புது போன் வாங்கும் முன் இதைப் படிக்கவும்!

உங்கள் தேவைக்கேற்ற சரியான மொபைலைத் தேர்வு செய்வது எப்படி?
Phones
Phones
Published on

ஸ்மார்ட்போனின் தரம் அதன் விலை சார்ந்து உள்ளதா அல்லது நம் தேவைக்கேற்றவாறு அதைப் பயன்படுத்துவதில் உள்ளதா? தெரிந்துகொள்வோம்.

நாம் பயன்படுத்தும் விதம்: புது ஸ்மார்ட்போன் வாங்கும்முன் நம் பயன்பாடு எந்த அளவில் இருக்கப் போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக அழைப்புகள் (calls), செய்தி அனுப்புதல் (messaging) மற்றும் பிரௌசிங் (browsing) மட்டுமே உங்களின் முதன்மையான போக்கு என்றால்; உங்களுக்கு அதிக விலை கொண்ட மொபைல்கள் தேவைப்படாது. அதற்கு நம்பகமான செயல்திறன், நல்ல பேட்டரி ஆயுள் கொண்ட ஒரு நடுத்தர (mid-range device) அளவிலான மொபைலே நன்றாக உழைக்கும்.

புகைப்படம் எடுத்தல், கேமிங் அல்லது பல வேலைப்பாடுகளைப் (multitasking) பெரிதும் நம்பியிருக்கும் ஒருவர் சிறந்த கேமராக்கள், செயலிகள் மற்றும் ஸ்டோரேஜுடன்(Storage) கூடிய உயர் ரக மாடலில் (High range) முதலீடு செய்யலாம். இப்படி என்னென்ன ஆப்ஸ்கள் நீங்கள் பயன்படுத்த போகிறீர்கள்?

நீங்கள் அடிக்கடி பயணம் மேற்கொள்வாரா? அல்லது வீடியோ கால் சார்ந்திருக்கும் தொழில் போன்ற உங்களின் தினசரி பழக்கங்களைத் தெரிந்துகொள்வதன் மூலம், பயனர்கள் தங்கள் தேவைகளைப் புரிந்துகொண்டு, சரியான வகை ஸ்மார்ட்போன்களைத் தேர்வுசெய்யலாம்.

இந்தத் தேர்வை எளிதாக்குவது உங்கள் முன்னுரிமைகளை முதலில் பட்டியலிட வேண்டும் (Priorities). போனின் பேட்டரி சக்தி (battery endurance), இருக்க வேண்டிய கேமரா தரம், என்ன சேமிப்புத் திறன் அல்லது பிடித்த மென்பொருள். இவையெல்லாம் தெளிவாகத் தெரிந்தவுடன் நீங்கள் உங்களுக்கான மொபைலைத் தேடலாம். இது உங்களைத் தேவையற்றச் செலவுகள் செய்வதைத் தடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
வீடு கட்டுபவர்களுக்கான வழிகாட்டி: ஏமாற்றத்தைத் தவிர்க்க சரியான ஒப்பந்தம் போடுவது எப்படி?
Phones

இப்போதுள்ள லேட்டஸ்ட் ஸ்மார்ட்களின் ஆயுட்காலம் என்ன? மொபைல்களின் ஆயுட்காலத்தைப் பொறுத்தவரை உங்களின் பரபரப்பான கால அட்டவணையில் (Busy schedules) நீங்கள் எப்படி அதை சாதாரணமாக (Casual) பராமரிக்கிறீர்கள் என்பதை பொறுத்துத்தான் உள்ளது. பொதுவாக ஸ்மார்ட்போன்கள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கும். இதில் நாம் செய்யும் வழக்கமான சார்ஜிங், சில நேரங்களில் அதை கீழே தவறவிடுவது மற்றும் அன்றாடம் அதற்கு ஓய்வு கொடுக்காமல் பயன்படுத்துவது என்று காலப்போக்கில் அதன் செயல்திறனைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கின்றன.

இதையும் படியுங்கள்:
சண்டைகள் இல்லாத வீட்டின் ரகசியம்... 'அந்த 5 நிமிடங்கள்' அவசியம்!
Phones

ஆனால், இப்போது வரும் பெரும்பாலான மொபைல்கள் நாம் செய்யும் தவறுகளைத் தாங்கும் (withstand such usage) வகையில்தான் உருவாக்கப்படுகின்றன. அதோடு அதன் நீண்ட ஆயுள், அதற்கு அந்த நிறுவனங்களால் கொடுக்கப்படும் மென்பொருள் ஆதரவு (Software updates), ஆரோக்கியமான பேட்டரி, நாம் செய்யும் பராமரிப்பு (physical care) போன்ற விஷயங்களால் அதன் ஆயுள் முன்பின் மாறப்படலாம்.

எனவே, உங்களின் புத்திசாலித்தனமான மொபைல் தேர்வு என்பது பொருளின் விலையை அதன் தரத்துடன் ஒப்பிடுவது மட்டுமல்ல. உங்கள் தனிப்பட்ட பயன்பாடு, பின் எப்படி நீங்கள் நிர்வகிக்கிறீர்கள் என்பதிலும்தான் அதன் தரம் சார்ந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com