உங்கள் வாட்ஸ்அப் மெசேஜை யாராவது திருட முடியுமா? E2EE தொழில்நுட்பத்தின் உண்மை பின்னணி!

பில் ஜிம்மர்மேன் உருவாக்கிய PGP முதல் இன்றைய வாட்ஸ்அப் E2EE வரையிலான சுவாரஸ்ய வரலாறு.
இணைய பாதுகாப்பு - Cyber Security
இணைய பாதுகாப்பு - Cyber SecurityAI Image
Updated on

வாட்ஸ்அப், சிக்னல் போன்ற செயலிகளில் பயன் படுத்தப்படும் End-to-End Encryption (E2EE) தொழில்நுட்பம், நீங்கள் அனுப்பும் மெசேஜை பெறுபவர் மட்டுமே படிக்க முடியும் வகையில் பாதுகாக்கிறது. உங்கள் போனில் உள்ள Private Key மூலம் மெசேஜ் Ciphertext ஆக மாற்றப்பட்டு, பெறுபவரின் ரகசியச் சாவியால் மட்டுமே மீண்டும் இயல்பான உரையாக மாறுகிறது. இதனால் ISP, ஹேக்கர்கள், செயலி நிறுவனம் யாராலும் உள்ளடக்கத்தைப் படிக்க முடியாது.

வாட்ஸ் ஆப் போன்ற செயலியில் End-to-End Encryption என்கிற ஒரு வரி இருக்கும். கவனித்திருக்கலாம். அதன் அர்த்தம் என்னவென்று தெரியுமா?

End-to-End Encryption என்பது ஒரு பாதுகாப்பான தகவல் தொடர்பு தொழில் நுட்பமாகும். எளிமையாகச் சொன்னால், நீங்கள் அனுப்பும் செய்தியை, அதைப்பெறும் நபர் மட்டுமே படிக்க முடியும். இடையில் இருக்கும் எந்தவொரு இடைத்தரகரோ, இணைய நிறுவனமோ (ISP), ஹேக்கர்களோ அல்லது நீங்கள் பயன்படுத்தும் செயலியின் நிறுவனமே (எ.கா. WhatsApp, Signal) நினைத்தால் கூட அந்தச் செய்தியைப் படிக்க முடியாது.

இது எப்படி செயல்படுகிறது தெரியுமா?

நீங்கள் ஒரு செய்தியை அனுப்பும்போது, உங்கள் போனில் உள்ள பிரத்யேகக் குறியீடு (Private Key) மூலமாக அந்தச் செய்தி படிக்க முடியாத ரகசியக் குறியீடாக (Ciphertext) மாற்றப்படுகிறது.

அந்தச் செய்தி இணையம் வழியாகச் செல்லும்போது, ஒரு பூட்டப்பட்ட பெட்டி போலச் செல்லும். வழியில் யாராவது அதைத் திறக்க முயன்றாலும் அவர்களுக்குப் புரியாத எழுத்துகளாகவே இருக்கும்.

செய்தி பெறுபவரின் போனை அடைந்ததும், அவரது போனில் உள்ள ரகசியச் சாவி மூலம் அது மீண்டும் பழைய இயல்பான செய்தியாக மாற்றப்பட்டு அவருக்கு மட்டும் தெரியும்.

எதனால் இப்படி ஒரு செயல்பாடு உருவாக்கப் பட்டிருக்கிறது என்பதையும் அறிந்து கொள்வோம். உங்கள் தனிப்பட்ட உரையாடல்கள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் இணைய பாதுகாப்பு மூலம் மற்றவர்கள் கைக்குச் செல்வதைத் தடுக்கிறது.

இணைய பாதுகாப்பு - Cyber Security
இணைய பாதுகாப்பு - Cyber Security

ஹேக்கர்கள் வழியில் தரவை மறித்தாலும் (Data Interception), ரகசியச் சாவி இல்லாமல் அவர்களால் தகவலைப் படிக்க முடியாது.

சேவையை வழங்கும் நிறுவனங்களின் சர்வருக்குள் உங்கள் செய்தி சென்றாலும், அதை அந்த நிறுவனத்தின் ஊழியர்களோ அல்லது நிர்வாகமோ படிக்க முடியாது.

கடவுச்சொற்கள் (Passwords), வங்கி விவரங்கள் போன்ற உணர்வுப்பூர்வமான தகவல்களைப் பாதுகாப்பாகப் பரிமாற இது மிகவும் அவசியம். அதனால்தான் வாட்ஸ்அப் (WhatsApp), சிக்னல் (Signal), டெலிகிராமின் பிரத்யேக Secret Chat போன்ற செயலிகளில் இந்த End-to-End Encryption முறைதான் பயன்படுத்தப்படுகிறது.

End-to-End Encryption (E2EE) என்ற தொழில்நுட்பம் ஒரே இரவில் உருவாக்கப்பட்டது அல்ல. இதன் கோட்பாட்டு கணித அடிப்படை 1970-களில் அமைக்கப்பட்டாலும், இது மக்களின் பயன்பாட்டிற்கு 1991-ல் தான் கொண்டுவரப்பட்டது.

இதையும் படியுங்கள்:
QR Code செயல்படுவது எப்படி? அந்த சிறிய சதுரத்திற்குள் மறைந்துள்ள பிரம்மாண்ட தொழில்நுட்பம்!
இணைய பாதுகாப்பு - Cyber Security

அமெரிக்காவைச் சேர்ந்த கணினி விஞ்ஞானி பில் ஜிம்மர்மேன் (Phil Zimmermann) என்பவர் PGP (Pretty Good Privacy) என்ற மென்பொருளை உருவாக்கினார். மின்னஞ்சல்களுக்கு E2EE பாதுகாப்பை வழங்கிய முதல் நடைமுறை மென்பொருள் இதுவே ஆகும்.

1990-களின் தொடக்கத்தில் மனித உரிமை ஆர்வலர்களும், சாதாரண மக்களும் தங்களின் தனியுரிமையைப் பாதுகாக்கவும், அரசாங்கங்களின் தேவையற்ற கண்காணிப்பிலிருந்து தப்பித்துச் செய்திகளை அனுப்பவும் PGP மென்பொருளை இலவசமாக வெளியிட்டார்.

அக்காலத்தில் சக்திவாய்ந்த என்க்ரிப்ஷன் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்க அரசு தடை விதித்திருந்ததால், இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும், பின்னாளில் அக் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டு, இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பாதுகாப்பான தொலைத் தொடர்புக்கு வழிகோலியது.

இதையும் படியுங்கள்:
பட்டாம்பூச்சி ஆராய்ச்சி மூலம் சர்வதேச விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய சிறுவன்!
இணைய பாதுகாப்பு - Cyber Security

இணையப் பாதுகாப்பின் வரலாற்றுப் பின்னணியைப் புரிந்துகொள்வதன் மூலம், செயலிகளின் தனியுரிமை விதிகளைச் சரியாகக் கையாளும் தெளிவும் எச்சரிக்கை உணர்வும் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com