Find My App மூலமாக இத்தனை விஷயங்கள் செய்யலாமா?

Find My App
Find My App

தன் பயனர்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்குவதில் சிறந்த நிறுவனமாக கருதப்படுவது ஆப்பிள் நிறுவனம். குறிப்பாக ஆப்பிள் சாதனங்களில் இருக்கும் Find My App என்கிற அம்சம் தொலைந்து போன போனை கண்காணிக்கவும் கண்டறியவும் உதவும் சிறந்த கருவியாகும். நாம் எதுபோன்ற ஆப்பிள் ப்ராடக்டுகளைப் பயன்படுத்தினாலும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தி அவற்றை கண்டறிய உதவியாக இருக்கும். இப்படி பல சூழ்நிலைகளில் ஆப்பிள் யூசர்களுக்கு இந்த கருவி உதவியாய் இருக்கும். 

நீங்கள் ஒரு ஐபோன் பயனராக இருந்தால் இதை உங்கள் சாதனத்தில் ஆக்டிவேட் செய்வது மிகவும் எளிது. இதை இணைப்பில் செய்ததும் உங்கள் சாதனத்தின் லொகேஷன் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது முழுவதும் ஜிபிஎஸ் தொடர்புடைய சேவை என்பதால், லொகேஷன் இயக்கத்தில் இருக்க வேண்டும்.

உங்கள் சாதனத்தில் இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்ய முதலில் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லுங்கள். பின்னர் அதில் உங்கள் பெயரை உள்ளிட்டு, அடுத்ததாக Find My என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் அதில் OK கொடுத்தால், Enable My Location மற்றும் Send Last Location என்பதை ஆக்டிவேட் செய்வதற்கான கோரிக்கை வைக்கப்படும். இதை நீங்கள் ஆக்டிவேட் செய்ததும் Share My Location என்பதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதன் பிறகு உங்கள் சாதனத்தில் Find My Device ஆக்டிவேட் ஆகிவிடும். 

இதையும் படியுங்கள்:
ஆப்பிள் வாட்ச் விற்பனைக்கு தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம். ஏன்?
Find My App

அதன் பிறகு உங்கள் கணக்கில் இயங்கிக் கொண்டிருக்கும் எல்லா ஆப்பிள் கேஜெட்டுகளையும் இதிலேயே நீங்கள் இணைத்துக் கொள்ளலாம். மற்ற சாதனங்களில் வேறு ஏதாவது கணக்கில் நீங்கள் பதிவிட்டிருந்தால், அதையும் இதில் சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் சரியாக செய்து முடித்ததும் உங்களின் மற்ற ஆப்பிள் சாதனங்களும் Find My Device அம்சத்துடன் இணைக்கப்பட்ட இடம். 

உங்கள் விருப்பம் போல நீங்கள் சேர்த்து டிவைஸ்களை நீக்க வேண்டும் என்றாலும் நீக்கிக் கொள்ளலாம். எனவே நீங்கள் ஐபோன் பயனராக இருந்தால் இந்த அம்சத்தை கட்டாயம் Enable செய்து கொள்ளுங்கள். பல சூழ்நிலைகளில் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com