
விஞ்ஞானி என்பது சும்மா அல்ல. பரிசோதனை செய்து மீண்டும் மீண்டும் ஆராய்ந்து புதிய பொருளை அல்லது புதிய விதியை கண்டுபிடித்து உலகிற்கு கொடுப்பது. விஞ்ஞானிகளுக்கு உலகம் ஆதரவு நல்க வேண்டும். நாம் இங்கே பார்க்க போவது ஒரு விஞ்ஞானி கிரிகோர் மெண்டல் பற்றி.
பட்டாணி செடிகளை வளர்த்து ஆராய்ச்சி செய்தார். இவர் டார்வினின் சமகாலத்தவர். மெண்டல் தனது ஆராய்ச்சி முடிவுகளை 1864- ல் கட்டுரையாக வடிவமைத்தார். டார்வினுக்கும் கொடுக்க பட்டது. டார்வின் படிக்க வில்லை.
இவர் மரபியல் ஆராய்ச்சி செய்து வந்தார். என்ன அதிசயம்..? அவர் பரம்பரை குணத்திற்கு காரணிகள் இருந்தன. செயற்கை மகரந்த சேர்க்கை மூலம்… மரபியல் காரணிகள் தாய் இடம் இருந்து ஒரு காரணியும் தந்தையிடமிருந்து ஒரு காரணியும் பெறப்படுகிறது.
அடுத்து காரணியை ஒன்று தாயிடம் இருந்தோ அல்லது தந்தை இடமிருந்தோ பெற்று கொள்கிறது என்று கண்டுபிடித்தார். அவர் காரணி என்று சொல்வது மரபணு அல்லது ஜீன் ஆகும்.
அவர் ஆராய்ச்சி முழுவதும் புள்ளியியல் இருந்தே கண்டு பிடித்தார். ஆனால் அன்று இருந்து உலகம், மற்றும் விஞ்ஞானிகள் அவரது ஆராய்ச்சியை கேலி செய்தனர். தாவரவியலில் கணிதமா…? என்று எள்ளி நகைத்தனர்.
மெண்டல் கண்டுபிடித்த விதிகளை யாரும் படித்து கூட பார்க்க வில்லை. ஒரு விஞ்ஞானிக்கு இதை விட கொடுமை இருக்காது. ஆம். கிரிகோர் மெண்டல் வாழ்க்கையை வெறுத்து துறவியாகவே சாகும் வரை இருந்தார். அவருக்கு ஒரே நிம்மதி அவரது பட்டாணி செடிகள் தான்.
19ம் நூற்றாண்டு முழுக்க முழுக்க அவரது ஆராய்ச்சியை புறகணித்தது. ஆனால் சரியாக 30, 35 ஆண்டுகளில்… அதாவது 20ம் நூற்றாண்டில் 3 விஞ்ஞானிகள் மெண்டல் விதிகளை உண்மை என்று நிரூபித்தார்கள்.
உலகம் செத்து போன விஞ்ஞானிக்கு… மரபியல் தந்தை..! ஃபாதர் ஆஃப் ஜெனட்டிக்ஸ்..! யாருக்கு வேணும் இந்த பட்டம்.
அவர் உயிரோடு இருக்கும் போது ஒருவரும் கண்டுகொள்ள வில்லை. டார்வினுக்கு மெண்டல் ஆய்வறிக்கை கிடைத்தும் படிக்க வில்லை. படித்து இருந்தால் இயற்கை தேர்வு என்பதில் மரபணு இருப்பதை உணர்ந்து இருப்பார்.
அவர் மரபியல் தந்தை என்று அழைப்பது 'கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்’ செய்வது போல. 20ம் நூற்றாண்டில் மரபியல் வெகு வேகமாக வளர்ந்தது. கரு அமிலம் (டி.என்.ஏ.) தான் ஜீன்ஸ். இதை தான் மெண்டல் காரணி (factor) என்றார்.
நமக்கு பெருமை பட ஒரு விஷயம் உள்ளது. தமிழின் மிக மிக பழமையான நூல் 'தொல்காப்பியம்'. இதில் தொல்காப்பியர் 'மரபு' என்ற சொல்லை அடிக்கடி உபயோகம் செய்து உள்ளார். பரம்பரை பரம்பரையாக வரும் சில விஷயங்களை சுட்டிக் காட்டி உள்ளார்.
உண்மையில் ஜீன் தான் ரோமத்தின் நிறம் மற்றும் கண்ணின் நிறம் ஆகியவற்றை செய்கிறது.
நோய் கூட பரம்பரை பரம்பரையாக வரும் என்பதே இன்று உலகம் ஏற்றுக் கொள்கிறது.
நான் மனம் இல்லாமல் முடிக்கிறேன்.
ஆம். கிரிகோர் மெண்டல் துரதிருஷ்ட்ட விஞ்ஞானி. ஆராய்ச்சி முடித்து 30 ஆண்டுகள் வாழ்ந்தார். மனசோர்வு மனநோயிக்கு ஆளாகி மிகுந்த மன வருத்ததுடன் துறவியாக வாழ்ந்து மரணம் எய்தினார்.
உண்மையில் அவருக்காக என் மனம் அழுகிறது.
ஆம். கிரிகோர் மெண்டல் இந்த உலகம் உள்ள வரை போற்றப்படுவார்…!
வாழ்க அவர் புகழ்...!!!