ஷாக் அடித்தால் மனிதர்கள் தூக்கி வீசப்படுவதற்கான காரணம்... இந்த பகீர் உண்மையை தெரிஞ்சிக்கோங்க!

electric-shocks-affect-human
electric-shocks-affect-human
Updated on

சினிமாக்களில் ஹீரோவுக்கோ அல்லது வில்லனுக்கோ கரண்ட் ஷாக் அடித்தால் அவர்கள் பல அடி தூரத்திற்குப் பறந்து போய் விழுவதை நாம் பார்த்திருப்போம். நிஜ வாழ்க்கையிலும் மின்சாரம் தாக்கும் போது பலருக்கு இப்படி ஒரு கொடூரமான அனுபவம் நடப்பதுண்டு. அதைப் பார்க்கும் போது மின்சாரம் தான் அவர்களைப் பிடித்து முரட்டுத்தனமாக வெளியே தள்ளுகிறது என நாம் நினைத்துக்கொள்கிறோம். 

ஆனால் நிஜம் அதுவல்ல. அந்த சமயத்தில் நமது உடலுக்குள் நடக்கும் அறிவியல் மாற்றங்கள் ஆச்சரியமானவை. இந்த திகிலான அறிவியல் உண்மைகளைக் கொஞ்சம் சுவாரஸ்யமாகப் பார்க்கலாம்.

நரம்புகள் Vs மின்சாரம்!

அடிப்படையில் மனித உடல் என்பதே ஒரு பயங்கரமான எலக்ட்ரிக் மெஷின் தான். நமது மூளை ஒரு பாஸ் போலச் செயல்பட்டு மிகச் சிறிய அளவிலான மின் சிக்னல்களை நரம்புகள் வழியாக உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பி வேலை வாங்குகிறது. 

நாம் கையை நீட்டுவது, நடப்பது, உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என எல்லாமே இந்த குட்டி கரண்ட் சிக்னல் மூலமாகத் தான் நடக்கிறது. எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு பெரிய ஹை வோல்டேஜ் கரண்ட் நமது உடலுக்குள் புகுந்தால் என்ன நடக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

தசைச் சுருக்கம்!

வெளியில் இருந்து வரும் அந்தப் பெரிய மின்சாரம் உடலுக்குள் நுழைந்தவுடன் நமது நரம்பு மண்டலம் மொத்தமாக ஸ்தம்பித்து விடுகிறது. மூளையிலிருந்து வரும் சிக்னல்களுக்காகக் காத்திருக்காமல், அந்த அதிகப்படியான வெளிப்புற கரண்ட்டுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நமது தசைகள் அனைத்தும் உடனடியாகத் தங்கள் கட்டுப்பாட்டை இழக்கின்றன. இதனால் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் உடலின் ஒட்டுமொத்த தசைகளும் அதிவேகமாகச் சுருங்கி விரியத் தொடங்குகின்றன.

தூக்கி வீசப்படுவதன் ரகசியம்!

பொதுவாக நமது கைகளை மூடினால் தசைகள் லேசாகச் சுருங்கும். ஆனால் மின்சாரம் தாக்கும் போது உடலின் ஆயிரக்கணக்கான தசை நார்கள் ஒரே நேரத்தில் தங்கள் முழு பலத்தையும் திரட்டி வெறித்தனமாகச் சுருங்கும். இந்த அதீத சுருக்கத்தால் ஏற்படும் பிரம்மாண்டமான விசைதான் நம்மைப் பலமாகப் பின்னோக்கித் தள்ளுகிறது.

இதையும் படியுங்கள்:
கரண்ட் பில் கவலையை விடுங்கள்… குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட் ஃபேன்கள்!
electric-shocks-affect-human

அதாவது உங்களை கரண்ட் தூக்கி எறியவில்லை, உங்களுடைய சொந்த தசைகள் தான் உங்களை அப்படி முரட்டுத்தனமாகத் தள்ளி விடுகின்றன. இது எலும்புகள் மற்றும் மூட்டுகளின் வலிமையைத் தாண்டிச் செயல்படும் ஒரு முரட்டு விசை.

கையை எடுக்க முடியாத நிலை!

இன்னொரு பக்கம் சிலருக்கு ஷாக் அடிக்கும் போது கையை எடுக்கவே முடியாது. வயரோடு அப்படியே ஒட்டிக்கொள்வார்கள். இதை மருத்துவ உலகில் டெட்டானிக் மஸ்குலர் கான்ட்ராக்ஷன் (Tetanic Muscle Contraction) என்று சொல்வார்கள். அந்த நேரத்தில் மூளை 'கையை எடு' என சிக்னல் அனுப்பினாலும், அதைத் தாண்டி வெளிப்புற கரண்டின் ஆதிக்கம் மிக அதிகமாக இருப்பதால் தசைகளால் கையைத் தளர்த்தவே முடியாது. 

அதோடு நமது உடலில் உள்ள ரத்தமும் தண்ணீரும் மிகச் சிறந்த மின் கடத்திகள் என்பதால், உடலில் ஈரப்பதம் இருக்கும்போது கரண்ட் உடலுக்குள் மிக வேகமாகப் புகுந்து விளையாடி விடுகிறது.

இதையும் படியுங்கள்:
பகீர் தகவல்: சொந்த உடலே கல்லீரலை அழிக்குமா? A, B குரூப் காரர்களே...ஜாக்கிரதை!
electric-shocks-affect-human

நமது உடலே ஒரு அற்புதமான மின்சாரக் கருவியாக இருப்பதால் தான், வெளியில் இருந்து வரும் கரண்ட் இவ்வளவு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இனிமேல் எலக்ட்ரிக் வயர்கள் அல்லது சுவிட்ச் போர்டுகளைக் கையாளும் போது மிகவும் கவனமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். எப்போதுமே மின்சாரத்தை மிகவும் கவனமாகக் கையாளுவதே நமக்கும் நமது குடும்பத்திற்கும் பாதுகாப்பானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com