மொபைல் தண்ணியில விழுந்துடுச்சா.. இந்த 5 தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க போன் காலி ஆகிடும்!

phone water damage
phone water damage
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on

நாம் பாத்ரூம் செல்லும்போதோ அல்லது வெளியே மழை பெய்யும்போதோ எதிர்பாராத விதமாக போன் தண்ணீரில் விழுந்துவிடுவது ரொம்பவே சகஜமான ஒரு விஷயம்தான். அப்படி ஒரு விபத்து நடந்தவுடன் நமக்கு முதலில் பெரும் பதற்றம் வந்துவிடும். இவ்வளவு காசு கொடுத்து வாங்கிய போன் வீணாகிவிட்டதே என பயந்துபோய், நாமே சுயமாக சில பல வைத்தியங்களை செய்ய ஆரம்பித்துவிடுவோம். 

ஆனால் அப்படி பதற்றத்தில் நாம் செய்யும் சில சின்னச் சின்ன தவறுகள், போனை முற்றிலுமாக நாசமாக்கிவிடும். அப்படி ஈரமான போனை காப்பாற்ற நாம் செய்யவே கூடாத 5 முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

1. உடனே ஆன் செய்ய வேண்டாம்!

போன் தண்ணீரில் விழுந்தவுடன் பலரும் செய்யும் முதல் பெரிய தப்பு, அது இன்னும் வேலை செய்கிறதா என்பதை செக் செய்ய உடனே பவர் பட்டனை அழுத்தி ஆன் செய்து பார்ப்பதுதான். இது ரொம்பவே ஆபத்தான ஒரு விஷயம். உள்ளே தண்ணீர் இருக்கும்போது போனை ஆன் செய்தாலோ அல்லது சார்ஜர் போட்டு செக் செய்தாலோ, உள்ளே ஷார்ட் சர்கியூட் ஆகி மதர்போர்டு முழுமையாக எரிந்துபோக அதிக வாய்ப்புள்ளது. போன் ஆஃப் ஆகியிருந்தால் அதை அப்படியே விட்டுவிடுவதுதான் ரொம்பவே நல்லது.

2. வேகமாக குலுக்க வேண்டாம்!

ஸ்பீக்கர் மற்றும் சார்ஜிங் போர்ட்டில் இருக்கும் தண்ணீரை வெளியே எடுக்கிறேன் என நினைத்துக்கொண்டு போனை பலமாக குலுக்குவார்கள். இப்படி செய்வதால், போனின் ஓரத்தில் இருக்கும் தண்ணீர் கூட மெயின் போர்டுக்குள் ரொம்ப ஆழமாக செல்ல வாய்ப்புள்ளது. இது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்.

3. ஹேர் ட்ரையர் பயன்படுத்தாதீர்கள்!

முடி காயவைக்க பயன்படுத்தும் ஹேர் ட்ரையரை வைத்து போனில் சூடான காற்றை அடிப்பது இன்னொரு மிகப்பெரிய தவறு. அந்த அதீத வெப்பம், போனின் உள்ளே இருக்கும் சின்ன சின்ன எலக்ட்ரானிக் பாகங்களை முற்றிலுமாக உருக்கிவிடும். மேலும் அந்த காற்றின் வேகம் தண்ணீரை இன்னும் உள்ளே தள்ளிவிடும்.

இதையும் படியுங்கள்:
Rice Capital |இந்தியாவின் அரிசி தலைநகரம் என அழைக்கப்படும் மாநிலம் எது?
phone water damage

4. அரிசி டப்பாவில் வைக்காதீர்கள்!

இது ரொம்ப காலமாக நம் ஊரில் பலரும் செய்து வரும் ஒரு பெரிய வழக்கம். ஈரமான போனை அரிசி பானைக்குள் வைத்தால் தண்ணீர் உறிஞ்சப்படும் என்பது ஒரு தவறான நம்பிக்கை. அரிசியில் உள்ள சின்ன தூசுகள் மற்றும் மாவு துகள்கள் போனின் கேமரா லென்ஸ் மற்றும் சார்ஜிங் போர்ட்டுக்குள் சென்று நிரந்தரமான டேமேஜ் ஏற்படுத்திவிடும். இதற்கு பதிலாக சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளை பயன்படுத்துவது ரொம்பவே ஸ்மார்ட்டான சாய்ஸ்.

5. எல்லா பட்டன்களையும் அழுத்தாதீர்கள்!

போன் ஈரமாக இருக்கும்போது வால்யூம் பட்டன் மற்றும் இதர பட்டன்களைத் தொடர்ந்து அழுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பட்டன்களுக்கு இடையே இருக்கும் மிகச் சிறிய இடைவெளி வழியாக தண்ணீர் எளிதாக உள்ளே சென்றுவிடும். அதனால் போனை முடிந்தவரை தொடாமல் அப்படியே பாதுகாப்பாக வைத்திருப்பது மிக முக்கியம்.

இதையும் படியுங்கள்:
வாட்ஸ்அப்பை பயன்படுத்த இனி போன் நம்பர் தேவையில்லை.! புதிய வசதி விரைவில் அறிமுகம்.!
phone water damage

போன் தண்ணீரில் நனைந்தவுடன் ஒரு நல்ல காட்டன் துணியை வைத்து வெளிப்புறத்தை மெதுவாக துடைக்க வேண்டும். அதன்பிறகு சிம் கார்டு மற்றும் மெமரி கார்டை பத்திரமாக வெளியே எடுத்துவிட்டு, நல்ல காற்றோட்டமான இடத்தில் காய வைக்க வேண்டும். ஒருவேளை போன் ஆன் ஆகவில்லை என்றால், நீங்களாகவே மெக்கானிக் ஆகிவிடாமல் உடனே ஒரு நல்ல சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்வதுதான் மிகச் சிறந்த வழி. 

logo
Kalki Online
kalkionline.com