Airplane Mode: இதுக்கெல்லாம் கூட பயன்படுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

Airplane Mode
Airplane Mode
Published on

பெரும்பாலான மக்களுக்கு தங்கள் மொபைல் சாதனத்தில் இருக்கும் ஏரோபிளேன் மோட் (Airplane Mode) பற்றி நன்கு தெரிந்திருக்கும். ஆனால் இது விமானப் பயணிகளுக்கு மட்டும் அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், ஏரோபிளேன் மோட் என்பது விமானத்தில் பயணம் செய்யும்போது மட்டும் பயன்படுத்தக்கூடிய அம்சம் அல்ல. இதை உங்கள் அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத்த முடியும்.

1. பேட்டரி ஆயுளை சேமிக்க:

ஸ்மார்ட்போனின் பேட்டரி நீண்ட நேரம் நீடித்திருக்க ஏரோபிளேன் மோட் (Airplane Mode) ஒரு சிறந்த வழி. பேட்டரியை உறிஞ்சும் அப்ளிகேஷன்களை இது திறம்பட கட்டுப்படுத்துகிறது. இந்த பயன்முறையை ஆன் (on) செய்வதன் மூலம் Wi-Fi, Mobile Data மற்றும் Bluetooth போன்ற அனைத்து தகவல் தொடர்பு செயல்பாடுகளையும் முடக்குகிறது. பேட்டரி குறைவாக இருக்கும்போது இது மிகவும் உதவியாக இருக்கும்.

2. ஃபோன் சார்ஜ் ஆகும் வேகத்தை அதிகரிக்க:

போனின் பேட்டரி முற்றிலும் தீர்ந்துபோகும் போது, அதை உடனடியாக சார்ஜ் செய்ய ஒரு சிறந்த வழி, உங்கள் போனை சார்ஜரில் போடுவதற்கு முன், அதனை ஏரோபிளேன் மோடுக்கு (Airplane Mode) மாற்றுவது. ஆய்வுகளின்படி, ஏரோபிளேன் மோடில் போன்கள் 4 மடங்கு வேகமாக சார்ஜ் ஆகுமாம். இதைச் செய்வதன் மூலம், அறிவிப்புகளைச் சரிபார்ப்பது, அப்டேட்களை (updates) தேடுவது மற்றும் நெட்வொர்க்குகளுடன் (networks) இணைப்பது போன்ற பல செயல்பாடுகளை போன் செய்வதில்லை. இதன் விளைவாக, போன் வேகமாக சார்ஜ் ஆகிறது.

3. ஒரு டிஜிட்டல் டிடாக்ஸ் (Digital Detox):

சில சமயங்களில், நாம் டிஜிட்டல் உலகத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். அன்புக்குரியவர்களுடன் இருக்க, வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட, ஏரோபிளேன் மோட் (Airplane Mode) உதவும்.

இதையும் படியுங்கள்:
சந்திர கிரகணம் 2025: நிலா ஏன் சிகப்பாக மாறுகிறது? ரத்த நிலாவின் பின்னணியில் உள்ள மர்மம் என்ன?
Airplane Mode

இதன் மூலம் சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்களிலிருந்து வரும் தொந்தரவுகள் இல்லாமல் நீங்கள் சிறிது நேரம் அமைதியாக இருக்கலாம்.

4. கவனம் சிதறாமல் இருக்க:

கவனத்துடன் இருப்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. வேலை, படிப்பு அல்லது ஒரு கிரியேட்டிவ் ப்ராஜெக்ட் என எதுவாக இருந்தாலும், கவனச்சிதறல்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. அந்த கவனச்சிதறல்களை எதிர்த்துப் போராடுவதற்கு ஏரோபிளேன் மோட் ஒரு நல்ல கருவியாக இருக்கும். இணைய இணைப்பை துண்டிப்பதன் மூலம், நீங்கள் எளிதாக குறிப்பிட்ட பணியில் கவனம் செலுத்த முடியும்.

5. தேவையற்ற கதிர்வீச்சைத் தவிர்க்க:

மொபைல் போன் கதிர்வீச்சு உடல்நலக் கேடு விளைவிக்குமா என்பது விவாதத்திற்குரியது. ஆனால் ஏரோபிளேன் மோடை (Airplane Mode) இயக்குவதன் மூலம் உங்கள் போனின் கதிர்வீச்சு வெளியேற்றத்தை குறைக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் மொபைல் மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்க 4 டிப்ஸ்!
Airplane Mode

6. டேட்டா (data) மற்றும் பணத்தை சேமிக்க:

உங்களுக்கு ஒரு லிமிடெட் டேட்டா பிளான் (limited data plan) இருந்தால், ஏரோபிளேன் மோடை ஆன் செய்வது உங்கள் டேட்டா பயன்பாட்டை நிர்வகிக்கவும், எதிர்பாராத கட்டணங்களைத் தவிர்க்கவும் உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com