இனி போன் பேசக்கூட ஒரு ஆள் வந்தாச்சு! Google Gemini கொண்டு வந்த புதிய அப்டேட்!

தொழில்நுட்ப வளர்ச்சியில் புதிய பரிமாணமாக, கூகுள் நிறுவனம் தற்போது புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது!
கூகுள் ஜெமினி ஏஐ
கூகுள் ஜெமினி ஏஐAI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

தொழில்நுட்ப வசதிகள் வளர வளர, நம்முடைய அன்றாட வாழ்க்கையும், உலகமும் மிக வேகமாக மாறி வருகின்றன. இந்த வளர்ச்சி மனித குலத்திற்குப் பல்வேறு நன்மைகளையும், அதே நேரத்தில் சில சவால்களையும் கொண்டு வந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ளவர்களுடன் நொடியில் தொடர்புகொள்ள முடிகிறது. வீடியோ கால்கள், சமூக ஊடகங்கள் உலகைச் சுருக்கிவிட்டன. வகுப்பறைக்குச் செல்லாமலேயே இணையம் (Internet) மூலம் உலகத்தரம் வாய்ந்த கல்வியைக் கற்க முடிகிறது. ஆன்லைன் ஷாப்பிங், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை (UPI, Net Banking) ஆகியவை வணிகத்தை எளிமையாக்கியுள்ளன. வீட்டில் இருந்தே வேலை செய்யும் (Work from Home) வசதி பெருகியுள்ளது.

அதிநவீன கருவிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் நோய்களைக் கண்டறிவதும், சிகிச்சை அளிப்பதும் எளிதாகி, மனித ஆயுள் நீண்டுள்ளது. பயண முன்பதிவு முதல் உணவு ஆர்டர் செய்வது வரை அனைத்தும் விரல் நுனியில் கிடைப்பதால் நேரம் மிச்சமாகிறது.

இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்புவது மிகவும் எளிதாகிவிட்டது.

இதற்கிடையே தொழில்நுட்ப வளர்ச்சியில் புதிய பரிமாணமாக, கூகுள் நிறுவனம் தற்போது புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது!

அதாவது, கூகுள் நிறுவனம் தனது ஜெமினி AI (Gemini AI)-ல் ‘கால் ஃபார் மீ’ (Call for Me) என்ற மிரளவைக்கும் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், உங்களுக்குப் பதிலாக இனி கூகுள் ஜெமினியே போன் கால்களை மேற்கொண்டு பேசும்.

கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், இனிமேல் நீங்கள் ஹோட்டலில் டேபிள் புக் செய்வதற்கோ அல்லது கஸ்டமர் கேருக்குப் போன் பேசுவதற்கோ இனிமேல் நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேசவேண்டுமோ, அதனை உங்களுக்காக அதுவே தானாக போன் செய்து பேசும்.

இந்த வசதியைப் பயன்படுத்துவது மிகவும் சுலபம். உங்கள் மொபைல் போனில் உள்ள கூகுள் ஜெமினி செயலியைத் திறந்து, அட் சிம்பல் போட்டு கால் ஃபார் மீ (“@Call for Me”) என்று டைப் செய்யவேண்டும்.

கூகுள் ஜெமினி ஏஐ
கூகுள் ஜெமினி ஏஐAI image

அதன்பிறகு, நீங்கள் யாருக்குப் போன் செய்ய வேண்டும், அவர்களிடம் என்ன பேச வேண்டும் என்ற விவரங்களை அதில் கொடுக்க வேண்டும்.

உதாரணமாக, நீங்கள் வேறொரு வேலையில் பிஸியாக இருக்கும்போது அல்லது ஒரு கடையில் ஏதேனும் விவரம் கேட்க போன் செய்யத் தயங்கும் போது, இந்த AI உதவியாளர் உங்களுக்குப் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.

உங்களுக்கு ஒரு கடையில் குறிப்பிட்ட பொருள் இருக்கிறதா என விசாரிக்க வேண்டும் அல்லது ஒரு ஹோட்டலில் டேபிள் புக் செய்யவேண்டும் என்றால், அதை ஜெமினியிடம் சொன்னால் போதும். அதுவே அந்த கடைக்கு போன் செய்யும்.

"ஒன்றை அழுத்தவும், இரண்டை அழுத்தவும்" (IVR) போன்ற கணினி குரல் வழிமுறைகளை ஜெமினியே தானாகவே புரிந்துகொண்டு இயக்கும்.

இதையும் படியுங்கள்:
எதிர்காலத்தில் AI குழந்தைகளுக்கு மருத்துவம் செய்யுமா? நாளைய குழந்தை மருத்துவத்தின் புதிய பாதை!
கூகுள் ஜெமினி ஏஐ

லைனில் மனிதர்கள் யாராவது வந்ததும், ஜெமினி தன்னை ஒரு AI உதவியாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, உங்களுக்குத் தேவையான விவரங்களை மிக இயல்பாகப் பேசி கேட்டுத் தெரிந்துகொள்ளும்.

அதற்கு முன்பாக, அது எந்த நம்பருக்குப் போன் செய்யப் போகிறது, அவர்களிடம் என்ன பேசப்போகிறது என்ற ஒரு சிறு சுருக்கத்தை உங்களுக்குத் திரையில் லைவ் டிரான்ஸ்கிரிப்ட் (Live Transcript) காட்டும். நீங்கள் அதைச் சரிபார்த்து ‘ஓகே’ சொன்னவுடனே, அந்த நம்பருக்குப் போன் செய்து, தான் ஒரு ஏ.ஐ (AI) என்பதை அவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு, நீங்கள் சொன்ன வேலையைக் கச்சிதமாக முடித்துவிட்டு உங்களுக்குத் தகவலைத் தெரிவிக்கும்.

ஜெமினி போனில் என்ன பேசுகிறது என்பதை உங்கள் மொபைல் திரையிலேயே எழுத்து வடிவில் (Text) நேரலையாகப் பார்க்க முடியும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் போனை ஜெமினியிடமிருந்து வாங்கி நேரடியாகப் பேசவும் முடியும்.

கூகுள் நிறுவனம் இந்த புதிய 'Call for Me' அம்சத்தை முதற்கட்டமாக அமெரிக்காவில் உள்ள கூகுள் பிக்சல் 11 (Google Pixel 11) ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பீட்டா (Beta) பதிப்பில் சோதனை முறையில் வழங்கத் தொடங்கியுள்ளது. ஜெமினி அட்வான்ஸ்டு சந்தா (Gemini Subscription) வைத்துள்ளவர்கள் மற்றும் கூகுள் போன் ஆப் பீட்டா திட்டத்தில் இருப்பவர்கள் இதை தற்போது பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
மனித சமுதாயத்திற்கு AI வரமா? சாபமா? டிரம்ப்பின் 'AI Force' திட்டத்திற்குபின்னால் இருக்கும் சவால்கள்!
கூகுள் ஜெமினி ஏஐ

விரைவில் இந்த அம்சம் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com