நீங்கள் வேற்று கிரகங்களில் இருந்தால், உங்கள் வயது என்னவாக இருக்கும்? தெரிந்து கொள்வோமா?

Extraterrestrials
Extraterrestrials

பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் 365 1/4 நாட்கள். இதில் 365 நாட்களை ஒரு ஆண்டாகக் கணக்கிட்டு, மீதமுள்ள ¼ நாட்களைச் சேர்த்து நான்கு வருடங்களுக்கு ஒரு முறை, லீப் வருடமாகக் கொண்டு, அந்த ஆண்டில் 366 நாட்கள் என கணக்கு வைத்துக் கொண்டிருக்கிறோம். இதன் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாளின் போது, நம் வயதை ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கொண்டு வருகிறோம்.

பூமியைப் (Earth) போன்று பிற கிரகங்களான புதன் (Mercury), வெள்ளி (Venus), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Saturn), யுரேனஸ் (Uranus), நெப்டியூன் (Neptune), புளூட்டோ (Pluto) ஆகிய கிரகங்களில் உங்கள் வயது என்னவாக இருக்கும்? என்று தெரிந்து கொள்ள விருப்பமா?

உங்கள் ஆசையை நிறைவேற்ற ஒரு ஆங்கில இணையதளம் உதவுகிறது. இந்த இணையதளத்தில் பிறந்த நாளை உள்ளீடு செய்வதற்கான மாதம் – நாள் – ஆண்டு எனும் காலிப் பெட்டிகள் இருக்கின்றன. இந்தக் காலிப்பெட்டியில் உங்கள் பிறந்த நாளை உள்ளீடு செய்து அருகிலுள்ள கணக்கிடு (Calculate) எனும் இடத்தில் சொடுக்கினால் போதும். கீழுள்ள பகுதியில் ஒவ்வொரு கிரகத்திலும் உங்கள் வயது நாட்களாகவும், ஆண்டுகளாகவும் தனித்தனியாகக் கிடைக்கின்றன. மேலும் ஒவ்வொரு கிரகத்திலும் அடுத்த பிறந்த நாள் எப்பொழுது வரும்? என்று நம் பயன்பாட்டிலிருக்கும் பூமிக்கான கிழமை, மாதம், நாள், ஆண்டு எனும் வரிசையில் அளிக்கப்படுகிறது.

இத்தளத்தின் கீழ்பகுதியில் ஒவ்வொரு கிரகமும் தன்னைத்தானே சுற்றிக் கொள்ள எடுத்துக் கொள்ளும் காலம், சூரியனைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் போன்றவை அட்டவணைப்படுத்தப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
அதிகரிக்கும் ரீசார்ஜ் கட்டணங்கள்… தேர்தலுக்குப் பின் நடக்கப்போகும் முதல் சம்பவம்!
Extraterrestrials

வேற்றுக் கிரகங்களில் உங்கள் வயதைக் காணக் கீழ்க்காணும் முகவரியைப் பயன்படுத்திப் பாருங்கள்

http://www.exploratorium.edu/ronh/age/

இந்தத் தளத்தில் பூமியில் இருக்கும் நம் எடையை உள்ளீடு செய்து, நாம் வேற்றுக் கிரகங்களில் இருந்தால், நம்முடைய எடை எவ்வளவு இருக்கும்? என்பதைக் கண்டறிவதற்கான இணைப்பும் அளிக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் எடையை உள்ளீடு செய்து, வேற்றுக் கிரகங்களில் உங்கள் எடை என்னவென்று அறிந்திடக் கீழ்க்காணும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம்.

https://annex.exploratorium.edu/ronh/weight/index.html

மேலும், இந்தத் தளத்தில் சூரிய மண்டலக் கட்டுமானம் (Build a Solar System), சூரிய மண்டலம் குறித்த கருத்துகள் (Views of Solar System) ஒன்பது கிரகங்கள் (Nine Planets) என்பது போன்ற தலைப்புகளில் சூரிய மண்டலம் மற்றும் பால்வீதிகள் குறித்த பல சுவையான தகவல்கள் எளிமையாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com