

இந்த ஆய்வு, விவசாயக் கழிவான பச்சை தேங்காய் நாரை குப்பையாக அல்லாமல் சுற்றுச்சூழல் நட்பு சுத்திகரிப்புப் பொருளாக மாற்றுகிறது. லிக்னினில் நைட்ரஜன், ஹைட்ரஜன் சேர்த்து அதன் பண்பை மாற்றி, 30°C வெப்பத்தில் சாயத்தை அதிகம் ஈர்க்கும் வகையில் வடிவமைத்துள்ளனர். குறைந்த செலவில் மாசுபட்ட நீரை சுத்தம் செய்யும் புதிய வழி இது.
Royal society of chemistry ஆராய்ச்சியின்படி எண்பது நிமிடத்தில் காங்கோ சிவப்புச் சாயம் பச்சைதேங்காய் நார் பயன்பாடு மூலம் நீக்கப்படும் என்பது சமீபத்தில் அறியப்பட்டுள்ளது. தேங்கய் நாரில் உள்ள லிக்னனோடு நைட்ரஜனைச் சேர்த்து இதன் மூலமாக சாயத்தை நீக்க முடிவதாக அறியப்பட்டுள்ளது.
சாயக்கழிவு நீக்கம்:
இதில் பச்சை தேங்காய் நார் பயன்படுத்தப்படுகிறது. இதில் லிக்னன் என்ற வேதிப்பொருள்உள்ளது. இது தாவர செல்களை ஒன்றிணைத்து தண்ணீரை சுத்தப் படுத்துகின்றன. இதற்கு coconut fibre alkali lignin என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
இந்த லிக்னனுடன் சில பொருட்களைச் சேர்த்து தண்ணீரில் இருக்கும் சாயத்தைப் போக்க பயன்படுத்துகிறார்கள். லிக்னனுடன் டைஎத்திலமின் ,ஃபார்மல் டீஹைடு மற்றும் அசிட்டிக் அமிலத்தைச் சேர்க்கிறார்கள். இதை 65டிகிரீ சென்டி க்ரேட் அளவு நான்கு மணிநேரம் சுடவைக்கிறார்கள்.
இந்த ப்ராசஸ் மூலம் அனிமேடட் லிக்கனின் உருவாகிறது. இதில் நைட்ரஜன் சேர்க்கப்படுகிறது. லிங்கனின் பண்பை மாற்றுவதன் மூலமும் நீரில் உள்ள சாயம் நீக்குவது அதிகமாகிறதா என்பதை கண்காணித்துள்ளார்கள். இந்த ஆராய்ச்சி காங்கோ சிவப்பு என்ற தொழிற்சாலைகளில் வேஸ்ட் தண்ணீரில் காணப்படும் சாயத்தை நீக்க உபயோகித்தால். இவைகளை சேர்த்த பிறகு தண்ணீரின் தன்மையை ஆராய்ந்தார்கள். இந்த coconut fibre alkali lignan தண்ணீரில் உள்ள சாயத்தை நீக்குவதில் சிறந்த பண்பை பெற்றிருப்பதை அறிந்துள்ளார்கள்.
இந்த ஆராய்ச்சியில் எண்பது நிமிடத்தில் 95.5 சதவீதம் காங்கோ சிவப்புச் சாயம் நீங்கியதை கண்டு பிடித்துள்ளார்க.ள் இந்த மாதிரி சேர்க்கும்போது இது சாயத்தை ஈர்ப்பதை அறிந்தார்கள்.
இதில் ஹைட்ரஜனும் சேர்ந்து சாயத்தை சுலபமாக நீக்குவதில் உதவி புரிவதாக அறியப்படுகிறது. எந்த அளவில் வெப்பத்தை பயன்படுத்துகிறோம் என்ற அளவு இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 30டிகிரீ வெப்பம் அளவு பயன்படுத்துவது சிறந்ததாக அறியப்படுகிறது.
இந்த ஆராய்ச்சி இரண்டு சுற்றுச் சூழல் பிரச்னைகளை கவனத்தில் கொண்டு வருகிறது. ஒன்று விவசாய வேஸ்ட் மற்றும் இன்னொன்று மாசுபட்ட தண்ணீர். பச்சை தேங்காய் நார்களை குப்பையில் போடாமல் அவற்றுடன் சில பொருட்கள் சேர்த்து மாசுபட்ட நீரை சுத்தம் செய்ய பயன்படுத்துகிறார்கள்.
இது எந்தவித கெமிகல் கலப்புகள் இல்லாமல் இருப்பதால் மாசுபட்ட நீரை சுத்தம் செய்ய ஏற்றதாக இது உள்ளது. இந்த முறையை பயன்படுத்தி அதிக அளவில் மாசு படிந்த நீரை சுத்தமாக ஆக்குவதற்கு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இதில் அதிக செலவு இல்லை என்பதும் தெரிகிறது.
பச்சை தேங்காய் நாரை வேஸ்ட் எனக்கருதாமல் அதில் உள்ள லிக்னினை பயன்படுத்தி மாசுபட்ட நீரை சுத்தம் செய்யமுடியும் என்பதை ஆராய்ச்சி உணர்த்தியுள்ளது.
அதுவும் எண்பது நிமிடத்தில் சாயக்கழிவு நிறைந்த காங்கோ சிவப்பு சாயத்தை 95.5 சதவீதம் நீக்க முடியும் என்று ஆராய்ச்சி மூலம் அறியப்பட்டது. மிகப் பயனுள்ள விவரமாகக் கருதப்படுகிறது. இனி விவசாயக் கழிவுகளை இப்படி பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச் சூழல் ஆரோக்கியமும் காக்கப்படும் என்பது ஆரோக்கியமான விஷயம்.
தொழிற்சாலை சாயக்கழிவுகளால் நிலத்தடி நீர் பாழாவதைத் தடுத்து, நமது ஊர் விவசாயக் கழிவான தேங்காய் நாரைக் கொண்டே மிகக் குறைந்த செலவில் நீரினை எவ்வாறு சுத்திகரிக்க முடியும் என்பதைப் பற்றிய முழுமையான விழிப்புணர்வையும், நடைமுறைச் சாத்தியக்கூறுகளையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.