மனித மூளையில் வெறும் 10% மட்டும்தான் பயன்படுத்துகிறோமா? 

Human Brain
Human Brain
Published on

"மனித மூளையில் பத்து சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகிறோம்" என்ற கருத்து பரவலாக நம்பப்படுகிறது. திரைப்படங்கள், புத்தகங்கள் போன்றவற்றில் இது அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. மீதமுள்ள 90 சதவீதத்தை திறம்பட பயன்படுத்தினால், மனிதர்கள் மனோவியல் சக்திகளை வளர்த்துக் கொள்ளலாம் அல்லது புத்திசாலித்தனத்தின் புதிய நிலைகளை அடையலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இவ்வாறு சொல்வது உண்மையா? நாம் உண்மையில் நம் மூளையின் எந்த பகுதியை பயன்படுத்துகிறோம்? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடு:

மனித மூளை நூறு பில்லியனுக்கும் அதிகமான நியூரான்களால் ஆனது, ஒவ்வொன்றும் பல்லாயிரக்கணக்கான இணைப்புகளைக் கொண்டுள்ளன. மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டிற்கு சிறப்பு வாய்ந்தது. சில பகுதிகள் இயக்கம் மற்றும் உணர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன, மற்றவை மொழி, நினைவாற்றல், சிந்தனைக்குப் பொறுப்பாகும்.

நவீன நரம்பியல் நுட்பங்களான PET (Positron Emission Tomography) மற்றும் fMRI (Functional Magnetic Resonance Imaging) ஸ்கேன்கள், மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை விஞ்ஞானிகள் துல்லியமாக ஆராய அனுமதிக்கின்றன. இந்த ஸ்கேன்கள், நாம் எந்த ஒரு செயலிலும் ஈடுபடும்போது, ​​நம் மூளையின் அனைத்து பகுதிகளும் வெவ்வேறு அளவுகளில் சுறுசுறுப்பாக இருப்பதைக் காட்டுகின்றன.

இதையும் படியுங்கள்:
மனிதன் கெட்டுப் போவதற்கு 'அமிக்டலா'வும் (Amygdala) ஒரு காரணம்... இந்த 'அமிக்டலா' யார்?
Human Brain

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், உளவியலாளர் வில்லியம் ஜேம்ஸ், சராசரி மனிதன் தனது மன திறனில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பயன்படுத்துகிறான் என்று கூறினார். இந்த கூற்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, மூளையின் பத்தில் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்று நம்பப்பட்டது.

மூளையின் சில பகுதிகள் என்ன செய்கின்றன என்பது ஆரம்பகால நரம்பியல் நிபுணர்களுக்குப் புரியவில்லை. இந்த "மறைக்கப்பட்ட" பகுதிகள் செயல்பாடற்றவை என்று தவறாக கருதப்பட்டன. சிக்கலான மூளை செயல்பாட்டைப் புரிந்துகொள்வது கடினம். பத்து சதவீதம் மட்டுமே பயன்படுத்துகிறோம் என்ற விளக்கம் புரிந்து கொள்ள எளிதாக இருந்ததால் இது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதையும் படியுங்கள்:
நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் பேபி பூமர்களின் முக்கியத்துவம் தெரியுமா?
Human Brain

உண்மையில் நாம் எவ்வளவு மூளையைப் பயன்படுத்துகிறோம்?

நவீன நரம்பியல் ஆராய்ச்சி, நாம் நம் மூளையின் நூறு சதவீதத்தையும் பயன்படுத்துகிறோம் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. நாம் விழித்திருக்கும்போது மட்டுமல்ல, தூங்கும் போதும், நம் மூளையின் அனைத்து பகுதிகளும் தொடர்ந்து சுறுசுறுப்பாக உள்ளன. வெவ்வேறு செயல்பாடுகள் வெவ்வேறு மூளைப் பகுதிகளை அதிக அளவில் பயன்படுத்துகின்றன, ஆனால் எந்தப் பகுதியும் முழுமையாக செயலற்று இருப்பதில்லை.

மூளையின் எந்த ஒரு சிறிய பகுதிக்கு சேதம் ஏற்பட்டாலும், அது கடுமையான குறைபாடுகளுக்கு வழிவகுக்கும் என்பதே இதற்கு சான்றாகும். பக்கவாதம் அல்லது மூளை காயம் மூளையின் ஒரு சிறிய பகுதியை பாதித்தால், அது பேச்சு, இயக்கம், நினைவக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

எனவே, நாம் அனைவரும் நம் மூளையின் முழு திறனையும் பயன்படுத்துகிறோம் என்பதை புரிந்துகொள்வது, நாம் பல புதிய விஷயங்களை நோக்கி செல்வதற்கு உதவியாக இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com