கரண்ட் கம்பியில் தொங்கும் பாம்பு? சீனா செய்த இந்த காரியத்தை பாருங்க!

பேட்டரி தேவையில்லை, மனிதர்களை விட 3 மடங்கு வேகம் - சீன பவர் கிரிட்டின் புதிய சாதனை!
பாம்பு ரோபோ - Power Grid Inspection
பாம்பு ரோபோ - Power Grid Inspection
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

சீனாவில் யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங் பகுதியில் மின் கம்பிகளில் பாம்பு போல் ஊர்ந்து சென்று பழுதுகளை ஆய்வு செய்யும் அதிநவீன பாம்பு ரோபோபயன்பாட்டுக்கு வந்துள்ளது.

சீனாவின் யுனான் மாகாணம், குன்மிங் (Kunming, Yunnan Province) பகுதி மற்றும் சௌத் சைனா பவர் கிரிட் (China Southern Power Grid) அமைப்பின் குன்மிங் பவர் சப்ளை பியூரோவால் இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.

ரோபோவின் முக்கிய அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள்:

பழுதுகளைக் கண்டறிதல்:

இந்த ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமராக்கள், அகச்சிவப்பு உணரிகள் மற்றும் தெர்மல் இமேஜிங் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் மின் கம்பிகளில் உள்ள சேதம், தேய்மானம் மற்றும் அதிகப்படியான வெப்பம் போன்ற ஆபத்துகளைத் துல்லியமாக கண்டறிய முடியும். இவை மின் கம்பிகளைச் சுற்றிப் பிடித்துக்கொண்டு வளைந்து நெளிந்து தடையின்றி ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் நெகிழ்வான உடல் அமைப்பு கொண்டது. இவை மனிதர்கள் செல்ல முடியாத இடங்களுக்கும் எளிதாகச் சென்று ஆய்வு செய்யும்.

சுயசார்பு மின்சாரம்:

இந்த ரோபோ இயங்குவதற்குத் தனியாக பேட்டரிகளை மாற்ற வேண்டியது இல்லை. மின்காந்த தூண்டல் (Electromagnetic induction) மூலம் அது ஊர்ந்து செல்லும் மின்கம்பிகளில் இருந்தே நேரடியாக மின்சாரத்தைப் பெற்று 24 / 7 தொடர்ச்சியாக இயங்கும் திறன் கொண்டது.

நெகிழ்வான உடல் அமைப்பு:

மின்கம்பிகளில் உள்ள தடைகளையும், வளைவுகளையும் எளிதாகக் கடந்து செல்லும் வகையில் இதன் உடல் நெகிழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உணரிகள் (Sensors):

இந்த ரோபோ உயர் தொழில்நுட்ப கேமராக்கள், அகச்சிவப்பு கேமராக்கள் (HD infrared cameras), வெப்ப இமேஜிங் (Thermal imaging) மற்றும் லேசர் உணரிகள் (Laser Sensors) பொருத்தப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
கூகுள் அதிகாரியே அலறி அடித்து ஓட்டம்... அப்படி என்ன ஏஐ செஞ்சது?
பாம்பு ரோபோ - Power Grid Inspection

பயன்கள்:

மின்சார விநியோகத்தில் ஏற்படும் திடீர் மின்தடைகளை முன்கூட்டியே தடுத்து, மின் கட்டமைப்பைத் தடையின்றி பராமரிக்க இந்த தொழில்நுட்பம் பெரும் உதவியாக இருக்கும் என்று சீன மின்வாரியம் தெரிவித்துள்ளது. மனிதர்கள் செல்லமுடியாத ஆபத்தான இடங்களிலும் தடைகளையும் தாண்டிச் சென்று சுயமாகப் பணியாற்றும்.

மின் கம்பிகளில் ஏற்படும் சேதம், தேய்மானம், அதிக வெப்பம் (abnormal heat) போன்ற பழுதுகளை முன்கூட்டியே துல்லியமாகக் கண்டறிகிறது. இதன் மூலம் மனிதர்களின் ஆபத்தான பணியும், மின் விநியோகத் தடைகளும் தவிர்க்கப்படுகின்றன.

பாம்பு ரோபோ - Power Grid Inspection
பாம்பு ரோபோ - Power Grid Inspection

மனிதர்கள் மற்றும் ட்ரோன்களை விட இவை எவ்வாறு சிறந்தது?

மனிதர்கள் மற்றும் ட்ரோன்களைவிட இவை சிறந்தது. ட்ரோன்கள் பரந்த அளவிலான பகுதிக்கு ஏற்றது; ஆனால் துல்லியம் குறைவு. பாரம்பரிய முறையில் என்றால் அதிக உழைப்பு தேவைப்படும். ஆனால் இந்தப் பாம்பு வடிவ ரோபோக்களோ மனிதர்களைவிட மூன்று மடங்கு அதிவேகமாக ஆய்வு செய்கிறது.

பாரம்பரிய முறையில் உயரமான மின் கம்பிகளில் ஏறி ஆய்வு செய்வது மிகவும் ஆபத்தானது. ஆனால் இந்த பாம்பு வடிவ ரோபோக்களோ முற்றிலும் பாதுகாப்பானது.

ட்ரோன்கள் விமான நிலையங்கள், ராணுவப் பகுதிகள் போன்ற 'நோ-ஃபிளை ஜோன்'களில் பறக்க தடை உள்ளது. பாம்பு வடிவ ரோபோக்கள் கம்பிகளின் மீது நேரடியாகச் செல்வதால் விமான நிலைய 'நோ-ஃபிளை ஜோன்' (No-fly zone) பகுதிகளில் கூட தடையின்றி இயங்கும். ட்ரோன்கள் பறக்க முடியாத தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் கூட இவை திறம்பட செயல்படுகின்றன.

ட்ரோன்களில் உயர் அழுத்த மின் கம்பிகளின் மின்காந்த அலைகளால் கேமரா தரம் மற்றும் கட்டுப்பாடு பாதிக்கப்படலாம். ஆனால் பாம்பு வடிவ ரோபோக்கள் மின்கம்பிகளுக்கு மிக அருகில் இருப்பதால் மின்காந்த அலைகளால் (Electromagnetic fields) இதன் செயல்பாடு பாதிக்கப்படாது.

மின் வினியோகத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த ரோபோ, இதுவரை 130 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள மின் விநியோகக் கம்பிகளை வெற்றிகரமாக ஆய்வு செய்து சாதனை படைத்துள்ளது. மனிதர்கள் நேரடியாகச் சென்று மேற்கொள்ளும் ஆய்வை விட, இந்த ரோபோ மூன்று மடங்கு கூடுதல் வேகத்தில் பணிகளை முடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
எந்திரனாகும் மனிதன்: வேலையைப் பறிக்கும் செயற்கை நுண்ணறிவு!
பாம்பு ரோபோ - Power Grid Inspection
logo
Kalki Online
kalkionline.com