
Gemini Nano Banana AI 3D Figurines: வணிக உலகில் புதுமை என்றுமே முக்கியமானது. நானோ பனானா AIன் 3D சிற்பங்கள் புரட்சிகரமான திறன்களை வழங்குகின்றன. இந்த தொழில்நுட்பம் சாதாரண புகைப்படங்களை மாற்றி அமைக்கக்கூடிய 3D மாதிரிகளாக மாற்றுகிறது. இது பிராண்டுகளுக்கு வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், வாங்குபவர்களுடனான உறவுகளை வலுப்படுத்தவும் உதவும். இவற்றை பயன்படுத்தும் வணிகங்கள் தனித்து நிற்கும்.
1) ஜெமினி நானோ பனானா AI 3D ஃபிகரைன்ஸ் (Gemini Nano Banana AI 3D Figurines) என்றால் என்ன?
நானோ பனானா என்பது கூகுளின் மேம்பட்ட AI பட எடிட்டரான ஜெமினி 2.5 ஃபிளாஷ் இமேஜுக்கு வைக்கப்பட்ட பெயராகும். இது எந்த ஒரு படத்தையும் பதிவேற்றினால் AI சிறப்பாக செயல்பட்டு அழகான 3D படங்களை உருவாக்கும். ஆடைகள், முகபாவனைகள் மற்றும் பின்னணிகள் போன்ற சிக்கலான விவரங்களை அழகாக படம் பிடிக்கிறது. அதன் அணுகல், மேம்பட்ட திறன்கள், இலவசமாகவும், பயன்படுத்த எளிதாகவும் இருப்பதால் இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் அதிக பங்களித்துள்ளது.
2) உங்கள் சொந்த ஜெமினி நானோ பனானா AI 3D ஃபிகரைன்ஸை எவ்வாறு உருவாக்குவது?
விரைவான மற்றும் பாதுகாப்பான அணுகலுக்கு அதிகாரப்பூர்வ கூகுள் ஏஐ ஸ்டுடியோ வலைதளத்தை பார்வையிட்டு நம் கூகுள் கணக்கில் உள் நுழையவும்.
நானோ வாழைப்பழ கருவியை (Try Nano Banana) தேர்வு செய்யவும். இது படங்கள் உருவாக்கத்திற்கான ஜெமினி 2.5 ஃப்ளாஷ் படத்தளத்திற்கு நம்மை எளிதாக வழி நடத்தும்.
அடுத்ததாக நாம் விரும்பும் புகைப்படத்தை பதிவேற்ற "+"பட்டனை கிளிக் செய்யவும் அல்லது எந்த புகைப்படங்களையும் பயன்படுத்தாமல் ஒரு படத்தை வடிவமைக்க ப்ராம்ட்டை (prompt) டைப் செய்யவும்.
உயிரோட்டமான முடிவுகளுக்கு ஒரு படத்தை பதிவேற்றவும். பின்பு அதை சேகரிக்கக் கூடிய சிலையாக மாற்றுவதற்கான வழிமுறைகளை AIக்கு வழங்கவும். தெளிவான விவரங்கள் வழங்குவதன் மூலம் AI சிறப்பாக செயல்பட்டு உயிரோட்டமான அமைப்பு, துல்லியம் போன்றவை நாம் உருவாக்கும் சிலையின் யதார்த்தத்தை மேம்படுத்தும்.
சிலை உருவாக்கப்பட்ட பிறகு, அதை பதிவிறக்கம் செய்து நமக்கு பிடித்த சமூக ஊடக தளங்கள், வலைதளங்கள் அல்லது தனிப்பட்ட கேலரிகளில் பகிரலாம்.
3) ஜெமினி நானோ பனானா AI 3D ஃபிகரைன்ஸ் ட்ரெண்ட் ஏன் இவ்வளவு பிரபலமானது?
அதன் யதார்த்தமான படம் பிடிப்பதும், AI சிறப்பாக செயல்பட்டு அழகான 3D படங்களாக விரைவாக மாற்றும் திறனும், அதனுடைய அணுகல் மற்றும் மேம்பட்ட திறன்கள் காரணமாகவும் பிரபலமாக உள்ளன. ஸ்டுடியோ தரமான, ஹைப்பர்-ரியல் 3டி சிலை படங்களை இலவசமாக சில நொடிகளில் உருவாக்க முடிகிறது.
முக்கியமாக பயன்படுத்த எளிதாகவும், இலவசமாகவும் இருப்பதால் மிகவும் பிரபலமாகியுள்ளது. பயனர்கள் ஆர்வமுடன் தங்களுக்கு பிடித்த கதாபாத்திரங்கள், செல்லப் பிராணிகள் மற்றும் பயணங்களின் புகைப்படங்களை AI உருவாக்கிய 3D வடிவங்களாக மாற்றத் தொடங்கினர். அவர்களின் படைப்புகளை முக்கிய சமூக ஊடக சேனல்களில் பரவலாக பகிர்ந்து கொண்டனர்.
படைப்பாளிகள், செல்வாக்கு செலுத்துபவர்கள், அன்றாட பயனர்கள் நானோ வாழைப்பழங்களை டிக்டாக், இன்ஸ்டாகிராம், யூடியூபில் இடுகை இடுவதன் மூலம் விரைவாகப் பரவின. இந்த மோகம் கிட்டத்தட்ட ஒரே இரவில், மிக விரைவில் தீயாக எங்கும் பரவியது.
4) ஜெமினி நானோ பனானா AI 3D ஃபிகரைன்ஸ் -கான படைப்பு யோசனைகள்:
தெளிவான, உயர்தர புகைப்படங்களை பயன்படுத்தவும். மங்கலான அல்லது இருண்ட புகைப்படங்களை தவிர்க்கவும். நல்ல தெளிவான படங்களை இதில் பதிவேற்றினால் AI சிறப்பாக செயல்பட்டு அழகான 3D படங்களை உருவாக்கும்.
3D மாதிரிகளை உருவாக்க பல முறைகள் உள்ளன. அவற்றில் 3டி ஸ்கேனர்கள், CAD மென்பொருள், மாடலிங் மென்பொருள் மற்றும் புகைப்பட வரைபடவியல் ஆகியவை அடங்கும். 3D ஸ்கேனர்கள் இயற்பியல் பொருட்களை ஸ்கேன் செய்து மென்பொருளை பயன்படுத்தி அவற்றை 3D மாதிரிகளாக மாற்றலாம்.
Substance 3D sampler போன்ற புகைப்பட வரைபடக் கருவிகளை பயன்படுத்தி 3டி பொருட்களை தானாகவே உருவாக்கலாம்.
பல்வேறு கோணங்களில் இருந்து பல புகைப்படங்களை எடுத்து, மென்பொருளைப் பயன்படுத்தி அவற்றை ஒரு 3டி மாதிரியாக உருவாக்கலாம்.