
தொழில்நுட்பம் மருத்துவ சேவைகளை எளிதாக்குகிறது. நோய் அறிதல், சிகிச்சை, நோயாளிகள் பராமரிப்பு மற்றும் மருத்துவ சேவைகளை அணுகுவதில் தொழில்நுட்பம் பெரும் பங்கு வைக்கிறது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மருத்துவத்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தி நோயாளிகளுக்கு சிறந்த சேவையை வழங்க உதவுகிறது.
1. நோய் அறிதல்
மருத்துவ தொழில்நுட்பங்கள் நோய்களைை முன்கூட்டியே கண்டறிவதற்கு உதவுகின்றன. இவை நோயாளிகளின் மருத்துவ வரலாற்றை அணுகுவதை எளிதாக்குகின்றது.
2. சிகிச்சை
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொற்றுகள், காயங்களை விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிகிறது. எக்ஸ்ரேக்கள், எம்ஆர்ஐ (MRI)க்கள் மற்றும் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் உடைந்த எலும்புகள் மற்றும் மற்ற காயங்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க உதவுகிறது.
மருத்துவ தொழில்நுட்பங்கள் நோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறைகளை வழங்குகின்றன. டெலிமெடிசின், நோயாளிகள் தங்களுடைய வீடுகளில் இருந்தே மருத்துவர்களை அணுகுவதற்கு உதவுகிறது.
3. டெலிமெடிசின் (Telemedicine)
தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, நோயாளிகள் தங்கள் வீடுகளிலிருந்தே மருத்துவர்களை அணுகுவதற்கு இந்த தொழில்நுட்பம் வெகுவாக உதவுகிறது. மருத்துவ தொழில் நுட்பங்கள், மருத்துவ சேவைகளை எளிதாக அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செய்கின்றன. மருத்துவர்கள் மின்னஞ்சல் மற்றும் தொலை தொடர்பு மூலம் நோயாளிகளை நேரடியாக தொடர்பு கொள்வதை சாத்தியமாக்கி உள்ளது.
4. இ - மருந்துகள் (e-prescriptions)
மருந்து சீட்டுகளை மின்னணு முறையில் அனுப்புவது நேரத்தையும், செலவையும் மிச்சப்படுத்துகிறது. இது பாரம்பரிய காகித மருந்து சீட்டின் டிஜிட்டல் பதிப்பாகும். செயல்திறன், துல்லியம் மற்றும் நோயாளியின் பாதுகாப்பை மேம்படுத்த இந்த செயல்முறை பெரும்பாலும் மின்னணு சுகாதார பதிவுகள்(EHR) மற்றும் மருந்தக அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்படுகிறது.
5. எலக்ட்ரானிக் ஹெல்த் ரெக்கார்ட்ஸ் (EHRs)
EHRகள் கணினிகளில் சேமிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இதனால் அவற்றை எளிதாக அணியக்கூடியதாகவும், பகிரக்கூடியதாகவும் ஆக்குகிறது. இந்த தொழில்நுட்பம், மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. தானியங்கி பில்லிங் செயல்முறைகள் பணம் செலுத்துவதை எளிதாக்குகிறது.
நோயாளிகளுடைய மருத்துவ வரலாறு, மருந்துகள், ஒவ்வாமை, ஆய்வக முடிவுகள், கதிரியக்கவியல் படங்கள் மற்றும் பல தகவல்களை டிஜிட்டல் முறையில் சேமித்து வைப்பதன் மூலம் மருத்துவர்களை எளிதாக அணுகவும் சிகிச்சை பெறவும் உதவுகிறது.
6. ஸ்மார்ட் சாதனங்கள் (Smart devices)
ஸ்மார்ட் சாதனங்கள் நோயாளிகளின் உடல் நலத்தை கண்காணிக்க உதவுகின்றன. நோயாளிகளின் உடல்நலத் தரவுகளை சேகரித்து மருத்துவர்களுக்கு உடனடியாக அனுப்ப உதவுகின்றன. புதிய சிகிச்சைகள் மற்றும் நோயறிதல் முறைகளை மேம்படுத்த உதவுகிறது. தொலைதூர நோயாளி கண்காணிப்பு, தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை மற்றும் நாள்பட்ட நிலைமைகளின் மேம்பட்ட மேலாண்மை ஆகியவற்றை செயல்படுத்துகிறது. அவை அணியக்கூடிய சென்சார்கள் மற்றும் குளுக்கோஸ் மானிட்டர்கள் முதல் ஸ்மார்ட் இன்ஹேலர்கள் மற்றும் இணைக்கப்பட்ட இன்சுலின் பம்புகள் வரை உள்ளன.