எந்திரனாகும் மனிதன்: வேலையைப் பறிக்கும் செயற்கை நுண்ணறிவு!

தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகிறது. செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் விளைவுகள் என்ன? முழு விவரம்.
செயற்கை நுண்ணறிவு | AI and human
செயற்கை நுண்ணறிவு | AI and humanImage credit: Gemini AI
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

மனிதர்களின் உழைப்பை உறிஞ்சி, வேலைவாய்ப்பைப் பறிக்கும் அரக்கனாக உருவெடுத்து வருகிறதா செயற்கை நுண்ணறிவு? ஹோட்டல் சர்வர் முதல் ஓட்டுநர் இல்லாத கார்கள் வரை அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு-யின் (AI) ஆதிக்கம் அதீதமாக வளர்ந்து வருகிறது. மனித குலத்தின் வளர்ச்சிக்கு வரமாக வந்த இந்தத் தொழில்நுட்பம், தற்போது நம் வாழ்வாதாரத்திற்கே வேட்டு வைக்கத் தொடங்கியுள்ளதா? இந்த அதிர்ச்சி தரும் உண்மைகளையும், எதிர்கால ஆபத்துகளையும் விரிவாகப் புரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!

‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!’என்பது நமது முன்னோர்கள் சொல்லிச் சென்ற முத்தான தொடர்!’ இன்பம் இன்பம் என்பதெல்லாம் துன்பத்தின் சாயலே!’ என புது கவிஞர் வாக்கு!

இப்பூவுலகின் கதாநாயகர்கள் மனிதர்கள்தான். அவர்களின் அமைதியான வாழ்வுக்கும் நிம்மதியான மனநிலைக்கும் ஏற்றவாறே இவ்வுலகை இயற்கை படைத்துள்ளது. ஆனாலும் அவர்களுக்குள் ஏற்படும் போட்டி மனப் பான்மை காரணமாகவே அமைதிக்கும், நிம்மதிக்கும் இங்கு பங்கம் ஏற்படுகிறது; அப்பாவிப் பொது மக்கள் அல்லல் படுகிறார்கள். அவர்களோடு இப்பொழுது ஏஐயும் கை கோர்க்க ஆரம்பித்து விட்டது.

செயற்கை நுண்ணறிவு (AI-Artificial Intelligence), மனிதர்களுக்குப் பலவிதத்திலும் பயன் அளித்து வருவது உண்மைதான் என்றாலும் அதன் அபரிமிதமான வளர்ச்சி மனித குலத்திற்கே தீங்காகி விடுமோ என்ற பயமும் இப்பொழுது மனதை அரிக்க ஆரம்பித்து விட்டது. மனிதர்களுக்கு உதவ வந்த அது, இப்பொழுது மனிதர்களுக்குப் போட்டியாகவே செயல்பட ஆரம்பித்துள்ளதுதான் வேதனை!மனிதர்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் அதுவே செய்ய ஆரம்பித்து விட்டால்,மனிதர்களின் நிலை என்னவாகும்?ஆட்டைக் கடிச்சி மாட்டைக் கடிச்சி மனிதர்களையும் கடித்தது என்ற கதை போல,கம்ப்யூடர் உலகில் பணி புரியும் பலரையும் பணியிழக்கச் செய்யும் நிலைக்கு அது உயர்ந்து விட்டது.

அந்த ஒரு துறையில் மட்டுமல்ல.பலதுறைகளிலும் அதன் பங்களிப்பு, வல்லுனர்களையே வாயடைக்கச் செய்யும் விதமாக வளர்ந்து கொண்டே போகிறது.

வேலை தேடி நகரங்களுக்குச் செல்வோரின் உடனடி வேலைவாய்ப்பு அலுவலகம் அங்குள்ள சாப்பாட்டு ஹோட்டல்கள்தான். வயிற்றுப் பாடு எளிதாகி விடுமென்பதாலும், டேபிள் துடைக்கவும், தண்ணீர் ஊற்றவும் தெரிந்திருத்தலே தேவையான தகுதி என்பதாலும், வெள்ள நேரத்தில் எதிர்ப்படும் திட்டில் தற்காலிகமாகத் தங்கிக் கொள்வது போல, நகருக்கு வருபவர்கள் அங்குதான் அடைக்கலம் ஆவர். ரோபோக்கள் வடிவில் அந்தப் பணியைச் செய்ய வந்தது விஞ்ஞானம்.

வீட்டு வாசலிலேயே வாகனத்தில் ஏறி, சென்றடைய வேண்டிய இடத்தின் அருகாமையில் இறங்கும் வசதியை, அதிலும் வெளியில் வெப்பம் எவ்வளவு இருந்தாலும், உள்ளே குளிரக் குளிர ஏசியை அனுபவித்தபடி ‘கேப்’களில் பயணம் செய்யும் சொகுசை அளித்தது விஞ்ஞானந்தான். அதன் வாயிலாக உலகில் அதனையே தொழிலாகக் கொண்டு பல லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன. நமது நாட்டிலும் பல பட்டதாரி இளைஞர்கள்கூட அப்பணியில் ஈடு பட்டு, தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்கள். அவர்களுக்கும் வேட்டு வைக்க விரைந்து விட்டது அது.

இதையும் படியுங்கள்:
“உங்களைக் கொல்லப் போகிறார்கள்” என எச்சரித்தும், மேடையேறிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின்!
செயற்கை நுண்ணறிவு | AI and human

சீனாவில் ஓட்டுனரில்லாக் கார்கள் ஓடுவதாக முதலில் செய்திகள் வந்தன. இங்கு அமெரிக்காவிலும்,டிரைவர் இல்லாத டாக்சிகள் பிரபலமாகி வருகின்றன. முக்கிய நகரங்களில் அவற்றின் பணி செயல்பாட்டுக்கு வந்து விட்டது. அன்று மியாமி நகரில் அவ்வகை டாக்சிகளைக் காண நேர்ந்தது.

‘வே மோ’ (WAY MO) என்ற பெயரில் அவை ஓடிக் கொண்டிருக்கின்றன. கேமராக்கள் மற்றும் சென்சார்கள் மூலம் இயங்கும் அவை பாதுகாப்பானவை என்றே கூறப்படுகிறது.

மிக லாவகமாக அவை இயக்கப்படுகின்றன. முன்னால் செல்லும் வாகனம் வேகத்தைக் குறைத்தால் இதுவும் ஸ்பீடைக் குறைத்து விடுகிறது; சிக்னல்களில் சரியாக நிற்கிறது; சாலையின் குறுக்கே யாராவது க்ராஸ் செய்தால், நின்று நிதானித்துச் செயல்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு | AI and human
செயற்கை நுண்ணறிவு | AI and human Image credit: Gemini AI

டெஸ்லா எலக்ட்ரிக் கார்களிலும் ஆடோ பைலட் (Auto Pilot) முறை அறிமுகமாகியுள்ளது. டிரைவர் சீட்டில் அமர்ந்திருப்பவர் தூங்க மட்டும் கூடாது. வேடிக்கை பார்த்துக் கொண்டு, அவரும் ஒரு பயணியைப் போல இருக்கலாம். தூங்கினால் அலார்ம் அடிக்க ஆரம்பித்து விடுமாம். செல்ல வேண்டிய இடத்தின் முகவரியை ஃபீட் செய்துவிட்டால் கார் தானாகவே சென்று ‘பார்க்’ கும் ஆகி விடுகிறது.

இப்படி ஒவ்வொரு துறையிலும் ஏஐ யின் ஆதிக்கம் அதிகரித்தால், மனிதர்களின் வாழ்வாதாரங்களில் பிரச்னைகள் ஏற்படும்.ஒரு வேலையிலிருந்து ஒருவரை நீக்கினால், அவருக்கு வேறொரு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதனைச் சாத்தியப்படுத்துவது கடினமென்பதுடன், அதற்குக் கால அவகாசமும் தேவைப்படும்.அரசுகள் மிகுந்த முனைப்புடன் செயல்பட வேண்டி வரும்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால், செயற்கை நுண்ணறிவை எங்கே நிறுத்திக் கொள்ள வேண்டுமென்பது தெளிவாகும். அமிர்தம்தானே என்று அளவின்றிக் குடித்தால் வயிறு வீங்கி வலியே மிகும்.

இதையும் படியுங்கள்:
நெதர்லாந்து: பிரபல இந்திய உணவகங்களில் பாய்ந்த யூரோபோல் ரெய்டு!
செயற்கை நுண்ணறிவு | AI and human

செயற்கை நுண்ணறிவு-யின் பயன்பாட்டைக் கட்டுக்குள் வைப்பதே கவின் உலகின் தற்போதைய கட்டாயம்!

செயற்கை நுண்ணறிவின் அபரிமிதமான வளர்ச்சி மற்றும் அதன் தாக்கம் குறித்த இந்த ஆழமான பகுப்பாய்வைப் படிப்பதன் மூலம், உங்கள் வேலையைப் பாதுகாக்கவும், எதிர்காலத் தொழில்நுட்ப உலகிற்குத் உங்களை தயார்படுத்திக் கொள்ளவும் தேவையான முக்கிய நுண்ணறிவுகளைப் பெறுவீர்கள். தொழில்நுட்பம் மனிதனை அடிமைப்படுத்துமா அல்லது ஆள உதவுமா என்பதைத் தீர்மானிப்பதற்கான தெளிவான பார்வையை இந்தக் கட்டுரை உங்களுக்கு வழங்கும்.

logo
Kalki Online
kalkionline.com