சுயிங்கம்: உலகையும் விண்வெளியையும் மெல்லும் மந்திரம்!

Chewing gum
Chewing gum
Published on

இந்த மனுசனுக்கு ஒரு சின்ன விஷயம் கிடைச்சா போதுமே, உடனே அதை ஊதி ஊதி பெருசாக்கலாம்னு பார்ப்பாங்க... அய்யையோ, நீங்க தப்பா நெனக்காதீங்க! நான் சொல்றது பபுள் கம்-னு சொல்லுற சுயிங்கம்ங்க! இந்த சின்னப் பொருள் பூமியை ஆட்டம் காண வைச்சு, விண்வெளி வரைக்கும் பயணிச்சிருக்குன்னா பாருங்களேன். ஒவ்வொரு நாட்டு மக்களும் இதை எப்படிப் பார்க்குறாங்க? வியப்பூட்டும் தகவல்களை கொஞ்சம் மெல்லலமா.... சாரி... சொல்லலாமா?

2019 Statista ஆய்வு படி, பெண்கள் ஆண்களை விட கொஞ்சம் அதிகமா மெல்லுறாங்க! 18-34 வயசு பெண்கள் 60% சுயிங்கம் வாங்குறாங்க, ஆண்கள் 52%. பெண்கள் ஃப்ரெஷ்னஸ், ஸ்ட்ரெஸ் ரிலீஃபுக்கு, ஆண்கள் ஸ்டைலுக்கு மெல்லுறாங்க.

விண்வெளியில் சுயிங்கம்

1984-ல் நாசாவின் ஸ்பேஸ் ஷட்டில் சேலஞ்சர் மிஷனில் சுயிங்கம் முதல் முறையா விண்வெளிக்கு பயணிச்சது! டிஸ்கவரி, அட்லாண்டிஸ் மிஷன்களிலும் இடம் பெற்றது. காரணங்கள்:

*விண்வெளியில் ஈரப்பதம் குறைவு. சுயிங்கம் உமிழ்நீரை தூண்டி வாயை ஈரமா வைக்குது.

* பயண டென்ஷனை குறைக்க மெல்லுறது மனநிலையை ரிலாக்ஸ் ஆக்குது.

*உமிழ்நீர் பற்களை சுத்தமா வைக்க உதவுது.

* எடை குறைவு, எடுத்துட்டு போக எளிது. நாசா சர்க்கரை இல்லாத, நீண்ட சுவை தர்றவற்றை தேர்ந்தெடுத்தது.

FDA அங்கீகாரம் பெற்ற நிகோடின் சுயிங்கம் புகைப்பழக்கத்தை விட உதவுது. வைட்டமின், காஃபின் சுயிங்கம் மூளைக்கு பவரை கூட்டுது. சர்க்கரை இல்லாதவை உமிழ்நீரை தூண்டி, பல் சொத்தையை 30-60% குறைக்குது. சைலிடால் சுயிங்கம் பாக்டீரியாவை அடக்குது. ஆனா, அதிகமா மெல்லுறது தாடை வலியை உண்டாக்கலாம்.

உலக நாடுகளின் சுயிங்கம் காதல்

சிங்கப்பூர்: 1992-ல் சுயிங்கம் தடை! துப்பி தெரு அழுக்கானதால், 2004-ல் மருத்துவ சுயிங்கம் டாக்டர் பரிந்துரையோடு அனுமதி. மக்கள் இதை 'தொந்தரவு'னு பார்க்குறாங்க.

அமெரிக்கா: சுயிங்கத்தோட பிறப்பிடம்! ஹாலிவுட் ஹீரோக்கள் மெல்லுறது கூல் ஸ்டைல். பபுள் கம் குழந்தைகளோட ஃபேவரைட்.

ஜப்பான்: ரோஸ், க்ரீன் டீ ஃபிளேவர்ஸ்! மாணவர்கள் ஃபோகஸுக்கு மெல்லுறாங்க. பொது இடங்கள்ல மெல்லுறது மரியாதை குறைவுனு நினைக்குறாங்க.

இந்தியா: வெற்றிலை-பாக்குக்கு மாற்று “பூமர்”, “சென்டர் ஃப்ரெஷ்”. இளைஞர்கள் ஸ்டைலுக்கு, கிராமங்கள்ல மாடர்ன் ட்ரெண்டா பார்க்குறாங்க. துப்புறது பிரச்சனை.

சவுதி அரேபியா: வாய் ஃப்ரெஷ்னஸுக்கு மட்டும் யூஸ். பபுள் கம் குழந்தைகளுக்கு.

வியப்பூட்டும் ஃபாக்ட்ஸ்

1. 1994-ல் சூசன் வில்லியம்ஸ் 23 இன்ச் பபுள் ஊதி கின்னஸ் ரெகார்ட்!

2. பாரம்பரிய சுயிங்கம் மக்காது, ஆனா மரப்பிசின், சைவ பொருட்களை வச்சு மக்குறவை (எ.கா., Chicza, Glee Gum) உருவாக்குறாங்க.

3. 1860-களில் அமெரிக்காவில் சிக்கிள் பிசினில் இருந்து சுயிங்கம் பிறந்தது!

இதையும் படியுங்கள்:
நினைத்த காரியம் விரைவில் வெற்றி பெற மனதில்கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!
Chewing gum

இறுதி மெல்லல்

சுயிங்கம் பூமியையும், விண்வெளியையும் மெல்ல வைக்குது! அமெரிக்காவுல கூல், ஜப்பான்ல ஃபோகஸ், இந்தியாவுல டைம் பாஸ், சிங்கப்பூர்ல கண்ட்ரோல். பெண்கள் கொஞ்சம் அதிகமா மெல்லுறாங்க, மருத்துவத்துக்கும் பயன்படுது. இனி சுயிங்கம் மெல்லும்போது, விண்வெளி கதையை நினைச்சு ஊதி பெருசாக்கு மச்சி!

இதையும் படியுங்கள்:
அப்பாவுக்கான அன்புப் பரிசு: ஒரு நெகிழ்ச்சியான நினைவு!
Chewing gum

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com