஆச்சரியமான வேறுபாடுகள்!

Humans and Animals
Humans and Animals
Updated on

னிதர்கள் மற்றும் விலங்குகளின் உடலானது சிறப்பாக இயங்கத் தேவையான சக்தியை தொடர்ந்து வழங்கும் முக்கியான பணியைச் செய்து வருவது இரத்தம். இரத்தமானது உடல் செல்களுக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கும், கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதற்கும் உதவுகின்றன. இரத்தத்தில் உள்ள முக்கியக் கூறுகள் சிவப்பு இரத்த செல்கள், வெள்ளை இரத்த செல்கள், பிளாஸ்மா மற்றும் இரத்தத்தட்டுகள் ஆகும். மனிதர்களின் இரத்தத்தில் ஹீமோகுளோபின் இருப்பது போலவே விலங்குகளின் இரத்தத்தில் நான்கு விதமான நிறமிபுரதங்கள் காணப்படுகின்றன.

மனித ரத்தம் மற்றும் விலங்கு ரத்தம் ஆகிய இரண்டும் ஆக்சிஜனை கடத்துதல் மற்றும் ஊட்டச்சத்து உடலுக்கு அளித்தல் முதலான பணிகளைச் செய்கின்றன. ஆனால் இரத்த கட்டமைப்பில் உள்ள செல்களின் அளவு, வடிவம் மற்றும் நிறமி புரதங்கள் (ஹீமோகுளோபின்) முதலானவற்றில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

பொதுவாக மனித இரத்தமானது சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கும். ஆனால் விலங்குகளின் இரத்தமானது நிறமற்றும் சில விலங்குகளின் இரத்தம் நீலநிறத்திலும் பச்சை நிறத்திலும் காணப்படுகின்றன. ஆக்டோபஸ்ஸின் இரத்தமானது நீல நிறத்திலும், அட்டையின் இரத்தமானது பச்சை நிறத்திலும் காணப்படும்.

மனித இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் இருபுறமும் குழிவான வட்ட வடிவத்தில் அமைந்திருக்கும். ஆனால் விலங்குகளின் செல்கள் முட்டை வடிவத்திலும் நியூக்ளியஸ் எனும் உட்கருவினைக் கொண்டாதாகவும் காணப்படுகிறது.

மனித இரத்தத்தில் ஹீமோகுளோபின் காணப்படும். ஆனால் விலங்குகளின் ரத்தத்தில் ஹீமோசயானின் எனும் நிறமிகள் காணப்படும்.

மனிதர்களின் ரத்தத்தில் A, B, AB, O என பலவகையான ரத்தப்பிரிவுகள் அமைந்துள்ளன. விலங்குகளின் இரத்தமானது மனிதர்களின் ரத்தத்தைப் போல ஒரே மாதிரியாக இல்லாமல் இனத்திற்கு இனம் மாறுபடுகிறது. நாய் இனங்களில் DEA (Dog Erythrocyte Antigen) 1, 3, 4, 5, 6, 7, 8 என எட்டு வகையான இரத்தப்பிரிவுகள் உள்ளன. பூனை இனத்தில் A, B, AB வகை இரத்தப்பிரிவுகள் காணப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
தூக்கம் வரவில்லையா? உங்கள் லேப்டாப்பில் இருக்கும் இந்த ஒரு பட்டன் போதும்!
Humans and Animals

பசுகளின் இரத்தப்பிரிவுகள் A, B, C, F, J, L, M, R, S, T, Z என 11 முக்கிய இரத்தப் பிரிவுகளைக் கொண்டவை. குதிரை இனத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட இரத்தப் பிரிவுகள் உள்ளன. இவற்றில் A, C, D, K, P, Q, U என ஏழு இரத்தப்பிரிவுகள் மட்டுமே சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டவை.

மீன்கள், ஊர்வன, பூச்சிகள் முதலான உயிரினங்கள் குளிர் இரத்தத்தை உடையவை. சுற்றுச்சூழலுக்கு ஏற்ப இவற்றின் உடல் வெப்பநிலை மாறும் தன்மையுடையவை. பாலூட்டிகள் வெப்ப இரத்தத்தை உடையவை.

விலங்குகளின் இரத்தம் பொதுவாக 55 சதவிகிதம் பிளாஸ்மா மற்றும் 45 சதவிகிதம் இரத்த அணுக்களால் ஆனது. பெரும்பாலான விலங்குகளின் உடல் எடையில் சுமார் 7 முதல் 8 சதவிகிதம் வரை இரத்தம் உள்ளது.

அட்டை, வாம்பயர் வெளவால்கள் போன்றவை இரத்தத்தை உணவாகக் கொள்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com