விமானத்தின் டயர்கள் வெடிக்குமா? சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

Airplane Tires Tires Explode
Airplane Tires
Published on

நாம் பயன்படுத்தும் வாகனங்களின் டயர்கள் சில சமயங்களில் வெடிக்கும் தன்மை கொண்டவை. சில நேரங்களில் இதனை நாம் பார்த்தும் இருக்கிறோம். ஆனால், விமானத்தின் டயர்கள் வெடிக்குமா? வெடிக்காதா என்பது பலரும் அறியாத உண்மை. அவ்வகையில் விமானத்தின் டயர்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை உங்களுக்கு இங்கே வழங்குகிறோம்.

கார் டயர்கள் தயாரிக்கப்படும் அதே ரப்பரில் தான் விமானத்தின் டயர்களும் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இவை மிகவும் உயர் கட்டுமான தரத்துடன், அதிக எடையைத் தாங்கும் திறன் பெற்றவையாக தயாரிக்கப்படுவதே இதன் சிறப்பு. ட்ரக்குகளில் பயன்படுத்தப்படும் டயர்களை விடவும், விமானத்தில் இருக்கும் டயர்கள் சிறியவை தான். இருப்பினும் இதன் வெளிப்புறம் அதிக தடிமனாகவும், பல அடுக்குகளுடன் வலிமையானதாகவும் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் டயர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிந்தெட்டிக் பாலிமர், நைலான் மற்றும் ட்ரெட்டுகள் அதிக வலுவுடன் இருப்பது தான். ஆனால் இவற்றின் வடிவமைப்பு எளிமையாகவே இருக்கும்.

விமானத்தின் டயர்கள் ஒவ்வொன்றும் சுமார் 38 டன் எடையைக் தாங்கும் திறன் பெற்றவை. சர்வதேச விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பின் விதிமுறைப்படி, ஒரு விமானம் 288 மைல் வேகத்தில் தரையிறங்கினாலும், அதனைத் தாங்கும் வலிமை கொண்டதாக டயர்கள் இருக்க வேண்டியது அவசியமாகும். இதுதவிர அனைத்து காலநிலைளிலும் எந்த இடையூறும் இன்றி, நன்றாக இயங்கும் வண்ணம் டயர்கள் வடிவமைக்கப்படுகின்றன. தரையிறங்கும் போது விமானத்தின் டயர்கள் உடனே சுழலாது. சிறுது தொலைவு தேய்ந்து கொண்டே போகும். அதற்குப் பின் தான் விமானத்தின் வேகத்திற்கு ஏற்ப சுழலத் தொடங்கும்.

இதையும் படியுங்கள்:
'எங்கள் வீட்டு குளிர் சாதனப் பெட்டி பாடும், பேசும், குறிப்புகளை அள்ளி வீசும்!' WOW!
Airplane Tires Tires Explode

வர்த்தகப் பயன்பாட்டுக்கு உதவும் விமானங்கள், 500 முறை தரையிறங்கும் திறனைப் பெற்றுள்ளன. அதன் பிறகு டயர்களை ரீ-ட்ரெட் செய்து மீண்டும் பயன்படுத்தலாம். இம்மாதிரி 7 முறை டயர்களை ரீ-ட்ரெட் செய்து பயன்படுத்தலாம். அதற்குப் பிறகு டயர்களை மாற்றி விட வேண்டும். விமானத்தில் உள்ள டயர்களின் எண்ணிக்கையானது, அதன் வகையைப் பொறுத்து மாறுபடுகிறது. உதாரணத்திற்கு போயிங் 777 விமானத்தில் 14 டயர்களும், ஏர்பஸ் ஏ380 விமானத்தில் 22 டயர்களும் உள்ளன.

இதையும் படியுங்கள்:
வியாழனின் செம்புள்ளி... மர்மங்கள் நிறைந்த சுழலும் ராட்சசன்! 
Airplane Tires Tires Explode

டயர்கள் வெடிப்பு எதனால்?

காற்றழுத்த வேறுபாட்டினால் சில நேரங்களில் விமானத்தின் டயர்கள் வெடிக்கின்றன. ஒரு டயர் வெடித்தாலும் மற்ற டயர்களின் உதவியுடன் விமானத்தைத் தரையிறக்க முடியும். குளிர்காலத்தில் காற்றின் ஈரப்பதம் பனிக்கட்டியாகவும், பனித்திவளைகளாகவும் மாறி விமான டயருக்கள் இருக்கும் காற்றழுத்தத்தில் வேறுபாட்டை ஏற்படுத்தி விடும். இதன் காரணமாகத் தான் டயர்கள் வெடிக்கின்றன. தூய நைட்ரஜனில் ஈரப்பதமே இருக்காது என்பதால் தான், டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்பப்படுகிறது. மேலும் பிரேக் பிடிக்கும் போது, காற்றில் இருக்கும் ஆக்ஸிஜன் மூலமாக டயர்கள் சூடாகி, தீப்பிடிக்கும் அபாயமும் உள்ளது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் புறப்படத் தயார் நிலையில் இருந்த விமானத்தின் டயர்கள் வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் பெரிதாக எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. டயர்களில் ஏற்பட்ட காற்றழுத்த வேறுபாடு தான் இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
ஓர் அதிர்ச்சித் தகவல் - பூமியை விட்டு விலகும் நிலா! இனி ஒரு நாளைக்கு 25 மணி நேரமாம்!
Airplane Tires Tires Explode

ஜெட் விமானங்களில் பயன்படுத்தப்படும் டயர்கள் அதிக விலையுயர்ந்தவை என்பதால், ஒருமுறை வெடித்தால் அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாது. இதனால் தான் இந்த டயர்களில் ஃபியூஸ் கொடுக்கப்படுகிறது. டயர்கள் சூடாகும் பட்சத்தில், ஃபியூஸ் மூலம் தானியங்கி முறையில் காற்றழுத்தம் குறைக்கப்பட்டு, டயர்கள் வெடிப்பதைத் தடுக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com