
இன்றைய டிஜிட்டல் உலகில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஹேக்கர்கள் வங்கி கணக்குகளை காலி செய்யவும், போன்களை ஹேக் செய்யவும், தனிப்பட்ட தரவுகளை திருடவும் புதிய வழிகளை கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வகையில் நமது தனிப்பட்ட தகவல்களையும், வங்கி கணக்குகளையும் பாதுகாக்க போன்களில் மேற்கொள்ள வேண்டிய 4 முக்கியமான அமைப்புகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. பூட்டு திரை அறிவிப்புகளை முடக்குங்கள் (Disable Lock Screen)
OTP மற்றும் செய்திகள் உட்பட முக்கியமான தகவல்களை ஹேக்கர்கள் பூட்டு திரை அறிவிப்புகள் மூலம் (Disable Lock Screen), பார்க்க முடியும். ஆகவே இந்த அறிவிப்புகளை முடக்குவது கூடுதல் பாதுகாப்பை அளிக்கும்.
அதற்காக முதலில் உங்கள் போனின் 'அமைப்புகள்' (Settings) திறக்கவும்.
பின்பு 'அறிவிப்புகள்' (Notifications) செல்லவும்.
இதில் 'பூட்டு திரை அறிவிப்புகள்' (Lock Screen Notifications) தேர்ந்தெடுத்து முடக்கவும். இது முதல் நிலை.
2. பவர் ஆஃப் செய்ய கடவுச்சொல் தேவை (Require Password to Power Off):
திருடர்கள் போன்களை திருடிய உடன் திருடப்பட்ட போன்களை ட்ராக் செய்வதை தடுக்கவும், அழைப்புகளை தடுக்கவும், உடனடியாக மொபைலை சுவிட்ச் ஆப் செய்கின்றனர். செட்டிங்ஸில் உள்ள இந்த அமைப்பு போனை பவர் ஆஃப் செய்ய கடவுச்சொல் தேவை என்பதை உறுதி செய்கிறது.
இதற்கு முதலில் 'அமைப்புகள்' (Settings) திறக்கவும்.
அதன் பின்பு 'பாதுகாப்பு' (Security) செல்லவும்.
சென்றவுடன் 'பவர் ஆஃப் செய்ய கடவுச்சொல் தேவை' (Require password to power off) விருப்பத்தை இயக்கவும். இது இரண்டாவது நிலை.
3. திருடப்பட்ட உங்கள் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனாலும் ட்ராக் செய்யலாம்
திருடப்பட்ட போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனாலும் ட்ராக் செய்யலாம் என்ற அமைப்பு தெரியாமல் தான் திருடர்கள் போனை சுவிட்ச் ஆப் செய்கின்றனர். ஆனால் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனாலும் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க இந்த செட்டிங்கை ஆன் செய்து வையுங்கள்.
அதற்கு முதலில் போனில் Settings-ஐ திறக்கவும்.
பின்பு அதில் உள்ள Google ஆப்ஷனுக்கு செல்லவும்.
சென்று Find My Device-ஐ கிளிக் செய்து With network in high traffic areas only என்ற செட்டிங்கை ஆன் செய்யவும். இப்படி செய்தால் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனாலும் ட்ராக் செய்யலாம்.
4. அதிக போக்குவரத்து பகுதிகளில் 'எனது சாதனத்தை கண்டுபிடி' (Find My Device) இயக்கவும்:
அதிக போக்குவரத்து பகுதியில் நமது போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டாலும், இந்த அம்சத்தை வைத்து போனை எளிதாக ட்ராக் செய்ய முடியும்.
அதற்கு முதலில் 'அமைப்புகள்' (Settings) திறக்கவும்.
பின்பு 'கூகிள்' (Google) செல்லவும்.
சென்று 'எனது சாதனத்தை கண்டுபிடி' (Find My Device) தேர்ந்தெடுக்கவும்.
'அதிக போக்குவரத்து பகுதிகளில் நெட்வொர்க்குடன் மட்டும்' (With network in high traffic areas only) இயக்கவும். இப்படி செய்வதால் எவ்வளவு போக்குவரத்து நெரிசல் என்றாலும் போனை கண்டுபிடிக்க வழி கிடைக்கும்.
சந்தேகத்திற்கு இடமான அழைப்புகளை தவிர்ப்பது, OTPயை பகிராமல் இருப்பது போன்ற பாரம்பரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் டிஜிட்டல் யுகத்தில் போதுமானதாக இல்லை. மேற்கூறிய 4 அமைப்புகள் ஹேக்கர்கள் மற்றும் நம்முடைய தரவு திருட்டில் இருந்து பாதுகாக்க முக்கியமான அம்சங்களை வழங்குகின்றன என்பதில் சற்றும் ஐயமில்லை.