ஜாடி முதல் டியூப் வரை: விடிந்தால் தொடங்கும் விந்தையின் கதை!

toothpaste tube history
toothpaste tube history
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on: 

”சுத்தம் சோறு போடும், பல் சுத்தம் நோய் தீர்க்கும்” என்பது பழமொழி. இன்று நம் காலைப்பொழுது விடிந்ததும் நாம் முதலில் கையில் எடுக்கும் பொருள் டூத்பேஸ்ட் டியூப் ஆகும். இந்த ஒரு சிறிய வடிவமைப்பு, மனிதர்களின் ஆரோக்கியத்திலும் சுகாதாரத்திலும் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் நம்மால் நம்ப முடிகிறதா? ஒரு சுகாதாரமற்ற காலத்தை மாற்றி, இன்றைய நவீன டியூப் வடிவத்தைக் கொண்டு வந்த வரலாற்றைப்  இக்கட்டுரையில்  காண்போம்.

ஓவியர்களிடமிருந்து திருடப்பட்ட ஐடியா:  டாக்டர் வாஷிங்டன் ஷெஃபீல்டின் மகன் லூசியஸ், பாரிஸில் வேதியியல் படித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தெருக்களில் ஓவியர்கள் தங்களின் ஆயில் பெயிண்ட்டுகளை (Oil Paints) சிறிய ஈய (Lead) டியூப்களில் அடைத்து வைத்திருந்ததை கவனித்தார்.

தேவைப்படும்போது மட்டும் பெயிண்ட்டை பிதுக்கி எடுத்துவிட்டு, மீதியை அப்படியே மூடி வைக்க அந்த டியூப்கள் உதவின. “பெயிண்ட்டுக்கே இந்த வசதி இருக்கும்போது, நாம் ஏன் இதை டூத்பேஸ்ட்டிற்குப் பயன்படுத்தக் கூடாது?” என்று அவர் தன் தந்தையிடம் கூற, உருவானதுதான் நாம் இன்று பயன்படுத்தும் டூத்பேஸ்ட் டியூப்.

ஒரே ஜாடி, ஒட்டுமொத்த குடும்பம்: டியூப் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, டூத்பேஸ்ட்கள் சிறிய பீங்கான் அல்லது கண்ணாடி ஜாடிகளில்  தான் விற்கப்பட்டன. குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்களின் தனித்தனி பிரஷ்களை அந்த ஒரே ஜாடிக்குள் விட்டு பேஸ்ட்டைத் தொட்டு எடுப்பார்கள். ஒருவருக்குப் பல் சொத்தை அல்லது தொற்று நோய் இருந்தால், அது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிக எளிதாகப் பரவியது. இந்தச் சுகாதாரமற்ற முறையைக் கண்டு வெறுப்படைந்ததால்தான், ஒரு பல் மருத்துவரான ஷெஃபீல்ட் இதற்கு எப்படியாவது தீர்வு காணவேண்டும் என்று தீவிரமாக யோசித்தார்.

ஆரம்பத்தில் டூத்பேஸ்ட் எப்படி இருந்தது:  இன்று நாம் பயன்படுத்தும் பேஸ்ட் போன்ற வடிவம் வருவதற்கு முன்னால், பற்பொடி (Tooth powder) தான் உலகம் முழுவதும் பிரபலமாக இருந்தது. பழங்கால எகிப்தியர்கள், ரோமானியர்கள் மற்றும் கிரேக்கர்கள் தங்களின் பற்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்திய பொருட்கள் நமக்கு அதிர்ச்சியூட்டுபவை:

இதையும் படியுங்கள்:
காலி டூத் பேஸ்ட் மூடியை இனிமே கீழே எறியாதீர்கள்.. அடேங்கப்பா! இப்படியெல்லாம் யூஸ் பண்ணலாமா? 
toothpaste tube history

எகிப்தியர்கள்: எருதின் குளம்புகளை எரித்த சாம்பல் மைரா (Myrrh), முட்டை ஓட்டின் பொடி மற்றும் பியூமிஸ் கல் (Pumice) ஆகியவற்றை அரைகுறையாக அரைத்துப் பயன்படுத்தினர்.

ரோமானியர்கள்: பற்களை வெண்மையாக்க மனித சிறுநீரைப்  பயன்படுத்தினர்! (அதில் உள்ள அம்மோனியா பற்களைச் சுத்தப்படுத்த உதவியதாம்). மற்றொரு முறை: கருகிய ரொட்டித் துண்டுகள், உடைந்த செங்கல் பொடி, நிலக்கரி போன்றவையும் பற்களைத் தேய்க்கப் பயன்பட்டன.

கொல்கேட் (Colgate) செய்த தந்திரம்: டாக்டர் ஷெஃபீல்ட் 1892-ல் டூத்பேஸ்ட் டியூபை அறிமுகப்படுத்தினாலும், அதற்கு அவர் காப்புரிமை (Patent) பெறத் தவறிவிட்டார். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பிரபல “கொல்கேட்” நிறுவனம், 1896 ஆம் ஆண்டு டாக்டர் ஷெஃபீல்டின் அதே ஐடியாவை நகலெடுத்து, ‘மடிக்கக்கூடிய டியூப்களில்’ டூத்பேஸ்ட்டை   உலகளவில் பெரிய அளவில் சந்தைப்படுத்தியது. இதனால் பலரும் கொல்கேட்தான் இதை முதலில் கண்டுபிடித்தது என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகப்போரும் பிளாஸ்டிக் டியூப்களும்: ஆரம்பகால டூத்பேஸ்ட் டியூப்கள் ஈயம்  மற்றும் தகரத்தால்  செய்யப்பட்டன. ஆனால், இரண்டாம் உலகப் போரின்போது உலகளவில் உலோகங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. குறிப்பாக ராணுவத் தேவைகளுக்கு உலோகம் அதிகம் தேவைப்பட்டதால், டூத்பேஸ்ட் நிறுவனங்கள் உலோகத்திற்குப் பதிலாக பிளாஸ்டிக் மற்றும் அலுமினியம் கலந்த டியூப்களைத் தயாரிக்கத் தொடங்கின. அதுவே மருந்து மாத்திரைகளுக்கான டியூப்கள் உருவாக்கத்திற்கும் வழிகோலியது.

இதையும் படியுங்கள்:
பூமியை 1.5 அடி உயரத்துக்கு மூடும் அளவுக்கு தங்கம்... எங்கே இருக்குனு தெரிஞ்சா உடனே கிளம்பிடுவீங்க!
toothpaste tube history

வணிக ரீதியாக இதன் முழுப் பலனை கொல்கேட் நிறுவனம் அடைந்திருந்தாலும், மனித குலத்திற்குப் பயனுள்ள ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்திய பெருமை ஷெஃபீல்டையே சாரும். நாம் தினமும் காலையில் பேஸ்ட்டைப் பிதுக்கும் அந்த ஒரு நொடி, நூறு ஆண்டுகால மனித உழைப்பின் மற்றும் மாற்றுச் சிந்தனையின் விளைவு என்பதை மறுப்பதற்கில்லை.

logo
Kalki Online
kalkionline.com