கூகுள் ட்ரெண்ட்ஸ்: இணைய உலகின் புரட்சிகர கருவி!

Google trends
Google trends
Published on

கூகுள் ட்ரெண்ட்ஸ் (Google Trends) என்றால் என்ன?

இது இணையத்தில் மக்கள் என்ன தேடுகிறார்கள் என்பதை அறிய உதவும் ஒரு இலவச கருவி. கூகுள் நிறுவனம் 2006-ல் இதை உருவாக்கியது. மக்கள் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை அல்லது தலைப்பை எவ்வளவு அடிக்கடி தேடுகிறார்கள் என்பதை இது புள்ளி விவரங்களாக காட்டும். இதை எல்லோரும் பயன்படுத்தலாம். மேலும் இதை பயன்படுத்தி பலரும் பயன் அடைகிறார்கள். இதை வைத்து பணம் சம்பாதிக்கவும் முடியும். எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.

கூகுள் ட்ரெண்ட்ஸ் எதற்காக உருவாக்கப்பட்டது?

கூகுள் ட்ரெண்ட்ஸ் உருவாக்கப்பட்ட முக்கிய காரணம், இணையத்தில் மக்களின் ஆர்வம் மற்றும் தேடல் பழக்கங்களை புரிந்து கொள்ள உதவுவது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் “தீபாவளி பட்டாசு” அல்லது “கிரிக்கெட் உலகக் கோப்பை” போன்ற தலைப்புகளை மக்கள் எவ்வளவு தேடுகிறார்கள் என்பதை அறியலாம். இது மக்களின் ஆர்வம் எதை நோக்கி செல்கிறது என்பதை புரிந்து கொள்ள உதவுகிறது. மேலும், ஒரு தலைப்பு எந்த நாட்டில், எந்த மொழியில், எந்த நேரத்தில் அதிகம் தேடப்படுகிறது என்பதையும் அறிய முடியும். இதை பயன்படுத்தி, வியாபாரிகள், ஆராய்ச்சியாளர்கள், மற்றும் சாதாரண மக்கள் பல வழிகளில் பயன் பெறலாம்.

இதனால் யார் யார் பயன் அடைகிறார்கள்?

வியாபாரிகள் மற்றும் நிறுவனங்கள்: ஒரு தயாரிப்பு அல்லது சேவையை விற்க விரும்புபவர்கள், மக்கள் எதை அதிகம் தேடுகிறார்கள் என்பதை அறிந்து, அதற்கேற்ப தங்கள் வியாபார உத்திகளை மாற்றலாம். உதாரணமாக, “கோடை ஆடைகள்” என்று மக்கள் அதிகம் தேடினால், ஆடை நிறுவனங்கள் அந்த பொருட்களை விளம்பரப்படுத்தலாம்.

பத்திரிக்கையாளர்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளர்கள்: செய்தியாளர்கள் மற்றும் யூடியூபர்கள் மக்கள் எதை பற்றி அதிகம் பேசுகிறார்கள் என்பதை அறிந்து, அந்த தலைப்பில் கட்டுரைகள் அல்லது வீடியோக்களை உருவாக்கலாம். இதனால் அவர்களுக்கு அதிக பார்வையாளர்கள் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
King of Spices: மசாலாக்களின் ராஜா - மிளகின் மருத்துவ பலன்கள்; பயன்படுத்தும் முறை
Google trends

மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள்: மாணவர்கள் ஒரு தலைப்பு பற்றி ஆராய்ச்சி செய்யும்போது, அது எவ்வளவு பிரபலமாக இருக்கிறது என்பதை அறியலாம். உதாரணமாக, “சூரிய சக்தி” பற்றி மக்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து, அதை பற்றி ஆய்வு செய்யலாம்.

பொது மக்கள்: சாதாரண மக்களும் இதை பயன்படுத்தி, தற்போது பிரபலமாக இருக்கும் விஷயங்களை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக, ஒரு புது திரைப்படம் வெளியாகும்போது, அதை பற்றி மக்கள் எவ்வளவு பேசுகிறார்கள் என்பதை அறியலாம்.

இதை வைத்து பணம் சம்பாதிப்பவர்கள் யார்?

கூகுள் ட்ரெண்ட்ஸ் இலவசமாக இருந்தாலும், இதை பயன்படுத்தி பலர் பணம் சம்பாதிக்கிறார்கள்:

வியாபாரிகள்: ஒரு பொருளை மக்கள் அதிகம் தேடினால், அந்த பொருளை விற்று லாபம் ஈட்டலாம். உதாரணமாக, (MASK) “முகமூடிகள்” என்று மக்கள் அதிகம் தேடினால், அந்த சமயத்தில் முகமூடிகளை விற்றுப் பணம் சம்பாதிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
நம்மை உயர்த்தி வாழ்வைச் சிறக்க வைக்கும் ஒழுக்கம்!
Google trends

SEO நிபுணர்கள்: இணையதளங்களை மேம்படுத்துபவர்கள், பிரபலமான தேடல் சொற்களை அறிந்து, அந்த இணையதளங்களை முதல் பக்கத்தில் கொண்டு வர உதவுகிறார்கள். இதற்காக அவர்கள் பணம் பெறுகிறார்கள்.

கூகுள் ட்ரெண்ட்ஸ் ஒரு அற்புதமான கருவி. இது மக்களின் ஆர்வத்தை அறிய உதவுவதோடு, வியாபாரம், ஆராய்ச்சி, மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் பயன்படுகிறது. இன்றைய இணைய உலகில், மக்கள் எதை பற்றி பேசுகிறார்கள் என்பதை அறிய விரும்பினால், கூகுள் ட்ரெண்ட்ஸ் ஒரு சிறந்த வழி. இதை பயன்படுத்தி நீங்களும் உங்கள் வியாபாரத்தை மேம்படுத்தலாம், அல்லது புதிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com