கேமிங் உலகின் சாதனை நாயகன் கேண்டி க்ரஷ்!

Candy Crush
Candy Crush

ஆண்ட்ராய்டு கேம்ஸ் என்று சொன்னதுமே நமக்கு முதலில் ஞாபகம் வருவது கேண்டி க்ரஷ் கேம் தான். அந்த அளவுக்கு ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத கேமாக இது இருந்தது. இன்றளவும் இந்த கேமுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. ஸ்மார்ட் போன்கள் வெளிவந்த தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை, லட்சக்கணக்கான பயனர்களின் விருப்பமான விளையாட்டாக கேண்டி க்ரஷ் இருந்து வருகிறது. 

இந்த விளையாட்டுக்கு ஒரு முடிவே இல்லையா என்பது போல அடுத்தடுத்த புதிய மேம்படுத்தல்களுடன் இன்றுவரை பிரபலமாக உள்ளது கேண்டி க்ரஷ். சமீபத்தில் இந்த விளையாட்டு 20 பில்லியன் டாலர்கள் ரெவென்யூ ஈட்டி மிகப்பெரிய உலக சாதனை படைத்துள்ளது. 

கேண்டி க்ரஷ் சாகா என்ற விளையாட்டு உலகம் முழுவதிலும் எல்லாவிதமான வயதினரின் வரவேற்பையும் பெற்ற விளையாட்டாகும். இதை தினசரி லட்சக்கணக்கானவர்கள் விளையாடி வருகின்றனர். பொழுதுபோக்காகவும், வெளியூருக்கு பயணம் செய்யும்போதும், டென்ஷனை குறைப்பதற்காகவும் என பல தருணங்களில் இந்த விளையாட்டை பயனர்கள் விளையாடி வருகின்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த விளையாட்டின் தற்போதைய மதிப்பு 20 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என இதை உருவாக்கிய கிங் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டுள்ள 15,000 பயனர்களுக்கு விரைவில் அட்டகாசமான லெவல்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

முதன் முதலில் ஒரு வலைதள விளையாட்டாக அறிமுகம் செய்யப்பட்ட கேண்டி க்ரஷ், அதன் பின்னர் பல மேம்படுத்தல்களை அடைந்து, பேஸ்புக் கேமிங் லிஸ்டில் சேர்க்கப்பட்டது. அதன் பின்னர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் அறிமுகம் ஆனது. ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்யப்பட்ட பின்பு தான் கேண்டி க்ரஷ் சாகாவின் வளர்ச்சி அதிவேகமாக இருந்தது. 

இதுவரை இந்த விளையாட்டு 5 பில்லியன் முறைகளுக்குப் மேல் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்ட கேண்டி க்ரஷ் இப்போது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லெவல்களுடன் பிரம்மாண்ட வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக அமெரிக்காவில் இருக்கும் ஆப் ஸ்டோர்களில் முன்னணியில் இருக்கும் கேம் இதுதான். 

இந்த விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு பலரும் வித்தியாசமான கேமை உருவாக்கி வருகின்றனர். இருப்பினும் கேண்டி க்ரஷ் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாக மிக உயர்ந்த இடத்தில் இருப்பதால், அதைத் தாண்டி மற்ற விளையாட்டுகள் வெற்றி பெற கடினமாகவே உள்ளது. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் கேண்டி க்ரஷ் பிரபலமாக உள்ளது.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com