கட்டுமானப் புரட்சி: துருப்பிடிக்காத GFRP கண்ணாடி நார் கம்பிகள் நாளைய கட்டிடங்களுக்கு புதிய முகம்!

gfrp-glass-fiber-
gfrp-glass-fiber-
Updated on

ன்றைய நவீன உலகில் காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. எல்லாத் துறைகளிலும் பல புதிய கோணங்களில் சிந்தித்து, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் முயற்சிகளில் இன்றைய இளைஞர்கள் ஈடுபட்டு வெற்றி பெற்று வருகின்றனர். அந்த புதிய தொழில்நுட்ப அலை கட்டுமானத்தொழிலையும் விட்டு வைக்கவில்லை. அதனால் கட்டுமானத்துறை இன்று புதிய பரிணாமங்களை அணிந்து வருகிறது.

ஒருகாலத்தில் கல், மரம், இரும்பு என்ற மூன்று அடிப்படைப் பொருட்களைச் சுற்றியே கட்டுமான உலகம் இயங்கியது. இன்று அறிவியல் தொழில்நுட்பம் தனது எல்லைகளை விரிவுபடுத்தி, கட்டிடங்களின் ஆயுளையும் தரத்தையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்கிறது. அந்த வகையில், கோவையை மையமாகக்கொண்டு தமிழ்நாட்டின் கட்டுமானத் துறையில் மெதுவாக ஒரு அமைதியான புரட்சி உருவாகி வருகிறது. அந்தப் புரட்சியின் பெயர் — Glass Fibre Reinforced Polymer Rods, சுருக்கமாக GFRP அல்லது “கண்ணாடி நார் கம்பிகள்”.

எதிர்கால கட்டுமானத்தின் புதிய முகம்

வெளிப்படையாகப் பார்த்தால் இது சாதாரண இரும்புக் கம்பியைப் போலவே தோன்றலாம். ஆனால் அதன் உள்ளமைப்பில் மறைந்திருப்பது எதிர்கால கட்டுமான அறிவியல். ஆயிரக்கணக்கான மெல்லிய கண்ணாடி நார்களை polymer resin-களுடன் இணைத்து உருவாக்கப்படும் இந்தக் கம்பிகள், எடையில் மிக இலகுவானவை. ஆனால் வலிமையில் அதிசயிக்க வைப்பவை. முக்கியமாக, இரும்பைப் போல துருப்பிடிக்காது என்பதே இதன் மிகப் பெரிய சிறப்பு.

கடலோரப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகள், பாலங்கள், நீர்த் தொட்டிகள், தொழிற்சாலைகள் போன்ற கட்டிடங்களில் இரும்புக் கம்பிகளின் மிகப் பெரிய எதிரி — துரு. காலப்போக்கில் அது கட்டிடத்தின் உள்ளமைப்பை மெதுவாக சேதப்படுத்தும். ஆனால் Glass Fibre Rods அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றன. மழை, ஈரப்பதம், உப்பு கலந்த காற்று, வேதிப்பொருள் தாக்கம் — எதுவாக இருந்தாலும் அவை தங்கள் வலிமையை இழக்காமல் நீண்ட காலம் நிலைத்திருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
சிமெண்டிற்கு மாற்றுப் பொருளாகும் கடல் சிப்பிகள்.. கட்டுமானத் துறையை வியக்க வைத்த ரகசியம்!
gfrp-glass-fiber-

பாதுகாப்பும் செயல்திறனும்

இதன் இன்னொரு சிறப்பு, மின்சாரத்தை கடத்தாத தன்மை. அதனால் மின் நிலையங்கள், ஆய்வகங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் பாதுகாப்பான reinforcement material ஆக இதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். மேலும் எடை குறைவாக இருப்பதால் கட்டுமான வேகமும் அதிகரிக்கிறது. தொழிலாளர்கள் எளிதாக எடுத்துச் செல்ல முடிவதால் நேரமும் மனித உழைப்பும் மிச்சமாகின்றன.

கோவையில் உருவாகும் புதிய தொழில்துறை அடையாளம்

உலகின் பல முன்னேறிய நாடுகளில் ஏற்கனவே இந்த GFRP தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் தொழில்நகரமான கோவை, இந்த புதிய தொழில்நுட்பத்தை உற்பத்தி மற்றும் பயன்பாட்டு நிலைகளில் முன்னெடுத்து வரும் நகரமாக உருவெடுத்து வருகிறது.

பாரம்பரிய தொழில்துறைகளுக்கு பெயர் பெற்ற கோவை, இப்போது composite construction materials துறையிலும் புதிய அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. கோவையில் இயங்கும் சில முன்னோடி நிறுவனங்கள், கட்டுமானத் துறைக்கான Glass Fibre Reinforcement பொருட்களை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Dakshin Ultrabar – நம்பிக்கையை உருவாக்கும் புதிய முயற்சி

அவற்றில் குறிப்பிடத்தக்க பெயராக உருவெடுத்து வருவது Dakshin Ultrabar Manufacturing. GFRP rebar தொழில்நுட்பத்தை இந்திய கட்டுமான சந்தைக்கு எளிமையாகவும் நம்பகமாகவும் கொண்டு செல்லும் முயற்சியில் இந்த நிறுவனம் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது.

தரநிலைகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் இவர்களின் கண்ணாடி நார் கம்பிகள், நீண்ட ஆயுள் மற்றும் corrosion resistance ஆகிய அம்சங்களால் கட்டுமான வல்லுநர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இதையும் படியுங்கள்:
அடுப்பங்கறை அபாயம்: பிளாஸ்டிக் பாத்திரங்களில் ஒளிந்திருக்கும் ஆரோக்கியக் கேடு!
gfrp-glass-fiber-

நாளைய கட்டுமான உலகிற்கு ஒரு முன்னோடி

மற்றொரு முக்கிய அம்சம், கட்டுமானத் தேவைக்கேற்ப custom அளவுகள் மற்றும் வடிவங்களில் GFRP bars தயாரிக்கும் திறன். இதன் மூலம் வீட்டு கட்டுமானம் முதல் தொழிற்சாலை, பாலம், precast structures வரை பல துறைகளில் பயன்பாட்டு வாய்ப்புகள் விரிவடைந்துள்ளன.

“இரும்பு மட்டுமே reinforcement” என்ற பழைய எண்ணத்திலிருந்து “அறிவியல் சார்ந்த நீடித்த கட்டுமானம்” என்ற புதிய சிந்தனைக்குத் தமிழ்நாட்டை நகர்த்தும் முயற்சியில், கோவையும் Dakshin Ultrabar போன்ற நிறுவனங்களும் அமைதியான மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com