உங்கள் கவனமே உங்கள் சக்தி: டோபமைன் ஃபாஸ்டிங் 2.0 ஒரு முழுமையான பார்வை!

dopamine fasting 2.0
dopamine fasting 2.0
ம.வசந்தி

மங்கையர் மலரின் நீண்டகால வாசககயான எனக்கு, புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். ஊக்கப்படுத்துவதும் உற்சாகப்படுத்துவதும் செயலற்றவர்களையும் ,செயல்பட வைக்கும் என்பதால், மோட்டிவேஷன் கட்டுரைகள் எழுவது மிகவும் பிடித்தமான ஒன்று .எனது எண்ணங்கள் நேர்மறையான சிந்தனை கொண்ட   கல்கி குழுமத்தோடு ஒன்றிப் போவதால் அவர்களுடன் கைகோர்த்து வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

Updated on

தொழில்நுட்பம் அதி விரைவாக வளர்ந்து வரும் இன்றைய டிஜிட்டல் உலகில் ஒவ்வொருவரின் கவனமும் (Attention) சிதறடிக்கப்பட்டு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும்போதே நமது மூளை whatsapp நோட்டிபிகேஷன் பார்ப்பது, இமெயிலை சரி பார்ப்பது, ரீல்ஸ் ஸ்க்ரோல் செய்வது என எப்போதும் ஒரு தூண்டுதலுடன் தேடிக்கொண்டே இருக்கிறது. இதிலிருந்து விடுபட தற்போது ட்ரெண்ட் ஆகி வரும் டோபமைன் ஃபாஸ்டிங்’ (Dopamine Fasting 2.0) என்ற புதிய முறை நடைமுறை குறித்து இப்பதிவில் காண்போம்.

டோபமைன் ஃபாஸ்டிங் 1.0 VS 2.0

ஸ்மார்ட் ஃபோனையும் சமூக வலைதளங்களையும் (No phones) பயன்படுத்தாமல் இருப்பது மட்டுமே ஆரம்பகாலங்களில் டோபமைன் ஃபாஸ்டிங்காக இருந்தது. ஆனால் டிஜிட்டல் உலகம் அதி விரைவான வளர்ச்சியை எட்டியுள்ளதால் இப்போது 2.0 பதிப்பு ஒரே நேரத்தில் ஒரே வேலையை மட்டும் முழுமையாக முழு கவனத்துடன் செய்யும் பழக்கத்தை வலியுறுத்தும் 'மோனோடாஸ்கிங்' (Monotasking) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் 'யாரும் பர்பெக்ட் இல்லை' என்பதால் மூளையை ஒருநிலைப்படுத்த இந்த முறை மிகவும் அவசியமாக இருக்கிறது.

மோனோடாஸ்கிங் (Monotasking) கவனக்குவிப்பின் ரகசியம்

நமது மூளை ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும்போது அதாவது மல்டிடாஸ்கிங் (Multitasking) முறையால் விரைந்து சோர்வடைந்ததால், இதற்கு மாற்றாக மோனோடாஸ்கிங் முறை வந்தது.

* ஒரு நேரத்தில் ஒரு வேலை மட்டும் பார்ப்பது

உதாரணமாக உணவு உண்ணும் போது உணவின் சுவையை மட்டும் ரசிப்பதற்காக டிவி பார்க்காமல் இருப்பது.

* ஆழமாக வேலை பார்த்தல் (Deep work)

முக்கியமான வேலைகளை செய்யும்போது டிவி, மொபைல், டேப், லேப்டாப் போன்ற அனைத்து டிஜிட்டல் கருவிகளையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டு முழுமையாக அந்த வேலையில் மூழ்கிவிடுவது.

அசாதாரண பழக்கங்கள்

குறித்த நேரத்தில் எழவேண்டும் என்பதற்காக சிலர் 6:03, 6:12 என விசித்திரமான நேரங்களில் அலாரம் வைக்கும் சிறு மாற்றங்கள் கூட மூளையை விழிப்புடன் வைத்திருக்கும்.

மாற்றத்தின் அவசியம்

தொடர்ந்து டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்துவதால் நமது மூளையில் சுரக்கும் டோபமைன் அளவு சீரற்றதாக மாறி விரைவாக சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆகவே உறவுகளிலும் வாழ்க்கையிலும் சுவையை கூட்ட அன்றாட செயல்களில் விசித்திரமான அல்லது ‘பெய்ஜ் ஃபிளாக்’ (BEIGE FLAG) போன்ற பழக்கங்களைச் சேர்ப்பது நல்ல பலன் அளிக்கும்.

இதையும் படியுங்கள்:
மொபைல் தண்ணியில விழுந்துடுச்சா.. இந்த 5 தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க போன் காலி ஆகிடும்!
dopamine fasting 2.0

நடைமுறைப்படுத்தும் முறை

*திடீர் மௌனம்

ஒரு வார்த்தையில் பதில் அளிப்பது சிலருக்கு எரிச்சலை தந்தாலும், மன அமைதிக்கு தேவையற்ற பேச்சை குறைப்பது உதவிகரமாக இருக்கும்.

*திரை நேரத்தைக் குறைத்தல்

குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் போனை தொடாமல் இருப்பது.

*தனித்துவத்தைப் பாராட்டுதல்

சில 'மொக்கையான' பழக்கங்கள் உங்களது வாழ்க்கை துணையிடமோ அல்லது உங்களிடமோ இருந்தால் அதற்காக கோபப்படாமல் ரசிக்க ஆரம்பித்தால் அதுவே உங்களை தனித்துவமாக (unique) மாற்றிவிடும்.

இறுதியாக நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறிய செயலோ அல்லது பெரிய செயலோ எதுவானாலும் அதில் முழுமையாக இருப்பதை குறிப்பதே, டோபமைன் ஃபாஸ்டிங் 2.0 ஆகும். இது உலகை தவிர்ப்பது அல்ல என அறிந்து கொண்டால் உங்களை ஒரு சிறந்த ‘கிரீன்ஃபிளாக்’ (Green Flag) நபராக மாற்றிவிடும்.

logo
Kalki Online
kalkionline.com