உங்கள் பழைய புகைப்படங்களை இனி வீடியோவாக மாற்றலாம்! - கூகுளின் புதிய AI அம்சம்!

Google Photos
Google PhotosImg Credit: internetprotocol.co
Published on

உங்களது போனில் உள்ள பழைய புகைப்படங்களை அடிக்கடிப்  பார்க்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அந்தப் புகைப்படங்களுக்கு மேலும் அழகுபடுத்தினால் நன்றாக இருக்கும் என நினைத்திருக்கிறீர்களா? கவலை வேண்டாம்! புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி, உங்கள் புகைப்படங்களை வீடியோவாகவும், கலைநயம் மிக்க புகைப்படங்களாகவும், அனிமேஷனாகவும் மாற்றும் வசதியை கூகிள் கொண்டு வந்துள்ளது. இந்த அம்சங்கள் பற்றியும் அவற்றை எப்படி பயன்படுத்துவது, இதில் உள்ள வசதிகள் என்னென்ன என்பதைப் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

கூகிள் போட்டோஸ் புகைப்படத்தை வீடியோவாக மாற்றுதல் (Photo to video) மற்றும் ரீமிக்ஸ் (Remix) என இரண்டு முக்கிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு அம்சங்களும் ஜெனரேட்டிவ் AI (Generative AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, புகைப்படங்களுக்குப் புது வடிவம் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் தற்போது சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் உலகெங்கிலும் உள்ள பயனர்களுக்கும் இது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1. புகைப்படங்களை வீடியோவாக மாற்றுதல் (Photo to video):

இந்த அம்சத்தின் மூலம், ஒரு புகைப்படத்தை, 6 விநாடிகள் கொண்ட சிறிய வீடியோவாக மாற்ற இயலும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, புகைப்படத்தில் உள்ள சிறு சிறு அசைவுகளை இது உருவாக்கும். ஒரு செல்ஃபி புகைப்படங்கள் முதல் இயற்கை காட்சிகள், குடும்பப் புகைப்படங்கள் வரை என எந்தப் புகைப்படங்களையும் வீடியோவாக மாற்றலாம். நீங்கள் உருவாக்கிய இந்த வீடியோவில் ஒரு வாட்டர்மார்க் (Watermark) சேர்க்கப்படும், இதன் மூலம் அது AI மூலம் உருவாக்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

2. கலைநயமிக்க புகைப்படங்கள் (Remix):

உங்கள் புகைப்படங்களுக்கு அனிமேஷன், காமிக்ஸ், ஓவியம் அல்லது 3D அனிமேஷன் போன்ற கலைநயமிக்க தோற்றத்தைக் கொடுக்க ரீமிக்ஸ் அம்சம் உதவும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஸ்டைலைத் தேர்ந்தெடுத்தால் போதும், AI உடனடியாக உங்கள் புகைப்படத்தில் சின்ன சின்ன அசைவுகளைச் சேர்த்து அந்த ஸ்டைலுக்கு மாற்றும். இந்த அம்சம், புகைப்படங்களை விதவிதமான வடிவங்களில் உருவாக்க விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும்.

இதையும் படியுங்கள்:
டைனோசர்கள் வாழ்ந்த காலத்துக்கும் முற்பட்ட நீர்... உலகின் மிகப் பழமையான நீர்...
Google Photos

இந்த புதிய அம்சங்களை எளிதாக அணுகுவதற்காக, கூகிள் போட்டோஸ், Create Tab என்ற ஒரு புதிய பகுதியைச் சேர்க்கிறது. இதில், புகைப்படத்தை வீடியோவாக மாற்றுதல், ரீமிக்ஸ், கொலாஜ்கள் மற்றும் ஹைலைட் வீடியோக்கள் போன்ற அனைத்து அம்சங்களும் ஒரே இடத்தில் இருக்கும். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இது அமெரிக்காவில் முதலில் அறிமுகப்படுத்தப்படும்.

AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, Google Veo 3 தொழில்நுட்பம் மூலம் இந்த வீடியோக்களிலும், புகைப்படங்களிலும் SynthID என்ற கண்ணுக்குத் தெரியாத டிஜிட்டல் வாட்டர்மார்க் சேர்க்கப்படும். இதன்மூலம், உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியும்.

இதையும் படியுங்கள்:
AI இடம் கேள்வி கேட்டால் எவ்வளவு தண்ணீர் செலவாகும்?
Google Photos

இந்த புதிய வசதிகள் விரைவில் உலகெங்கும் உள்ள பயனர்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் நினைவுகளைப் புதுப்பிக்கவும், புகைப்படங்களுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுக்கவும் இந்த வசதிகள் நிச்சயம் உதவியாக இருக்கும். இது குறித்த உங்கள் கருத்துகளை கமெண்டில் சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com