பூமிக்கு மிக அருகில் வந்து 'ஹாய்' சொல்லிவிட்டு சென்ற 'லெம்மன்' வால்மீன்!

வால் நட்சத்திரங்கள் ஏன் அரிதாகப் பூமிக்கு வருகின்றன? 3175-ம் ஆண்டில் தான் மீண்டும் லெம்மன் நட்சத்திரத்தை பார்க்க முடியும் என்கிறார்கள்.
comet
comet
Published on

வானில் கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சிகளில் ஒன்று வால் நட்சத்திரங்கள். பிரகாசிக்கும் ஒரு தலையுடன் துடைப்பம் போல ஒரு நீண்ட வாலுமாக வானில் வலம் வரும் இவை அரிதாக பூமிக்கு விஜயம் செய்கின்றன. சூரியனுக்கு அருகில் செல்லும்போதுதான் இவற்றிற்கு நீண்ட வால் உருவாகிறது. இது இவற்றை அடையாளம் காண உதவுகிறது. பொதுவாக இவை வால் நட்சத்திரங்கள் என அழைக்கப்பட இதுவே காரணம்.

வால் நட்சத்திரங்களும் சூரிய குடும்பத்தை சேர்ந்தவை தான். கிரகங்கள் போலவே இவையும் சூரியனை சுற்றி வருகின்றன. ஆனால், மிகவும் நீல வட்டப்பாதையில் சுற்றுவதால் நீண்ட காலத்திற்கு ஒருமுறை பூமிக்கு அருகில் வருகின்றன.

இலத்தீன் மொழியில் நீளமான முடி என்று பொருள்படும் 'காமட்டே' என்ற சொல்லில் இருந்துதான் காமட் (comet) என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது. இவற்றின் தலையின் நீளம் 2 முதல் 20 கி.மீ வரை இருக்கும்.

புளூட்டோ கோளிற்கு அப்பால் 8 இலட்சம் கிலோமீட்டர் பரப்பில் அமைந்திருக்கும் ஊர்ட் மேகத்திரள் பகுதியில் இருந்து இவை கிளம்பி வருகின்றன.

இப்பகுதியில் கோடிக்கணக்கான கோளவடிவ வான் பொருட்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இங்கு ஏதேனும் மோதல்கள் நிகழும்போது பாதை மாறி சூரிய மண்டலத்திற்குள் பனிக்கட்டிகளாக இவை நுழைகின்றன.

வால் நட்சத்திரங்கள் என்பவை பனிக்கட்டி, தூசி, மற்றும் பாறைத் துகள்கள் நிறைந்த வானியல் பொருள் ஆகும். இவை சூரியனைச் சுற்றி வருவதோடு, சூரியனுக்கு அருகில் வரும்போது, அவற்றின் பனிக்கட்டிகள் ஆவியாகி, நீளமான வால்களை உருவாக்குகின்றன. சூரியக் குடும்பத்தின் உருவாக்கத்தின் எச்சங்களாக இவை கருதப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
பாம்புக் கடிக்கு குதிரையின் உடம்பில் இருந்து மருந்து! உலகமே வியக்கும் ரகசியம்... உங்களுக்குத் தெரியுமா?
comet

வால் நட்சத்திரங்களில் மிகவும் புகழ் பெற்றது ஹாலி வால் நட்சத்திரம். எட்மண்ட் ஹாலி என்ற பிரிட்டிஷ் விஞ்ஞானியின் பெயர் இதற்கு சூட்டப்பட்டது. அவர் தான் இதன் பாதையை சரியாக கணக்கிட்டு 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் என்று கூறினார். இங்கிலாந்தில் 1679 ம் ஆண்டு பிறந்த எட்மண்ட் ஹாலி, 16 வயதிலேயே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது நட்சத்திரங்களை பற்றி ஆய்வதில் ஆர்வம் கொண்டார். 1705 ம் ஆண்டு வான்வெளியில் தோன்றும் வால் நட்சத்திரம் திரும்பவும் வரும் என்று கண்டறிந்து சொன்னார். 1682 ம் ஆண்டு தோன்றிய வால் நட்சத்திரம் பின் மீண்டும் 1758 ல் வரும் என்றார்; அப்படியே நடந்தது. ஆனால், அதனை பார்க்க அவர் தான் இல்லை. காரணம் 1742 ம் ஆண்டு அவர் காலமானார். ஹாலியின் வால் நட்சத்திரம் அடுத்ததாக 2062 ஆம் ஆண்டில் இரவு வானில் தோன்றும்.

இதையும் படியுங்கள்:
கார் ஓட்டுபவர்களே உஷார்! இந்த ஒரு 'பொத்தான்' உங்கள் பெட்ரோல் பில்லை பாதியாக குறைக்கும்!
comet

அண்மையில் பெங்களூரு மக்கள் வானத்தில் அரிய காட்சியைக் கண்டு மெய்சிலிர்த்தனர். நகரின் மேற்கு அடிவானத்தில், மங்கலான, அழகான ஒரு பச்சை நிற ஒளிக்கீற்று தென்பட்டது. அது ஒன்றுமில்லை; நமது சூரியக் குடும்பத்தின் தொலைதூரப் பகுதியிலிருந்து வருகை தந்த 'லெம்மன்' வால்மீன் (C/2025 A6) தான். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த பச்சை நிறம் வால்மீனின் 'தலை'ப் பகுதியில் மட்டுமே இருக்கும். வாலில் அந்த வாயு சிதைந்துவிடுவதால், வால்பகுதி பச்சை நிறமற்றதாகவே காட்சியளிக்கும்.

இந்த வால் நட்சத்திரம் ஆய்வு மையத்தால் இந்த ஆண்டு (2025) ஜன 3 ஆம் தேதி தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. நாசா (NASA) தகவலின்படி, இந்த வால்மீன் நமது சூரியக் குடும்பத்தின் உட்பகுதிக்குள் வேகமாகப் பயணம் செய்து வருகிறது. கடந்த அக்டோபர் 21-ம்தேதி நமது பூமிக்கு மிக அருகில் வந்து 'ஹாய்' சொல்லிவிட்டு சென்றது. இப்போது, தனது பயணத்தின் உச்சகட்டமாக, நவ.8-ம் தேதி சூரியனுக்கு மிக அருகில் கடந்து செல்லவிருக்கிறது. 20 ஆயிரம் ஆண்டுகள் கழித்தே இந்த நட்சத்திரம் வானத்தில் மீண்டும் தோன்றும். 3175-ம் ஆண்டில் தான் மீண்டும் லெம்மன் நட்சத்திரத்தை பார்க்க முடியும் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com