Google Map-ல் காட்டுத் தீ.. ஐயையோ! 

Google Map
Google Map

கூகுள் மேப் செயலியில் நாம் இருக்கும் இருப்பிடத்தின் வானிலை நிலவரம் மற்றும் காற்றின் தர விவரங்களை சரி பார்ப்பதற்கு புதிய அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. 

உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு கூகுள் மேப்ஸ் பல வழிகளில் உதவுகிறது. நீங்கள் தெரியாத இடத்திற்கு சென்றால் கூட, அங்கு எதுபோன்ற விஷயங்கள் சிறப்பாக இருக்கும், எங்கெங்கு சுற்றிப் பார்க்கலாம் போன்ற விவரங்கள் அனைத்தையும் கூகுள் மேப் நமக்கு காட்டிக் கொடுத்துவிடும். இப்படி கூகுள் மேப்பின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இருக்கும் இடத்தின் வானிலையை அறிந்து கொள்ளும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

அதாவது நீங்கள் ஒரு இடத்தைப் பற்றி கூகுள் மேப்பில் தேடும்போது, வானிலை ஐகானை கிளிக் செய்து, அந்த இடத்தில் தற்போது வானிலை எப்படி இருக்கிறது என்ற முன்னறிவிப்பைப் பெறலாம். இதன் மூலமாக வானிலை விவரங்களையும் காற்றின் தர குறியீட்டையும் எளிதாகப் பெற முடியும். 

புதிதாக அப்டேட் செய்யப்பட்ட கூகுள் மேப் செயலில் இப்போது மேல் வலது மூலையில் வானிலை ஐகான் ஒன்று இருக்கும். அது வானிலை விவரங்களை உடனடியாக தெரிந்துத் கொள்ளும் அணுகலை வழங்குகிறது. இந்த அம்சம் மூலமாக நீங்கள் உலகில் எந்த இடத்தைப் பற்றி தேடினாலும், அந்த இடத்தின் வானிலை நிலவரங்களை உங்களால் அறிய முடியும். 

இந்த அம்சத்தைப் பயன்படுத்த நீங்கள் முதலில் என்ன செய்ய வேண்டும் என்றால், உங்களது கூகுள் மேப்ஸ் செயலியை அப்டேட் செய்யுங்கள். பின்னர் உங்கள் மொபைலில் மேப் செயலியைத் திறந்து நீங்கள் எந்த இடத்தைப் பற்றி தேட விரும்புகிறீர்களோ அதைத் தேடவும். அப்போது மேல் இடது மூலையில் தெரியும் வானிலை ஐகானை கிளிக் செய்தால், அந்தப் பகுதியின் முழு வானிலை நிலவரங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த வானிலை நிலவரங்கள் weather.com தளத்திலிருந்து பெறப்படுவதாக சொல்லப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
கார் டயரில் நைட்ரஜன் பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா?
Google Map

சில குறிப்பிட்ட தேதியில் நீங்கள் பயணிக்க திட்டமிடுகிறீர்கள் என்றால், இந்த அம்சத்தைப் பயன்படுத்தி நீங்கள் பயணம் செய்யும் நேரத்தில் வானிலை எப்படி இருக்கும்? காற்றின் தரம் எப்படி இருக்கும்? போன்ற யோசனைகளைப் பெற முடியும். அதேபோல எங்காவது காட்டு தீ பற்றி எரிகிறது என்றால், அதைப் பற்றிய விவரங்களையும் கூகுள் மேப்பில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் கூகுள் மேப்பில் லைவ் லொகேஷனை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள முடியும். 

இப்படி பல புதிய அம்சங்கள் கூகுள் மேப் செயலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி உங்களுடைய பயணங்களை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com